Knowledge is good only if it is shared.

Wednesday, August 29, 2018

கள்ளியின் ஓங்காரம்

இலக்கிய உலகிற்கு போதாத காலம் இது. வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் 23 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது. திரைப்படப் பாடலாசிரியராகிய இவரை கவிஞர் என நம்ப வைத்தாகிவிட்டது. அடுத்து இலக்கியவாதியாகவும் பாதி நம்ப வைத்தாகிவிட்டது. தமிழ் மொழியின் இலக்கியவாதிகள் என யோசித்தால் உடனடியாகத் தோன்றும் பெயர்கள் கீழே...

1. சுந்தர ராமசாமி 
2. தி.ஜானகிராமன் 
3. புதுமைப் பித்தன்
4. கி.ராஜநாராயணன்
5. ஜெயமோகன் 
6. நாஞ்சில் நாடன்
7. எஸ். ராமகிருஷ்ணன்
8. விமலாதித்த மாமல்லன்
9. மனுஷ்ய புத்திரன்
10. அசோகமித்ரன்
11. பிரமிள் 
12. விக்கிரமாதித்யன் 
13. ஆ. மாதவன் 
14. தோப்பில் முஹம்மது மீரான்
15. ஜி. நாகராஜன்
16. சி.சு. செல்லப்பா
17. வண்ணநிலவன்
18. க. நா. சுப்ரமண்யம் 
20. மெளனி
21. கு. ப. ராஜகோபாலன்
...
இன்னும் கொஞ்சம் தம் கட்டி யோசித்தால் மேலும் சில பெயர்கள் தோன்றும். தலைகீழாய் நின்றாலும் வைரமுத்துவின் பெயரை இதில் சேர்க்க முடியாது. கள்ளிக்காட்டு இதிகாசம் ஆனந்தவிகடனின் வீச்சினாலும் வைரமுத்துவின் சினிமாச் செல்வாக்கினாலுமே பரவலானது. படைப்பாளி, படைப்பின் தாக்கம் வாசகன் மனதில் எப்படி வெளிப்படவேண்டும் என  வரிக்குவரி ஓலமிட்டு அழுத காவியம்தான் கருவாச்சி காவியம். சுருங்கச்சொன்னால் எழுத்தாளனின் பேரழுகையே கருவாச்சி காவியம். அரசியல் லாபியினால் சாகித்ய அகடமி விருது கிடைத்தது. இன்று பிற மொழிகளுக்கு மொழி பெயர்ப்பதன் மூலம் தமிழின் இலக்கிய முகமாக பிற மொழியினர் இதையே நினைப்பர். வண்ணநிலவனின் ஏதாவது ஒரு கதையின் ஒற்றை வரிக்கு ஈடாகுமா இவரின் புலம்பல் குப்பைகள். வைரமுத்துவின் பாடல்வரிகள் பிரமிளின் சொல் வீச்சின் முன் எம்மாத்திரம். மனுஷ்யபுத்திரனின் மொழிச் செழுமைக்கும், வார்த்தை வீச்சுக்கும் ஒருகாலும் ஈடாகாது வரைமுத்துவின் குப்பைகள். வைரமுத்து மிகச் சிறந்த திரைப்பட பாடலாசிரியர் என்பதில் ஐயமில்லை. அதனாலேயே அவர் கவிஞருமல்லர், இலக்கியவாதியுமல்லர். 

Tuesday, August 21, 2018

நீங்கள் அறிவாளியா?

                              யற்கைப் பேரிடர்கள் நிகழும்போதெல்லாம் தவறாமல் இயற்கையைச் சூறையாடுவதைப்பற்றி பேசுகிறோம். பெரும்பாலான பேச்சுகள் கீழ்க்கண்டவாறே இருக்கும்.

* ஆற்றில் மணல் அள்ளுகிறார்கள், அதனால் நிலத்தடி நீர் அதலபாதாளம் சென்றுவிட்டது.

* காடுகளில் மரங்களை வெட்டுவதால் மழைவளம் இல்லை.

