Knowledge is good only if it is shared.

Tuesday, March 3, 2015

வானியல்- 22 ஸ்காட் கெல்லி மற்றும் மைக்கேல் கோர்னியன்கோYearlong Mission
ஸ்காட் கெல்லி மற்றும் மைக்கேல் கோர்னியன்கோ


           வரலாற்றில் இடம்பெறும் வாய்ப்பு ஸ்காட் கெல்லி மற்றும் மைக்கேல் கோர்னியன்கோ-க்குக் கிடைத்திருக்கிறது. இருவரும் 2015, மார்ச் 27 அன்று சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்லப் போகிறார். இது என்ன பிரமாதமான சாதனையா எனக் கேட்பவர்களுக்கு...

ஸ்காட் கெல்லி சர்வதேச விண்வெளி மையத்தில் 2010 ஆம் ஆண்டில்.


            பொதுவாக சர்வதேச விண்வெளி மையத்தில் அதிக பட்சம் ஆறு மாதங்கள் மட்டுமே விண்வெளி வீரர்கள் தங்குவர் (அமெரிக்காவின் அதிக பட்ச சாதனை 215 நாட்கள்). விதிவிலக்காய் ரஷ்யாவின் வீரர்கள் மூவர் ஓராண்டிற்கும் அதிகமாக தங்கியிருந்தனர். அதுவும் 90 களில்  ''மிர்'' விண்வெளி மையத்தில், அதுவும் இந்த அளவுக்கு விஞ்ஞானப் பரிசோதனைகள் நடைபெறாத காலத்தில்.

orion mars
சர்வதேச விண்வெளி மையம்


                 ''ஸ்காட் கெல்லி'' மற்றும் ''மைக்கேல் கோர்னியன்கோ'' ஆகியோரின் உடல் நிலையில் நடைபெறும் மாற்றங்களை ஆராயும் பொருட்டு இந்த முறை இருவரும் ஓராண்டிற்கும் அதிகமாக விண்வெளி மையத்தில் தங்கப்போகிறார்கள். பரிசோதனைகளில் செல்களின் மெட்டோபாலிசம் (cellular metabolism) பற்றி நுணுக்கமாக சோதிக்கப்போகிறார்கள், MRI imaging எனும் நாம் வழக்கமாகச் சொல்லும் MRI ஸ்கேன் பரிசோதனை, உணவு செரிமானத்திற்கான பாக்டீரியாக்கள் குறிப்பாக உடல் பருமன், ஒவ்வாமை (அலர்ஜி), நீரிழிவு மற்றும் மன நலன் தொடர்பான பாக்டீரியா சோதனை போன்றவற்றைச் செய்யத் திட்டமிட்டிருக்கின்றனர். மிக முக்கியமானதாக ஸ்காட் கெல்லியின் சகோதரரும் முன்னார் விண்வெளி வீரருமான ''மார்க் கெல்லி''யின் உடல் நிலையையும் ''ஸ்காட் கெல்லி''யின் உடல் நிலையையும் ஒப்பிடப் போகிறார்கள். இருவரும் இரட்டையர்கள். ''மார்க் கெல்லி'' நாசாவின் பரிசோதனைக் கூடத்திலிருப்பார் அவரது சகோதரர் ''ஸ்காட் கெல்லி'' விண்வெளி மையத்தில் இருப்பார்.

scott kelly 2
ஸ்காட் கெல்லி விண்வெளி நடைக்கான பயிற்சியில்இதுதொடர்பாக ''ஸ்காட் கெல்லி'' தனது கருத்துகளைச் சொல்லியிருந்தார்.
  • வழக்கான பயணத்தில் ஆறு மாதத்தில் திரும்பி வருவோம் என்ற உணர்வு தோன்றும், ஆனால் இம்முறை ஒருவருட காலமென்பது அதிகம்தான். 
  • தூக்கம் மிக முக்கியமான பிரச்சனையாக இருக்கப்போகிறது. ஏற்கனவே விண்வெளிமைய வீரர்களில் மூவரில் ஒருவர் தூக்க மாத்திரையின் உதவியுன்தான் தூங்குகிறோம்.
  • எனது மகளின் கல்லூரி, வீட்டின் மின்சாரக் கட்டண பில் மற்றும் தனது வருமான வரித் தாக்கல் தொடர்பாக நான் செய்ய வேண்டிய வேலைகளை என்னால் செய்ய இயலாமல் போகும்.
sleeping in space
தூக்கம்தான் :)


               மேலே உள்ளவற்றில் தூக்கம் தொடர்பானது மிக முக்கியமான ஒன்றாகப்படுகிறது. மைக்ரோ கிராவிட்டியில் தூங்குவது சிரமம்தான். அங்கே படுப்பது நிற்பது என எதுவும் இல்லை. மிதந்து கொண்டே இருப்பதால் தூங்குவது என்பது கண்களை மூடுவது மட்டுமே. பூமியைப் போல வசதியாக மெத்தையில் படுப்பது இயலாது.

                 ரு வருட காலத்திற்குப் பின்னர் இவர்கள் பூமிக்குத் திரும்பி வந்ததும் இவர்களில் உடல் நிலை பழைய நிலைக்கு வர எவ்வளவு காலம் பிடிக்கும் எனபதும் பரிசோதனையின் முக்கிய நோக்கம். தொடர்ச்சியான இரத்தச் சோதனைகள் ஸ்காட் கெல்லி மற்றும் மைக்்கேல் கோர்னியன்கோ ஆகிய இருவருக்கும் நடத்தப்பட்டு அதிக தகவல்களைப் பெறுவது இப்பயணத்தின் நோக்கம். மேலும் மனித உடலை நாம் எந்த அளவிற்குப் புரிந்து வைத்திருக்கிறோம் என்பதையும் சரிபார்க்க இப்பயணச் சோதனை உதவும்.

spacewalk

                       வ்வளவு மெனக்கெடல்கள் எல்லாம் மனிதனின் செவ்வாய் பயணத்திற்கான முன்னோட்டம்தான். 2030-ல் மனிதன் செவ்வாய்க்குப் பயணப்படப் போகிறான். அதற்கான தரவுகளைப் பெறவே இச்சோதனை. இது தொடர்பாய் இன்னும் பல சோதனைகள் நடத்தப்படலாம்.
மனிதனை செவ்வாய்க்கு அனுப்புவதற்குப் பதில் ரோபோக்களை அனுப்பலாம் என ஆலோசிக்கப்பட்டது. மனிதனால் ரோபாக்களைவிட அதிக சோதனைகளைச் செய்ய முடியும் என்பதாலும் ஏற்கனவே ரோவர்கள் அங்கே அனுப்பப்பட்டுவிட்டதாலுமே மனிதன் அனுப்பப்படுகிறான். அக்காரணத்தினாலேயே பாதுகாப்பு, பரிசோதனை என செலவும் எகிறிக்கொண்டிருக்கிறது.

''மனிதர்களாகிய நாம் புதியனவற்றைக் கண்டுபிடித்து நமது எல்லையை உடைத்து முன்னேறிக் கொண்டேயிருக்கிறோம். இதுவரை சரியாகவே செய்து வந்திருக்கிறோம். அதன் தொடர்ச்சிதான் இதுவும், இது நமது கடமையும் கூட'' - ஸ்காட் கெல்லி

தொடரும்...


புகைப்பட உதவி:  நாசா மற்றும் விக்கிப்பீடியா இணையத்தளம்.


கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள். 


No comments:

திரிபுவாதம்

     முதலில்  விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் " தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...