Knowledge is good only if it is shared.

Wednesday, April 15, 2015

வானியல் - 25 அங்காரா (Angara)

அங்காரா (Angara)


Picture
அங்காரா


     ஷ்யா பல விண்வெளி சாதனைகளுக்கு சொந்தம். முதல் செயற்கைக்கோள், முதல் விண்வெளிவீரர் மற்றும் வீராங்கனை என அடுக்கிக்கொண்டே போகலாம். ரஷ்யர்களின் ராக்கெட் இஞ்சின்களே என்னைப் பெரிதும் கவர்பவை. அது ஆர். டி 180 ஆகட்டும் இல்லை ப்ரோட்டானாகட்டும். ரஷ்யாவின் அங்காரா ராக்கெட்டைப் பற்றி இந்தக் கட்டுரையில் கொஞ்சம் பார்ப்போம்.

       ரு ராக்கெட் என்பது அதிக எடையை அதிக உயரத்திற்கு நம்பகமாக தூக்கிச் செல்ல வேண்டும் அவ்வளவே. இதில் தற்போதைய ஜாம்பவான்கள் சிலர். அங்காரா, ஃபால்கன், டெல்டா, ஏரியான் மற்றும் அட்லஸ் உள்ளிட்ட சில ராக்கெட்டுகள். இவர்களில் முன்னணியிலுள்ள வீரன் அங்காரா. ஏன்?

செயற்கைக்கோளை Geostationary Transfer Orbit (GTO)-ல் கொண்டு சேர்க்கும் ராக்கெட்டுகளை ஒர் ஒப்பீடு:
  • பி.எஸ்.எல்.வி 1400 கிலோகிராம்.
  • அட்லஸ் 8,700 கிலோகிராம்.
  • ஏரியான் 10,500  கிலோகிராம்.
  • அங்காரா 12,500  கிலோகிராம்.
  • டெல்டா 13,800 கிலோகிராம்.
  • ஃபால்கன் 21,200 கிலோகிராம்.
ஒப்பீடுகளின்படி ஃபால்கன் அதிகத் திறனுடையது இருந்தாலும் அக்காராவை மெச்சக்காரணம்,
GEO விற்கு அதிக எடையைத் தூக்கிச் செல்லும் திறனின் அடிப்படையில்.
 அதையும் பார்த்துவிடுவோம்.
  • அட்லஸ்: 3,960 கிலோகிராம்.
  • டெல்டா: 6,750 கிலோகிராம்.
  • அங்காரா: 7,600 கிலோகிராம்.
இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வியின் GTO திறன்: 5,000 கிலோகிராம். இன்னும் தயாரிப்பில் இருக்கிறது. ஐ.எஸ்.ஆர்.ஓ போக வேண்டிய தொலைவு இன்னும் நிறைய இருக்கிறது.


அங்காராவின் ஜாதகம் கீழே:

அங்காரா குடும்பத்தில் மொத்தம் 8 வகை. அங்காரா 1.1 முதல் அங்காரா A7P வரை. இதில் இப்போது உற்பத்தியில் மேம்படுத்திக் கொண்டிருப்பது அங்காரா A5P.  அங்காரா A7P போன்றவை திட்ட வடிவில் இருக்கின்றன. அங்காரா 1.1 -யை ரத்து செய்துவிட்டார்கள். அங்காராவின் Liftoff Thrust 13.45 மெகா நீயூட்டன்.

திட்டம்: 

அங்காரா வகை ராக்கெட்டுகளைத் தயாரிப்பது என ரஷ்யா 1992 -ல் அறிவித்தது. இராணுவம் மற்றும் விண்வெளி இரண்டிற்கும் பயன்படும் வகையில் இவை தயாரிக்கத் திட்டமிடப்பட்டது. அதிக எடையுடைய செயற்கைக்கோள்களைச் செலுத்தவும் ராக்கெட்டுகளின் உதிரிப் பாகங்களுக்கு உக்ரைனைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்கவுமே முக்கியமாக இத்திட்டம் தீட்டப்பட்டது. (தற்போதைய கள நிலவரம்: ரஷ்யா - அமெரிக்கா - உக்ரைன் - ஈரான் உறவுகள். ~~~~ யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் தெளிவாகிறது) மேலும் ''பைகானூர்'' மற்றும் ''கஸாக்ஸ்தான்'' ஏவுதள சிரமங்களையும் கணக்கில் கொண்டு அங்காரா திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த டிசம்பரில் அங்காரா 5 ஏவப்பட்டது. அதன் காணொளி கீழே:



 இரட்டை நிலை கொண்ட இந்த ராக்கெட்டில் (சில சமயம் மூன்று) முதல் நிலையில் RD- 191எஞ்சினும் இரண்டாம் நிலையில் RD- 0124A இஞ்சினும் உபயோகப்படுத்தப்படுகின்றன.


Picture
RD- 191 சோதனை


Picture
RD- 0124A சோதனை

        விண்வெளித்துறை மற்றும் இராணுவ அதிகாரிகளின் முடிவின் படி அங்காராவின் ஏவுதளம் Plesetsk பகுதியில் கட்டப்பட்டது. இதுவும் அரசியல் காரணங்களுக்காகவே. பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களுக்கு இடையே  200 மில்லியன் ரூபிள் இதன் கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்டது. இந்த ஏவுதளத்தில் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு வசதிகளுக்காக 211 கட்டிடங்கள் பூமிக்குக் கீழே மற்றும் பகுதியளவு கீழே உள்ளன.



Picture
அங்காரா லாஞ்ச்பேட்
                  2014 டிசம்பரில் அங்காரா 5 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இன்னும் அங்காரா A7.2, அங்காரா A7.2 B மற்றும் அங்காரா A7P என மாபெரும் திட்டங்கள் ரஷ்யாவிடம் உள்ளன. ரஷ்யாவிற்கும் அதன் இராணுவ மற்றும் விண்வெளித்துறைக்கு அங்காரா மிகமுக்கியமான ஒன்று. அதனால்தான் அங்காரா 5 ராக்கெட்டை விண்ணில் ஏவ விளாடிமிர் புட்டின் வந்திருந்தார்.

புகைப்பட உதவி: விக்கிப்பீடியா, roscosmos மற்றும் spaceflight101 இணையத்தளங்கள்.

கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள்.  


No comments:

நம்மிலெத்தனைபேருக்குத்தெரியும்....

Quora வலைத்தளத்தில் BJP ஆதரவு பதிலொன்றை எழுதப்போய் அது கடைசியில் சுற்றி வளைத்து குலக்கல்வியில் வந்து நின்றது. குலக்கல்வியையும் BJP யையும் எ...