* அதிக அளவு ஆற்று நீரை குளிபான நிறுவனங்கள் உறிஞ்சுகின்றன.

* மலைகள் கல்குவாரிகளால் தகர்க்கப்படுகின்றன.

* கழிவு நீர் ஓடைகள் ஆற்றில் கலக்கப்படுகின்றன.

* காடுகளில் யானை வழித்தடங்களை மறித்து உல்லாச விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.

 இப்படியாக பல....

ஒருவேளை நீங்களும் இம்மாதிரி சொல்லியிருக்கக்கூடும். நிற்க, சொன்னவை எல்லாமே சரிதான். ஆனால்,

*ஆற்றில் அள்ளப்படும் மணல் எங்கு செல்கிறது?

* காடுகளில் வெட்டப்படும் மரங்கள் எங்கு செல்கிறது?

* தயாரிக்கப்படும் குளிர்பானங்களின் நுகர்வோர்கள் யார்?

* கல்குவாரிகளில் உருவாக்கப்படும் ஜல்லிகளும் எம் சாண்டுகளும் யாரிடம் செல்கின்றன?

* கழிவு நீரில் எங்கிருந்து கிளம்பி ஆற்றில் கலக்கிறது?

* யாருக்காக காடுகளில் யானை வழித்தடங்களை மறித்து உல்லாச விடுதிகள் கட்டப்படுகின்றன?சுற்றி வளைப்பானேன்..

* நீங்கள் வசிக்கும் வீட்டின் கதவு, நிலை ஜன்னல்கள் எந்தக் காட்டின் மரம்?

*நீங்கள் வசிக்கும் வீட்டின் கட்டுமானப் பெருட்கள் எந்த மலையில் உடைத்த ஜல்லி, எந்த ஆற்றில் அள்ளிய மணல்?

* நீங்கள் குடிக்கும் குளிர்பானம்  எந்த ஆற்று நீர்?

* உடுத்தும் உடைகள், பயன்படுத்தும் பொருட்களைத் தயாரிந்த நிறுவனக்களின் கழிவு நீர் எங்கே செல்கிறது?

* காடுகளில் யானை வழித்தடங்களை மறித்துக் கட்டப்பட்ட உல்லாச விடுதியில் கும்மாளமடிப்பதும் நாம்தான்.


ஓரளவு நெருங்கிவிட்டோம் அல்லவா?

ஆக, அனைத்து சுற்றுச்சூழல் சீரழிவும் நமக்காகவே செய்யப்படுகிறது. வசதியாக அதையெல்லாம் மறந்துவிட்டு வாய்கிழிய நியாயம் பேசுகிறோம். இயற்கையைச் சீரழித்தே நாம் ஒவ்வொரு பொருட்களையும் பெறுகிறோம். எனவே அடுத்தவரைக் குற்றம் சொல்வதைவிட நம்மையே குற்றம் சொல்ல வேண்டும்.
Sunday, August 19, 2018

முன் தீர்ப்பு

கருத்துரிமை எனும் பேரிலே

தெய்வத்தினை நிந்திப்பானென்றே

அவன் தெய்வம் அதனதன் வழியிலே

பிறக்கும்போதே அங்கஹீனனாக்கியது.


Wednesday, August 8, 2018

அநாகரிக அரசியலின் பிதாமகன்...

                தமிழக அரசியலில் அருவெருக்கத்தக்க அரசியலைப் பின்பற்றியவர் கருணாநிதி. ஒருவர் இறக்கும் போதும் அவரைப் பற்றி தவறாகச் சொல்வது சரியா எனக் கேள்வி எழலாம். இறப்பதாலேயே ஒருவர் புனிதராகிவிடுவதில்லை. கருணாநிதி பற்றிய புகழ்ச்சி மாலைகளெல்லாம் இனிவரும் தினங்களில் தினசரிகளிலும், வார, மாத இதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் வியந்தோம்பப்படும். தமிழக அரசியலில் அநாகரீக அரசியலைக் கையாண்ட ஒரே அரசியல்வாதி கருணாநிதியே.  பெண்களை மிகக்கீழ்த்தரமாக விமர்சித்தவரும் இவரே.

