Knowledge is good only if it is shared.

Wednesday, August 8, 2018

அநாகரிக அரசியலின் பிதாமகன்...

                தமிழக அரசியலில் அருவெருக்கத்தக்க அரசியலைப் பின்பற்றியவர் கருணாநிதி. ஒருவர் இறக்கும் போதும் அவரைப் பற்றி தவறாகச் சொல்வது சரியா எனக் கேள்வி எழலாம். இறப்பதாலேயே ஒருவர் புனிதராகிவிடுவதில்லை. கருணாநிதி பற்றிய புகழ்ச்சி மாலைகளெல்லாம் இனிவரும் தினங்களில் தினசரிகளிலும், வார, மாத இதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் வியந்தோம்பப்படும். தமிழக அரசியலில் அநாகரீக அரசியலைக் கையாண்ட ஒரே அரசியல்வாதி கருணாநிதியே.  பெண்களை மிகக்கீழ்த்தரமாக விமர்சித்தவரும் இவரே.

திமுகவினரின் தற்போதைய புளுகு "தொடர்ந்து 13 வெற்றியைக் கண்டவர் கருணாநிதி". 1984 தேர்தலில் கருணாநிதி வென்றாரா அல்லது எம்.ஜி.ஆர் அலையில் காணாமல் போனாரா? 

 * மாணவர்கள் அனைவருக்கும் கல்வி கொடுக்க வேண்டும் என இராஜாஜி நினைத்தார். அதே சமயம் இருக்கிற பள்ளிக்கூடங்களில் அதிக அளவிற்கு மாணவர்களைச் சேர்க்கும் வசதிகள் இல்லை. எனவே காலை ஒரு ஷிப்ட் மதியம் ஒரு ஷிப்ட் என நடத்தினால் இருக்கிற பல்ளிக்கூடத்திலேயே அதிக மாணவர்களுக்கு கல்வி கொடுக்கலாம் என்றபோது, சரி காலையில் பள்ளிக்கு வந்து மதியம் திரும்பிச் செல்லும் மாணவன் என்ன செய்வான் எனப் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, "வீட்டில் பெற்றோர்களுக்கு உதவியாய் இருப்பான்" என இராஜாஜி பதில் சொன்னார். இதையே கருணாநிதி குலக்கல்வித் திட்டத்தினை இராஜாஜி கொண்டுவருகிறார் என அண்டப்புளுகு ஆகாசப் புளுகு புளுகி ஒட்டு மொத்த தமிழகத்தினையும் நம்ப வைத்தார்.

* ரஷ்ய நாட்டிற்கு காமராஜர் சென்ற போது "இந்தியாவிலிருந்து எருமைத்தோலைத்தான் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்கிறார்கள் இப்போது எருமையையும் ஏற்றுமதி செய்கிறார்கள்" என காமராஜரை வசை பாடினார்.

* காமராஜரை அண்டங்காக்கா, காண்டாமிருகத் தோலர், மரமேறி, பனையேறி, எருமைத் தோலர், கட்டபீடி, ...  என கருணாநிதி கூறினார்.

நாகர்கோவிலில் கருணாநிதி பிரச்சாரம் செய்த போது ‘விருதுநகரில் விலைபோகாத மாடு வடசேரி சந்தைக்கு (நாகர்கோவில் சந்தை) வந்திருக்கிறது' என காமராஜரைக் கிண்டலடித்தார். மேலும் காமராஜரை எதிர்த்து நின்றவர் கிறுத்துவர், "ஒருவர் சிவனை வணங்குகிறவர். மற்றொருவர் சிலுவையை வணங்குகிறவர்." என மதரீதியாக பிரிவினையத் தூண்டினார் கருணாநிதி.

* இந்திராகாந்தி மதுரையில் தாக்கப்பட்டு இரத்தம் வழிந்த போது "பெண்கள் என்றால் இரத்தம் வருவது சகஜம்தானே" என ஆபாசமாகப் பேசினார்.

* இந்திராவின் கணவர் இறந்தபோது  விதவைகள் பென்சன் வேண்டுமெனில் விண்ணப்பித்தால் தாம் பரிசீலிப்பதாகக் கூறினார். 

* கனிமொழியும் நீரா ராடியாவும் பேசிய உரையாடலைப் பற்றி செய்தியாளர்கள் கேள்விகேட்டபோது இரு பெண்கள் பேசிக்கொள்வதில் உங்களுக்கு என்ன அக்கறை என்றார். இரு பெண்கள் எப்படி சமையல் செய்வது என்று பேசவில்லை?. நாட்டின் இறையண்மையை கேலிக்கூத்தாக்கினர் என்பதெல்லாம் அவருக்கு பொருட்டல்ல. 

செய்யும் தவறினைச் சுட்டிக்காட்டினால் தாழ்த்தப்பட்டவன் என்ற  போர்வைக்குள் ஒழிவது, ஜெயலலிதா மற்றும் சோபன்பாபுவின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்தது, இந்து துவேசம், கண்மூடித்தனமான பிராமண எதிர்ப்பு, ஈழத் தமிழர்களை காவு கொடுத்து மத்திய அரசில் அங்கம் வகித்தது, எந்தப் பொறுப்பிலும் இல்லாத தயாநிதி மாறனை தொலைத்தொடர்பு மந்திரியாக்கியது என பட்டியல் மிகப் பெரியது.

தமிழகத்தின் நலனுக்காக பாடுபட்டவர்கள்  ராஜாஜி,  காமராஜ், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருடன், கருணாநிதியும் உண்டு. சிக்கல் என்னவெனில் பெரியார், அண்ணா, கருணாநிதியைத் தவிர வேறுயாரும் தமிழகத்திற்காகப் பாடுபட்டதில்லை என்பதைப் போல வரலாற்றை திரிப்பார்கள் திமுகவினர் இனிவரும் காலங்களில்.

No comments:

திரிபுவாதம்

     முதலில்  விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் " தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...