Knowledge is good only if it is shared.

Thursday, March 15, 2018

Stephen Hawking

புகைப்படம்: Jacopo Werther                          பூமி வீனஸைப் போல நெருப்புக் கோளமாக மாறிக் கொண்டிருப்பதால் இன்னும்  ஐந்து சதாப்த்தங்களுக்குள் மனிதன் பூமியிலிருந்து வெளியேறி இதுவரை யாருமே செல்லாத கோள்களுக்குச் செல்ல வேண்டும் என கடந்த நவம்பரில் சொன்னவர் ஸ்டீபன் ஹாக்கிங் (1942 - 2018). இவரது Properties of expanding universe பி. ஹெச். டி அறிக்கையை கடந்த அக்டோபரில் இருந்து அனைவரும் இலவசமாகத் தரவிறக்கம் செய்யும்படி கிடைக்கிறது. (தரவிறக்க இங்கே சொடுக்கவும்) அறிவித்தவுடனே ஒரே நாளில் கிட்டத்தட்ட 60,000 பேர் அதை தரவிறக்கியுள்ளனர். இதனால் சர்வர் க்ராஷ் ஆனது. பொதுவாக ஒரு மாதத்தில் அதிகபக்கம் 100 டாக்குமெண்டுகளே தரவிறக்கம் செய்யப்பட்ட பல்கலைக்கழக இணையத்தளம் அது.  அதற்கு முன்னர் 85 டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். 
                    ஹாக்கிங் தொடக்க காலத்தில் விருதுகளை வென்ற போதிலும் பெருமளவில் பணம் சம்பாதிக்கவில்லை. The Brief History Of Time எனும் புத்தகம் கிட்டத்தட்ட ஒரு கோடி பிரதிகள் விற்பனையாகி அவருக்கு பணத்தினையும் பிரபலத்தையும் சம்பாதித்துக் கொடுத்தது. அவரது Master of the Universe எனும் புதகமும் புகழ் பெற்ற ஒன்று.  
                     படிக்கும் போதே கணிதத்தில் அசாத்திய திறமைகளை வளர்த்துக் கொண்டார். கலிலியோவின் 300 வது ஆண்டு நினைவு நாளன்று பிறந்தவர் ஹாக்கிங். கருந்துளைகளைப் பற்றியும் பிரபஞ்சத்தின் தோற்றத்தினைப் பற்றியும் இவர் வெளியிட்ட ஆய்வு முடிவுகள் இவரை உலகின் ஆகச் சிறந்த விஞ்ஞானியாகக் கொண்டாட வைத்தன. 21 ம் வயதில் Amyotrophic lateral sclerosis (ALS) எனும் நோயால் பாதிக்கப்பட்டார். 

புகைப்படம்: Magnus Norden


                    1966 ல் ஒட்டுமொத்த பிரபஞ்சமும் ஒருமையில் (Singularity) இருந்து தோன்றியது எனும் அவரது ஆய்வறிக்கை விஞ்ஞான உலகில் முக்கியத்துவம் வாய்ந்தது. பின்னர் கருந்துளைகளிலிருந்து எதுவுமே வெளியேற முடியாது எனும் சித்தாந்தத்தினை மறுத்து க்வாண்டம் மெக்கானிக்ஸ் மூலம் கருந்துளைகளிலிருந்து sub-atomic particles வெளியேற முடியும் என்றார் இன்று அதுவே Hawkings radiation என அறியப்படுகிறது. இவரது ஆய்வறிக்கைகள் பிரபஞ்சத்தினைப் பற்றி அதுவரை கொண்டிருந்த அடித்தள சிந்தனையை முறையையையே மாற்றி அமைத்தன. 
                      சமீப காலங்களில் செயற்கை அறிவின் (AI)  ஆபத்துகள் பற்றி தன் கவலையை வெளியிட்டிருந்தார். அவரால் பேச முடியாது எனும் போதும் அவரது கன்னத்து தசைகளில் நுண்ணிய அசைவுகளை ஒலியாக மாற்றும் computer and voice synthesizer மூலம் உரையாடிக் கொண்டிருந்தார். 32 வயதில் Royal society ல் ஓர் நபராக இணைத்துக் கொள்ளப்பட்டார். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருதினையும் பெற்றார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சர் ஐசக் நியூட்டன் கணிதப் பேராசிரியராக வகித்த பொறுப்பினை அவருக்கு 300 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த ஹாக்கின்ஸ் வகித்தார். பணி ஓய்வு பெறும் வரை (2009) அங்கு பணியாற்றினார். அங்குதான் அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட பிரபஞ்சப் பெருவெடிப்பு பற்றிய தனது ஐயத்தினை முதலில் எழுப்பினார்.                       ஐன்ஸ்டீனின் தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டியில்  எல்லைகள் குறிப்பிடப்படவில்லை எனவே அதன் நம்பகத் தன்மையினைக் கேள்விக்குள்ளாக்கினார். அதிலிருந்தே ஒருமையில் (Singularity) இருந்து பிரபஞ்சம்தோன்றியது எனும்  ஆய்வறிக்கை வெளியிட்டார். 2018 மார்ச் 14 ல் அவர் மறைந்தார்.

அவரது முக்கிய ஆய்வு முடிவுகள்.
  • பிரபஞ்சம் ஒருமையிலிருந்து (Singularity) தோன்றியிருக்கலாம்.
  • விண்வெளியின் அடிப்படையும் அதன் முடிவிலா விரிவாக்கமும்.
  • கருந்துளை ஒருபோதும் தன் அளவில் சுருங்காது.
  • கருந்துளையில் சக்தி இருக்கும் வரை அதிலிருந்து sub-atomic particles வெளியேற முடியும்.
  • பெருவெடிப்பிற்குப் பின்னர் பிரபஞ்சம்  மெதுவாக விரிவடையுமாறு மாறியது.
  • பெருவெடிப்பிற்கு முன்னர் விண்வெளியில் எல்லையும் நேரமும் இல்லை.

புகைப்படம் : The Photographer 

“My goal is simple. It is complete understanding of the universe, why it is as it is and why it exists at all”. -  Stephen Hawking

No comments:

திரிபுவாதம்

     முதலில்  விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் " தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...