திமுகவினரின் தற்போதைய புளுகு "தொடர்ந்து 13 வெற்றியைக் கண்டவர் கருணாநிதி". 1984 தேர்தலில் கருணாநிதி வென்றாரா அல்லது எம்.ஜி.ஆர் அலையில் காணாமல் போனாரா? 

 * மாணவர்கள் அனைவருக்கும் கல்வி கொடுக்க வேண்டும் என இராஜாஜி நினைத்தார். அதே சமயம் இருக்கிற பள்ளிக்கூடங்களில் அதிக அளவிற்கு மாணவர்களைச் சேர்க்கும் வசதிகள் இல்லை. எனவே காலை ஒரு ஷிப்ட் மதியம் ஒரு ஷிப்ட் என நடத்தினால் இருக்கிற பல்ளிக்கூடத்திலேயே அதிக மாணவர்களுக்கு கல்வி கொடுக்கலாம் என்றபோது, சரி காலையில் பள்ளிக்கு வந்து மதியம் திரும்பிச் செல்லும் மாணவன் என்ன செய்வான் எனப் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, "வீட்டில் பெற்றோர்களுக்கு உதவியாய் இருப்பான்" என இராஜாஜி பதில் சொன்னார். இதையே கருணாநிதி குலக்கல்வித் திட்டத்தினை இராஜாஜி கொண்டுவருகிறார் என அண்டப்புளுகு ஆகாசப் புளுகு புளுகி ஒட்டு மொத்த தமிழகத்தினையும் நம்ப வைத்தார்.

* ரஷ்ய நாட்டிற்கு காமராஜர் சென்ற போது "இந்தியாவிலிருந்து எருமைத்தோலைத்தான் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்கிறார்கள் இப்போது எருமையையும் ஏற்றுமதி செய்கிறார்கள்" என காமராஜரை வசை பாடினார்.

* காமராஜரை அண்டங்காக்கா, காண்டாமிருகத் தோலர், மரமேறி, பனையேறி, எருமைத் தோலர், கட்டபீடி, ...  என கருணாநிதி கூறினார்.

நாகர்கோவிலில் கருணாநிதி பிரச்சாரம் செய்த போது ‘விருதுநகரில் விலைபோகாத மாடு வடசேரி சந்தைக்கு (நாகர்கோவில் சந்தை) வந்திருக்கிறது' என காமராஜரைக் கிண்டலடித்தார். மேலும் காமராஜரை எதிர்த்து நின்றவர் கிறுத்துவர், "ஒருவர் சிவனை வணங்குகிறவர். மற்றொருவர் சிலுவையை வணங்குகிறவர்." என மதரீதியாக பிரிவினையத் தூண்டினார் கருணாநிதி.

* இந்திராகாந்தி மதுரையில் தாக்கப்பட்டு இரத்தம் வழிந்த போது "பெண்கள் என்றால் இரத்தம் வருவது சகஜம்தானே" என ஆபாசமாகப் பேசினார்.

* இந்திராவின் கணவர் இறந்தபோது  விதவைகள் பென்சன் வேண்டுமெனில் விண்ணப்பித்தால் தாம் பரிசீலிப்பதாகக் கூறினார். 

* கனிமொழியும் நீரா ராடியாவும் பேசிய உரையாடலைப் பற்றி செய்தியாளர்கள் கேள்விகேட்டபோது இரு பெண்கள் பேசிக்கொள்வதில் உங்களுக்கு என்ன அக்கறை என்றார். இரு பெண்கள் எப்படி சமையல் செய்வது என்று பேசவில்லை?. நாட்டின் இறையண்மையை கேலிக்கூத்தாக்கினர் என்பதெல்லாம் அவருக்கு பொருட்டல்ல. 

