Knowledge is good only if it is shared.

Wednesday, February 4, 2015

SpaceX- மீளப்பாவிக்கும் ராக்கெட்.

        விண்வெளியில் ராக்கெட்டை ஏவும் செலவு கூடிக்கொண்டே போகிறது. அதற்கு மாற்றாக செலுத்தப்பட்ட ராக்கெட்டை மீண்டும் பூமியில் விழும்போது பத்திரப்படுத்தி அடுத்த ஏவுதலுக்கு அதை உபயோகிக்கும் தொழில்நுட்பம் விரைவில் பரவலாக வரும். "ஸ்பேஸ்-எக்ஸ்" நிறுவனம் 2014 ஜூனில் அதற்கான சோதனை ஒன்றை நடத்தியது. அதன் காணொளி கீழே...



             அதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரியில் மீண்டும் ஒரு சோதனை நடத்தப்பட்டது. முழுமையான வெற்றி கிடைக்காவிட்டாலும் வருங்காலத்தில் சாத்தியப்படுத்துவதற்கான வாய்ப்பு இதன் மூலம் உருவாகியுள்ளது. அதன் காணொளி கீழே...





இதில் ராக்கெட்டின் முதல் பகுதி தரைக்கு வரும்போது கடலில் அதற்க்கென பிரத்யோகமாகத் தயாரிக்கப்பட்ட மெத்தையில் விழுமாறு திட்டமிடப்பட்டிருந்தது.

பொதுவாக ராக்கெட்டுகள் இரண்டு அல்லது மூன்று அடுக்குகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான எரிபொருள் இருக்கும். தரையிலிருந்து கிளம்பும்போது அதன் முடுக்கம் மிகவும் அதிகமாகத் தேவைப்படும். மேலும் புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து மிகப்பெரிய எடையைத் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும். திசைவேகம் பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கும். எனவே திசைவேகத்தை அதிகரிக்க பூஸ்டர்கள் மெயின் கோரின் பக்கவாட்டில் இணைக்கப்பட்டிருக்கும். மேலே செல்லச்செல்ல பூஸ்டர்கள், மெயின் கோர் மற்றும் இரண்டாம் அடுக்கு ஆகியவை கடலில் விழுந்துவிடும். அதை யாரும் பொதுவாக திரும்பப் பயன்படுத்துவதில்லை. சில சமயம் மீனவர்களின் வலைகளில் சிக்குவதும் உண்டு. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இம்மாதிரி திரும்ப பூமியில் விழுவதை சேகரித்து மீண்டும் அடுத்த ஏவுதலுக்கு அதைப் பயன்படுத்தலாம் எனத் திட்டமிட்டு செயலாற்றி குறிப்பிடத்தக்க  வெற்றியைப் பெற்றுள்ளது.

             வருங்காலத் தொழில்நுட்பம் தொடர்பாக "ஸ்பேஸ் எக்ஸ்" அனிமேசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. வெற்றிபெற்றால் மிகப்பெரிய அளவில் கோர் மற்றும் பூஸ்டர் ஆகியவற்றை திரும்பவும் பயன்படுத்தலாம். ஐ.எஸ்.ஆர்.ஓ-விடம் இம்மாதிரியான திட்டங்கள் இருக்கின்றனவா எனத் தெரியவில்லை. வீடியோ கீழே..




No comments:

நம்மிலெத்தனைபேருக்குத்தெரியும்....

Quora வலைத்தளத்தில் BJP ஆதரவு பதிலொன்றை எழுதப்போய் அது கடைசியில் சுற்றி வளைத்து குலக்கல்வியில் வந்து நின்றது. குலக்கல்வியையும் BJP யையும் எ...