Knowledge is good only if it is shared.

Sunday, March 15, 2015

வானியல் - 23 கலிலியோ

விண்வெளியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் எனக்குப் பிடித்த 10 திட்டங்களில் இது ஆறாவது.

      இது வானியல் அறிஞர் கலிலியோ கலிலியைப் பற்றிய கட்டுரை அல்ல. அவரது பெயரைத் தாங்கிய விண்கலன் வியாழனை ஆராய அனுப்பட்டது தொடர்பான கட்டுரை.

         மெரிக்கா, பிரிட்டன், ஸ்வீடன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் கனடாவைச் சேர்ந்த  கிட்டத்தட்ட 800 விஞானிகள் பங்காற்றிய மிகப்பெரும் திட்டங்களுள் ஒன்று கலிலியோ திட்டம். மொத்தச் செலவு அன்றைய காலகட்டத்தில் 140 கோடி அமெரிக்க டாலர்கள். வெளிநாட்டு உதவியாய் 11 கோடி அமெரிக்க டாலர்கள் கிடைத்தது.
Galileo mission graphic
கலிலியோ விண்கலன்

வழக்கம்போல விண்கலத்தின் ஜாதகத்தினைக் கொஞ்சம் பார்த்துவிடலாம்.உருவ அளவு: 127 செ.மீ விட்டம், 91 செ.மீ உயரம்.
அறிவியல் உபகரணங்களின் எடை339 கிலோகிராம்.
ஏவப்பட்ட நாள்: அக்டோபர் 18, 1989. 
எடை: 339 கிலோகிராம்
நோக்கம்: வியாழனை ஆராய்வது.
The Galileo Spacecraft
முக்கிய நோக்கம் வியாழனை ஆராய்வதாக இருந்தாலும் போகிற போக்கில் பூமி, வீனஸ், விண்கல், எரி நட்சத்திரம்  ஆகியவற்றை ஆராய்ந்து பின்னர்  வியாழன் கிரகத்தை ஆராயும். ஆம்னி பஸ் போகிற போக்கில் சரக்கு ஏற்றிக் கொண்டு போகிற மாதிரிதான் இதுவும். 


கலிலியோவில்,
 • Solid-state imaging camera 
 • Near-infrared mapping spectrometer
 •  Ultraviolet spectrometer
 •  Photopolarimeter radiometer
 •  Magnetometer
 •  Energetic particles detector
 •  Plasma investigation
 •  Plasma wave subsystem
 •  Dust detector
 •  Heavy ion counter 
ஆகிய உபகரணங்கள் இருந்தன. 2003 செப்டம்பர் வரை இந்த விண்கலன் பயன்பாட்டில் இருந்தது. இது பயணம் செய்த மொத்த தொலைவு  463,17,78,000 கிலோமீட்டர்கள். 


Galileo encounter with Io.png

இன்னும் சில தகவல்கள்,
 • 1610-ல் கலிலியோ வியாழன் கிரகத்தின் நிலவுகளைக் கண்டுபிடித்தார். அதனால் அவர் பெயரில் இந்த விண்கலன் செலுத்தப்பட்டது.
 • 1973- ல் அனுப்பப்பட்ட "பயோனிர் 10" வியாழனுக்கு அனுப்பப்பட்ட முதல் விண்கலன்.
 • அக்டோபர் 18, 1989 -ல் கலிலியோ ஏவப்பட்டது.
 • 1991, அக்டோபர் 29- ல் "கேஸ்ப்ரா"ங்கிற விண்கல்லின் அருகே சென்று படமெடுத்து அனுப்பியது.
 • 1993, ஆகஸ்ட் 28- ல் "இடா" எனும் விண்கல்லின் நிலவாகிய  "டாக்டி"யை படமெடுத்து அனுப்பியது.
 • 1995, ஜூலையில் வியாழனை அடைந்தது.
 • வியாழனின் நிலவாகிய "யூரோப்பா"வில் கடல் இருக்கலாம் என்பதற்கான அறிகுறியுடன் புகைப்படமெடுத்து அனுப்பியது.
 • வியாழனின் நிலவாகிய "லோ"வின் வெகு அருகில் சென்று படமெடுத்து அனுப்பியது. இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டவற்றிலேயே அளவுக்கு அதிகமான எரிமலைகளை உடைய நிலவு அது. 
 • 1997-ல் மீண்டும் "யூரோப்பா"வின் அருகில் சென்று படமெடுத்து அனுப்பியது.
 • 2003-ல் வியாழனின் ஈர்ப்புவிசையால் இழுக்கப்பட்டு அதன் பரப்பில் மோதி தனது மகத்தான பணியை நிறைவு செய்தது.இதன் முக்கியக் கண்டுபிடிப்புகளாக கீழேயுள்ளவற்றைச் சொல்லலாம்.
 • வியாழனின் வளிமண்டலத்தில் பூமியை விட சக்திவாய்ந்த மின்னல் 
 • வோயஜர் 1 ஏற்கனவே எரிமலைகளைக் கண்டுபிடித்தாலும் கலிலியோ அதைப்பற்றிய அதிகத் தகவல்களைத் தந்தது.
 • வியாழனின் நிலவாகிய "யூரோப்பா"வில் கடல்கள் இருப்பதற்காக ஆதாரம்.
 • வியாழனின் மிகப்பெரிய நிலவாகிய "கனிமீட்"-ன் (சூரியக் குடும்பத்திலேயே மிகப்பெரியது) காந்தப்புலன்கள்
 •  வியாழனின் நிலவாகிய "கேலிஸ்டோ"-வின் தரைக்கும் கீழே கடல் இருக்கலாம்.
கலிலியோ எடுத்த புகைப்படங்களுள் சில கீழே,

Europa and the Thrace Region
The Asteroid 243 Ida and Its Moon Dactyl
  A Detailed View of Callisto's Surface
 
தொடரும்...


புகைப்பட உதவி:  நாசா மற்றும் விக்கிப்பீடியா இணையத்தளம்.

இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் கருத்துகளை கீழே விட்டுச் செல்லுங்கள். நன்றி !!!

கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள்.  No comments:

திரிபுவாதம்

     முதலில்  விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் " தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...