Knowledge is good only if it is shared.

Tuesday, February 17, 2015

வானியல்- 21 க்வேஸர்கள் (Quasars)

க்வேஸர்கள் (Quasar)

                க்வேஸர்கள் (Quasar)என்ற பெயர் கொஞ்சம் புதியதாகவும் வித்தியாசமாகவும் இருக்கலாம் பலருக்கும். வானியலில் ஆர்வமுள்ளவர்களுக்கே இதைப் பற்றி சரிவரத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. Quasar என்பது quasi-stellar radio source ஆகும்.

An artist's conception of jets protruding from an AGN.

              க்வேஸர்களைப் பற்றி 60-களில்தான் விஞ்ஞானிகள் விவாதிக்க ஆரம்பித்தனர். யதேச்சயாய் அலைவாங்கியைத் (ஆண்டெனா) திருப்பியபோது பிரபஞ்சம் எங்கும் வியாபித்துள்ள சக்தியைக் கண்டறிந்தனர். ஆச்சரியம்! இது என்னதெனப் புரியவில்லை அவர்களுக்கு. பல நூறு கோடி ஒளிவருடங்கள் தொலைவிலிருந்து அந்த சக்தி வந்து கொண்டிருந்தது. நமதுசூரியன் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களின் மீதும் அது பரவியிருந்தது.

artist concept of quasar

                தில் இன்னுமொரு ஆச்சரியப்படத்தக்க செய்தி என்னவெனில் இந்த ஒளிவரும் மூலம் ஒளியின் வேகத்தைப் போல மூன்று மடங்கு வேகத்தில் விலகிச் சென்றுகொண்டிருக்கிறது. ம்.... உண்மையிலேயே அற்புதம்தான். ஒளியானது அதன் மூலத்திலிருந்து கிளம்பி நம்மை அடைய பல நூறு கோடி வருடம் ஆகிறது எனும்போது, அதாவது நமக்கு இப்போது கிடைக்கும் இந்த க்வேஸர்களின் தரவுகளை ஆராய்ந்தால் நமக்குக் கிடைக்கும் முடிவானது. பல நூறு கோடி ஒளியாண்டுகளுக்கு முன்னர் நடந்த ஓர் நிகழ்வின் முடிவாகும். கிட்டத்தட்ட கால இயந்திரத்தின் (டைம் மெஷின்) பயணம் போன்றது இது. இதன் மூலம் பிரபஞ்சத்தின் ஆரம்ப காலகட்டத்தினை அறிந்திடலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.                ந்தக் க்வேஸர்களிலிருந்து வரும் ஒளியானது நமது சூரியனைப் போல பத்து இலட்சம் கோடி சக்தி வாய்ந்தது. சரி, எங்கிருந்து வருகிறது இது. நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம் ஒவ்வொரு அண்டத்தின் நடுவிலும் ஓர் மிகப் பெரிய கருந்துளை இருக்கிறதென,  அந்தக் கருந்துளையில்தான் இந்த க்வேஸர்கள் இருக்கின்றன. கருந்துளையிலிருந்து ஒளி உட்பட எதுவும் வெளியேறாதெனப் படித்திருக்கிறோம். ஆனால் க்வேஸர்களின் இருப்பிடத்தை எப்படி உணர்ந்தார்கள் எனத் தெரியவில்லை. சந்தேகம்தான் அறிதலின் அடிப்படை. எனவே சந்தேகப்படுவோம் :)
க்வேஸர்கள் மிகப் பெரியவை. நமது அண்டத்தைவிடப் பெரியவை. இன்னும் சொல்லப்போனால்  ஒரு கிலோபார்செக் அகலமுடையவை. (ஒரு பார்செக் = 3.26 ஒளியாண்டுகள்).
கருந்துளை தனது அண்டத்திலுள்ள அனைத்து விண்மீன்களையும் தன்னை நோக்கி சுழற்றி இழுக்கின்றன. இவை அனைத்தின் ஒளியும் கருந்துளையிலுள்ள இக்க்வேஸரை அடைகின்றன. எனவேதான் அவை மிகப்பிரகாசமாக இருக்கின்றன.  வெற்றுக் கண்களுக்குப் புலனாவதில்லை. வானியல் தொலைநோக்கிகள் மூலம் இவை உணரப்படுகின்றன.

brilliant radial quasar amid space debris
நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி படம்பிடித்த 3C 273 எனும் பெயருடைய க்வேஸர்

க்வேஸர்களின் சக்தியை கொஞ்சம் ஒப்பிடுவோம். க்வேஸர் ஒரு வினாடியில் வெளியிடும் சக்தியை ஒட்டுமொத்த பூமியின் மின்சக்தியாக நூறு கோடி ஆண்டுகள் உபயோகிக்கலாம். 

