TMT என்பது Thirty Meter Telescope (TMT). இந்தத் தொலைநோக்கி (டெலஸ்கோப்) மூலம் அல்ட்ரா வைலட் அலைநீளம் முதல் நடுத்தர இன்ஃப்ரா ரெட்வரையான அலைநீளத்தைக் காணலாம். இதன் மூலம் நட்சத்திரங்களை அறிந்து கொள்ளலாம், கிரகங்கள் உருவாகும் விதத்தையும், அண்டத்தையும் மேலும் பிரபஞ்சத்தின் பெரும் பகுதியையும் ஆராயலாம்.

இத்தொலைநோக்கியின் கட்டுமானப்பணிகள் 2014 ஆம் ஆண்டு அக்டோபரில் ஆரம்பித்தன. எல்லாம் ஒழுங்காக திட்டமிட்டபடி நடக்கும்பட்சத்தில் 2022 முதல் இத்தொலைநோக்கி பயன்பாட்டிற்கு வரும். ஹாவாய் தீவுகளிலுள்ள Mauna Kea எனும் மலையுச்சியில் இத்தொலைநோக்கி அமைக்கப்படுகிறது. ஏற்கனவே அங்கு சில தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
![]() | |
Mauna Kea மலையிலுள்ள தொலைநோக்கிகள். |

இத்தொலைநோக்கி நிர்மாணித்த பின்னர் அதைப் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆம் இந்தியாவின் Indian Institute of Astrophysics அதற்கான ஒப்பத்தம் செய்துள்ளது. இந்தியா மட்டுமல்ல ஜப்பான், சீனா, கலிஃபோர்னியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கனடாவிலுள்ள பல்கலைக்கழகங்களும் இதற்கான ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளன.

இத்தொலைநோக்கியின் aperture 30 மீட்டர் விட்டமுடையது எனவே இது முப்பது மீட்டர் தொலைநோக்கி என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் ஏற்கனவே நாம் பார்ப்பதைவிட 10 முதல் 100 மடங்கு தெளிவாகப் பார்க்கமுடியும். மேலும் இப்போதைய தொலைநோக்கிகள் வானத்தில் பார்க்கும் பரப்பைவிட ஒன்பது மடங்கு அதிகமானப் பரப்பை இதன் மூலம் பார்க்க இயலும்.

ஏற்கனவே சிலி மற்றும் மெக்ஸிகோ என சில இடங்கள் பரிந்துரைக்கப்பட்டு கடைசியில் ஹவாய் தீவின் Mauna Kea மலைப்பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்போது ஆரம்பித்தது சிக்கல்.
எதிர்ப்பு:
இத்திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ஹவாய் தீவின் பூர்வகுடிகள் இதற்கு எதிராகத் தீவிரமாகப் போராடிவருகின்றனர். காரணம்.. ரெம்ப எளிது. இயற்கையை அழித்து இம்மாதிரியான கட்டுமானங்களைச் செய்யாதீர்கள் என்பதுதான். உங்களால் அழிக்கப்படும் இயற்கை எதையும் உங்களால் மறு உருவாக்கம் செய்ய முடியாது என்கிறார்கள். போராட்டம் எல்லாம் அறவழியில்தான் நடக்கிறது. இப்போராட்டத்தின் காரணமாக கட்டுமானப்பணிகள் அடிக்கடி தடைபடுகின்றன. சமீபத்திய நாட்களில் போராட்டக்காரர்களை கைது செய்து வருகின்றனர். யார்ப் பக்கம் பார்த்தாலும் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது. இம்மலை எங்களின் தாய் இயற்கை இடர்களிலிருந்து எங்களைக் காக்கிறாள். எனவே எங்களின் பகுதிக்கு வந்து எங்களைத் தொந்தர செய்யாதீர்கள். எங்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள் எனக் கண்ணீர்விடுகின்றனர்.
போராட்டத்தின் காணொனி கீழே.. போராட்டக்காரர்களின் கேள்விகளில் நியாயம் இருக்கிறது.
ஏற்கனவே சிலி -யில் 8.4 மீட்டர் தொலைநோக்கியின் கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் அதே சிலி -யில் ஐரோப்பாவின் 39.3 மீட்டர் தொலைநோக்கிக்கான கட்டுமானப்பணிகளும் நடந்து கொண்டிருக்கிறது. நிச்சயமாய் அமெரிக்கா இத்திட்டத்திலிருந்து பின்வாக்கப்போவதில்லை. இம்மூன்று திட்டங்களும் 2020 -ல் பயன்பாட்டிற்கு வரும்வகையில் திட்டமிடப்பட்டுள்ளன.
புகைப்பட உதவி: Space இணையத்தளம்
கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள்.
கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள்.