செய்யும் தவறினைச் சுட்டிக்காட்டினால் தாழ்த்தப்பட்டவன் என்ற  போர்வைக்குள் ஒழிவது, ஜெயலலிதா மற்றும் சோபன்பாபுவின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்தது, இந்து துவேசம், கண்மூடித்தனமான பிராமண எதிர்ப்பு, ஈழத் தமிழர்களை காவு கொடுத்து மத்திய அரசில் அங்கம் வகித்தது, எந்தப் பொறுப்பிலும் இல்லாத தயாநிதி மாறனை தொலைத்தொடர்பு மந்திரியாக்கியது என பட்டியல் மிகப் பெரியது.

தமிழகத்தின் நலனுக்காக பாடுபட்டவர்கள்  ராஜாஜி,  காமராஜ், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருடன், கருணாநிதியும் உண்டு. சிக்கல் என்னவெனில் பெரியார், அண்ணா, கருணாநிதியைத் தவிர வேறுயாரும் தமிழகத்திற்காகப் பாடுபட்டதில்லை என்பதைப் போல வரலாற்றை திரிப்பார்கள் திமுகவினர் இனிவரும் காலங்களில்.

Wednesday, August 1, 2018

கள்ளக்குடியேறிகள்

               ம்தா பானர்ஜியின் முக்கிய வாக்குவங்கி இஸ்லாமியர்கள். இந்து விரோதப் போக்கினைக் கடைபிடிப்பது மட்டுமல்லாது இஸ்லாமியர்களுக்கு வெண்சாமரம் வீசுவதில் கில்லாடி. வங்கதேசம் உலகிலேயே அதிக மக்கள் நெருக்கடி கொண்ட நாடு. இஸ்லாமிய மதத்தினர் கருக்கலைப்பு செய்வதையும் கருத்தடை சாதனங்கள் உபயோகிப்பதையும் ஹராம் எனக் கருதியதால் ஒவ்வொரு வீட்டிலும் 7 அல்லது 8 குழந்தைகளை சர்வசாதாரணமாகப் பார்க்க முடியும் . 11 , 12 குழந்தைகள் கொண்ட குடும்பமும் உண்டு. நான் சொல்வதெல்லாம் 80களில் இப்போதும் நிலைமை ஒன்றும் மோசமாகிவிடவிலை. 5, 6 குழந்தைகளெல்லாம் சர்வசாதாரணம். படித்த குடும்பத்தினர் மூன்றோடு நிறுத்திக் கொள்கின்றனர். 1,47, 500 சதுர கிலோமீட்டர் கொண்ட நாட்டில் கிட்டத்தட்ட 16 கோடி மக்கள் வசிக்கின்றனர். 20X20 இடத்தில் ஐந்து புறமும் தகரத்தால் கூடிய ஷெட் அமைத்து குடும்பம் நடத்துகின்றனர். நாமாஸ் செய்வதை முதன்மைத் தொழிலாகவும் பிள்ளை பெறுவதை உபத் தொழிலாகவும் கொண்டவர்கள் போலத் தோன்றும்.


                  உலகின் எங்கு சென்றாலும் மலையாளியைக் காணலாம் என்பார்கள். இது உண்மையோ பொய்யோ ஆனால் பங்களாதேசிகள் இல்லாத நாடே கிடையாது. முதலாம் உலக நாடுகளின் துப்புரவுத் தொழிலாளர்களாக இருப்பவர்களில் பெரும்பாலோனோர் பங்களாதேசிகளே. சிட்டகாங் நகரத்தில் பிறந்த பங்களாதேசி ஒருவர் 15 வருடத்திற்கும் மேலாக என்ணுடன் நட்பில் இருக்கிறார். அவர்களைப் பொறுத்தவரை இந்தியா பெரிய அண்ணன். சர்வ உரிமையுடன் இந்தியாவிற்கு வருவதும் போவதும் அவர்களின் உரிமை என நினைக்கின்றனர். அவ்வாறு சட்ட விரோதமாய் வந்தவர்கள் அஸாமில் குடியேறி உள்ளூர் மக்களை அடித்து விரட்டிய நிகழ்வும் உண்டு. இருக்க இடம் கொடுத்தவர்களின் மடத்தை ஆட்டையைப் போட்ட வரலாறு அது. சிக்கல் என்னவெனில் வந்தவர்களில் பெரும்பாலோனர் இஸ்லாமியர்கள். பங்களாதேசில் இந்துப் பெண்களை கற்பழிப்பது இந்துக் கோவில்களை அடித்து நொறுக்குவது என இந்துக்களின் மீதான ஏளனப்பார்வை பங்களாதேஷ் இஸ்லாமியகளின் மரபணுவில் ஊறியது. இதற்கு வாகாய் அமைந்தது மம்தா பானர்ஜியின் இந்து விரோதப் போக்கு.