               சுருக்கமாக நமக்குத் தெரிந்த மொழியில் சொன்னால் க்வேஸர்கள் என்பவை ராட்சசன்கள். இதுவரை 12,000 க்வேஸர்களைக் கண்டுபிடித்துள்ளனர். நமது தொலைநோக்கியின் தரம் அதிகரிக்க அதிகரிக்க இந்த எண்ணிக்கையும் கூடும். இத்தகையை க்வேஸர்கள் பற்றி அதிகத் தகவல்கள் தெரியாதபோதும் இவற்றின் ஆயுட்காலம் சிலகோடி வருடங்கள் எனக் கணித்துள்ளனர். இந்தக் க்வேஸரைவிட அதிக அலைநீளமுடையவற்றை 'ப்ளேஸர்கள்' என்கின்றனர். இது தொடர்பான ஆராய்ச்சிகள் மிகத் தொடக்க காலத்தில் இருக்கின்றன. வரும் காலங்களில் க்வேஸர்கள் மற்றும் ப்ளேஸர்கள் பற்றி அதிகத் தகவல்கள் தெரியவரும்.

தொடரும்...


புகைப்பட உதவி:  நாசா மற்றும் விக்கிப்பீடியா இணையத்தளம்.

இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் கருத்துகளை கீழே விட்டுச் செல்லுங்கள். நன்றி !!!

கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள். 

Wednesday, February 4, 2015

SpaceX- மீளப்பாவிக்கும் ராக்கெட்.

        விண்வெளியில் ராக்கெட்டை ஏவும் செலவு கூடிக்கொண்டே போகிறது. அதற்கு மாற்றாக செலுத்தப்பட்ட ராக்கெட்டை மீண்டும் பூமியில் விழும்போது பத்திரப்படுத்தி அடுத்த ஏவுதலுக்கு அதை உபயோகிக்கும் தொழில்நுட்பம் விரைவில் பரவலாக வரும். "ஸ்பேஸ்-எக்ஸ்" நிறுவனம் 2014 ஜூனில் அதற்கான சோதனை ஒன்றை நடத்தியது. அதன் காணொளி கீழே...             அதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரியில் மீண்டும் ஒரு சோதனை நடத்தப்பட்டது. முழுமையான வெற்றி கிடைக்காவிட்டாலும் வருங்காலத்தில் சாத்தியப்படுத்துவதற்கான வாய்ப்பு இதன் மூலம் உருவாகியுள்ளது. அதன் காணொளி கீழே...

இதில் ராக்கெட்டின் முதல் பகுதி தரைக்கு வரும்போது கடலில் அதற்க்கென பிரத்யோகமாகத் தயாரிக்கப்பட்ட மெத்தையில் விழுமாறு திட்டமிடப்பட்டிருந்தது.

பொதுவாக ராக்கெட்டுகள் இரண்டு அல்லது மூன்று அடுக்குகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான எரிபொருள் இருக்கும். தரையிலிருந்து கிளம்பும்போது அதன் முடுக்கம் மிகவும் அதிகமாகத் தேவைப்படும். மேலும் புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து மிகப்பெரிய எடையைத் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும். திசைவேகம் பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கும். எனவே திசைவேகத்தை அதிகரிக்க பூஸ்டர்கள் மெயின் கோரின் பக்கவாட்டில் இணைக்கப்பட்டிருக்கும். மேலே செல்லச்செல்ல பூஸ்டர்கள், மெயின் கோர் மற்றும் இரண்டாம் அடுக்கு ஆகியவை கடலில் விழுந்துவிடும். அதை யாரும் பொதுவாக திரும்பப் பயன்படுத்துவதில்லை. சில சமயம் மீனவர்களின் வலைகளில் சிக்குவதும் உண்டு. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இம்மாதிரி திரும்ப பூமியில் விழுவதை சேகரித்து மீண்டும் அடுத்த ஏவுதலுக்கு அதைப் பயன்படுத்தலாம் எனத் திட்டமிட்டு செயலாற்றி குறிப்பிடத்தக்க  வெற்றியைப் பெற்றுள்ளது.

             வருங்காலத் தொழில்நுட்பம் தொடர்பாக "ஸ்பேஸ் எக்ஸ்" அனிமேசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. வெற்றிபெற்றால் மிகப்பெரிய அளவில் கோர் மற்றும் பூஸ்டர் ஆகியவற்றை திரும்பவும் பயன்படுத்தலாம். ஐ.எஸ்.ஆர்.ஓ-விடம் இம்மாதிரியான திட்டங்கள் இருக்கின்றனவா எனத் தெரியவில்லை. வீடியோ கீழே..
சின்மயியும் வைரமுத்துவும்

           யோசித்துப்பார்க்கிறேன்... சின்மயி ஹெச். ராஜா மீது இம்மாதிரியான பாலியல் குற்றாச்சாட்டினைக் கூறியிருந்தால் நம் சமூகம் எப்படி எதிர்...