Monday, September 28, 2015

வானியல் - 33 ஆஸ்ட்ரோசாட் (ASTROSAT)


ஆஸ்ட்ரோசாட் (ASTROSAT)




ஆஸ்ட்ரோசாட் (ASTROSAT)




                     இந்திய விண்வெளி அமைப்பிற்கான புதிய பாய்ச்சல் ''அஸ்ட்ரோசாட்''. இது ஹப்பிள் தொலைநோக்கியை ஒத்தது. அந்த அளவிற்கு அதிதொழில்நுட்பமுடையதாக இல்லாவிட்டாலும் அஸ்ட்ரோசாட்டும் சிறப்பானதே. தகவல்கள், தகவல்கள் அதிக அளவு தகவல்கள் தேவை நம் விண்வெளி அமைப்பிற்கு. சாதாரண ராக்கெட் ஏவுவதற்கே குறைந்தபட்சம் 200 தரவுகள் தேவை. விண்வெளியில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாகச் செல்லாவிடினும் ஓரளவு முனைப்புடன் பயணிக்கும் ஐ.எஸ். ஆர்.ஓ விற்கு அதிக தகவல்கள் தேவை. அத்தகையை விண்வெளித்த தகவல்களைப் பெற்று அதை ஆராய்ந்து புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் நோக்கில் இன்னும் சற்று நேரத்தில் ''அஸ்ட்ரோசாட்'' ஆராய்ச்சி செயற்கைக்கோள் ஏவப்படுகிறது.

ஏவுதளத்தில் பி.எஸ்.எல்.விசி-30


                   வழக்கம் போல பி.எஸ்.எல்.வி தான் இதை மேலே கொண்டு செல்லும் ராக்கெட். ஜி.எஸ்.எல்.வி யை நம்பகமாகப் பயன்படுத்தும் காலமும் விரைவில் கைகூடுமென நம்புவோம்.

  • ஆஸ்ட்ரோசாட் 1.5 டன் எடையுடையது. 
  • 1.96 மீ X 1.75 மீ X 1.30 மீ வடிவமுடையது.
  • 11 நியூட்டன் (ஹைட்டிரஜனை அடிப்படையாகக் கொண்ட) த்ரெஸ்டர்கள் 8 உள்ளன.
  • 2100 வாட் மின்சக்தியை உற்பத்தி செய்யும் இரண்டு சூரியத்தகடுகள்.
  • 5 வருட ஆயுட்காலமுடையது.



               இந்த ஆஸ்ட்ரோசாட்டின் கருவிகள் தொலைதூர மூலங்களிலிருந்து வரும் ஒளிகளை உள்வாங்கி தரையிலுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும்.


  • UVIT - Ultra violet Imaging Telescope (அல்ட்ரா வயலட் மற்றும் அதியுயர் அல்ட்ரா வயலட் ஒளி)
  • SXT - Soft X-ray telescope (ஃபோட்டான் சக்தி)
  • LAXPC - Large Area X-ray proportional counter (எக்ஸ் கதிர்கள்)
  • CZTI - Cadmium Zinc Telluride Imager ( காமா கதிர்கள்)
இதன் மூலம் அண்டங்கள், கருந்துளை, நட்சத்திர மண்டலங்கள் பற்றிய புதிய தகவல்கள் கிடைக்கும். வருங்கால ஆராய்ச்சி முன்னேற்றத்திற்கு இத்தகவல்கள் உதவியாயிருக்கும்.

             பி.எஸ்.எல்.வி சி -30 ராக்கெட் நான்கு நிலைகளையுடையது. ஆஸ்ட்ரோசாட் தவிர வேறு  நாடுகளின் சிறிய செயற்கைக்கோள்களையும் சுமந்து செல்கிறது. முக்கிய செயற்கைக்கோள் நமது ஆஸ்ட்ரோசாட். மொத்தம் 25 நிமிடங்கள் 32.92 வினாடிகளில் ஏவுதல் நிறைவடைந்து அனைத்து செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டுவிடும். ராக்கெட்டின் செயற்கைக்கோளை 649.97 கிமீ உயரத்தில் தள்ளிவிட்டுவிடும். பின்னர் செயற்கைக்கோளிலுள்ள மோட்டார்களை இயக்கி தேவையான உயர, சாய்வு கோணங்களைப் பெறலாம்.



  • 1.52 நிமிடங்களில் முதல் நிலை எரிந்து முடிந்து பின்னர் கடலில் விழுந்துவிடும்.
  • முதல் நிலை  எரிந்து முடிந்த 2 வினாடிகளில் இரண்டாம் நிலைஇயங்கத் தொடங்கும்.
  • 4 நிமிடம் 22 வினாடிகளில் இரண்டாவது நிலை எரிந்து முடிந்து பின்னர் கடலில் விழுந்துவிடும்.
  • மூன்றாவது நிலை  4 நிமிடம் 24 வினாடிகளில் இயங்கத்தொடங்கும்.
  • 9 நிமிடம் 47 வினாடிகளில் மூன்றாம் நிலை எரிந்து முடிந்து பின்னர் கடலில் விழுந்துவிடும்.
  • நான்காம் நிலை 16 நிமிடம் 57 வினாடிகளிலிருந்து 25 நிமிடம் 32 வினாடிவரை இயங்கும்.



டெயில் பீஸ்: வழக்கம்போலவே பி.எஸ்.எல்.வி வெற்றிகரமாக அஸ்ட்ரோசாட் உள்ளிட்ட ஏழு செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தியது.  ஐ.எஸ்.ஆர்.ஓ விஞ்ஞானிகளின் வெற்றிப்பயணம் தொடரட்டும்.

புகைப்பட உதவி: ஐ.எஸ்.ஆர்.ஓ இணையத்தளம்


கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள்.

No comments:

எஞ்சினியர்ஸ்.

                      ஒ ரு காலத்தில் கனவுப் படிப்பாக இருந்தது. சீட் கிடைப்பதே பெரும்பாடு. நுழைவுத் தேர்வு எழுதி பன்னிரெண்டாம் வகுப்பின் கட்...