Knowledge is good only if it is shared.

Wednesday, April 11, 2018

காவிரியும்... மோடி எதிர்ப்பும்...

             காவிரி நதிநீர்ப் பங்கீடு பல்வேறு தடைகளைத் தாண்டி ஓரளவிற்கு இறுதிக் கட்டத்தினை எட்டிவிட்டதாகவே தோன்றுகிறது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு இத்தீர்ப்பில் அதிக மாற்றம் இருக்காது என்றே தோன்றுகிறது. மழை பொய்த்துவிட்டது மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கநர்நாடகா மீண்டும் கதைவைத் தட்டினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. நிற்க...

           காவிரித் தீர்ப்பின்படி அடுத்து தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கும் காலம் ஜூனில் தான். இப்போதே காவிரி மேலாண்மை வாரியம் அமைந்துவிட்டால் நாளையே தண்ணீர் திறக்கப்பட்டு கரையோர மக்களுக்கு வெள்ளப் பாதுகாப்பு அறிக்கைவிட்டுவிடலாம் என்பது போல தமிழக கட்சிகள் குதிப்பதன் அர்த்தம் வெள்ளிடைமலை.

           கர்நாடகாவில் காங்கிரஸ் வெல்ல வேண்டும் . வேறு பாசையில் சொல்வதானால்  பாஜக தோல்வியைத் தழுவ வேண்டும். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல இப்போதே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் பாஜக கர்நாடகாவில் டெபாஸிட் காலி. ஆக தமிழக அரசியல் கட்சிகளின் நோக்கம் காவிரி நீர் அல்ல. உறுதியான முடிவை நோக்கிச் செல்பவர்கள் ஒருகாலமும் எடுத்தேன் கவிழ்த்தேன் எனச் செயல்படமாட்டார்கள். காந்தி ஆங்கிலேயருக்கு எதிராக அங்குலம் அங்குலமாய் முன்னேறினார். அவரை நிராகரிக்கவும் முடியாமல் அணைக்கவும் முடியாமல் திண்டாடினான் வெள்ளையன். தமிழக அரசியல் கட்சிகளில் பல அரைவேக்காட்டு கோமாளிகளைப் பார்க்கமுடிகிறது சமீப காலங்களில். இவர்களின் கைகளில் சிக்கி  டோல்கேட்டை நொறுக்குவதும், கிரிக்கெட் விளையாட்டிற்குப் போராட்டம் பண்ணுவதுமாக  இலக்கின்றி எய்த அம்பாக அலைகிறான் தமிழன்.   இடதுசாரிகள் போர்வையில் இயங்கும் தேச விரோதக் கும்பல்களும் கடும்போக்கு இஸ்லாமியக் குழுக்களும் எந்தப் போராட்டதையும் விளங்கவிடாமல் செய்வதில் வல்லவர்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் முதல் மூன்று நாட்கள் ஒழுங்காக நடந்த போராட்டத்தினை அதன் பின்னர் ஆட்டையைப் போட்டு அடிதடி ஆக்கியது இக்குழுக்கள்தான். தமிழகத்தினை எப்போதும் கொதிநிலையிலே வைத்திருந்து இன்னுமொரு காஷ்மீராக மாற்றாமல் விடமாட்டார்கள் இவர்கள். தெளிவான சிந்த்தாந்தமும் இல்லை அதன் ஆடைவதற்கான வழிமுறையும் இல்லை. அடி வெட்டு குத்து என்பதே தராக மந்திரம் இவர்களுக்கு. நம் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தான் சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும். எல்லாவற்றிற்கும் நாமே தெருவில் இறங்கிப் போராடிக்கொண்டேயிருந்தால் புரட்சி புண்ணாக்கு எனப் பேசி கடைசியில் தரித்திரமாய் போய்விடுவோம். வீட்டில் உள்ள இளைஞர்களின் சகவாசத்தை கவனிப்பது நல்லது. 

1 comment:

ஆதி said...

உண்மை,சரியான தலைமை அமையவேண்டும்

திரிபுவாதம்

     முதலில்  விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் " தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...