உலகம் முழுவதிலும் சட்டவிரோதக் குடியேறிகளுக்கு (Illegal immigrants) எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுகப்படுகின்றன. டொனால்ட் டிரம்ப் மெக்ஸிகோவாசிகள் சட்ட விரோதமாக குடியேறுவதைத் தடுப்பதற்காகத்தான் எல்லையில் சுவர் கட்ட வேண்டும் என்கிறார். சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் சுற்றுலாவாசிகளாக வருபவர்களைக் கூட இரண்டு வார விசாவிலேயே அனுமதிக்கின்றனர்.   சட்டவிரோதக் குடியேறிகளால் ஒரு நாடு மிகவும் பாதிப்படையும். அதன் வளங்கள் சட்டவிரோதக் குடியேறிகளால் வீணடிக்கப்படும். எனவே சட்டவிரோதக் குடியேறிகளைத் தடுப்பது மிகவும் அவசியம். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட அதன் விளைவாய் தற்போது இந்தியக் குடிமக்களை அடையாளம் கண்டு அவர்கள் தவிர்த்த பிறரை நாட்டை விட்டு வெளியேற்றும் வகையில் National Register of Citizens (NRC) வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாய் தொடரப்பட்ட வழக்கு விபரம் இதோ: https://www.scribd.com/document/224800316/Landmark-Supreme-Court-Judgement-on-Illegal-Bangladeshi-Migrants

ஏற்கனவே ரோஹிஞ்ஞா எனும் பெயரில் மியான்மரில் கள்ளக்குடியேறிகளான பங்களாதேசிகள் அங்குள்ள இந்துக்களையும், பெளத்தர்களையும் வன்முறைக்குள்ளாக்குவது அடிக்கடி நடக்கிறது.
பங்களாதேசிலுள்ள இந்துக்களின் மக்கட்தொகை வீழ்ச்சி 33 சதவீதத்திலிருந்து 8.5% ஆகிவிட்டது. இம்மாதிரி வெளியேற்றுபவர்களால் மம்தாவின் வாக்கு வங்கி குறையும் அதனால் குய்யோ முய்யோ என அலறுகிறார். வழக்கம்போலவே காங்கிரஸும் நாட்டின் நலனுக்கு எதிராக மம்தாவுடம் கைகோர்க்கிறது. மொத்தத்தில் பங்களாதேசிகளுக்கும் ஓட்டுரிமை கொடுத்தால்தான் மம்தா ஆட்சியில் இருக்க முடியும். எனவே கள்ளக்குடியேறிகள் ஊடுருவதை கண்டும் காணாமல் இருக்கிறார். இவர்களால் கலாச்சாரப் பண்பாட்டுச் சிதைவுகள் இருக்கின்றன என்பதால்தான் அசாம் பங்களாதேசிகளை எதிர்த்தது. மொத்தத்தில் கம்யூனிஸ்ட், திர்ணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், திமுக போன்றோர் நாட்டில் நலனுக்கு எதிராய் செயல்படுவதில் வல்லவர்கள். பஞ்சாப், வடகிழக்கு மாநிலங்கள், தமிழகம், கேரளா கிறுத்துவத்தாலும், இஸ்லாத்தாலும்  மிக மோசமான பண்பாட்டுச் சூழலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றன. நம் அரசியல்வாதிகள் கேக்கும் கஞ்சியும் குடித்துக் கொண்டிருக்கின்றனர்.


திரிபுவாதம்

     முதலில்  விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் " தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...