Thursday, December 4, 2014

ஜிசாட்- 16 (GSAT-16)

         
 ஜிசாட்-16

             ஐஎஸ்ஆர்ஓ தனது ஜிசாட் வரிசை செயற்கைக் கோள்களில் ஜிசாட்-16 செயற்கைக் கோளை 2016 டிசம்பர் 5 அதிகாலை 2:08 ற்கு ஏவுவதாகத் திட்டமிட்டுள்ளது. உண்மையில் இதை ஏவுவது ஐ எஸ் ஆர் ஓ அல்ல. ஐரோப்பிய விண்வெளி அமைப்புதான் ஏவுகிறது. காரணம்? இந்த ஜிசாட்-16 செயற்கைக் கோளை ஏவும் அளவு வல்லமை நம்மிடம் இல்லை. அதாவது செயற்கைக் கோள் நமது சொந்தச் சரக்கு அதை ஏவுவது ஐரோப்பிய விண்வெளி அமைப்பு. ஆனால் ஜிசாட்-14 செயற்கைக் கோளை  நாம் தான் ஏவினோம். குழப்பமாக இருக்கிறதா? தெளிவுறுவோம்...

ஜிசாட்-16



                   ஜிசாட் வரிசை செயற்கைக் கோள்கள் எல்லாம் பூமிக்கு மேலே 36,000 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டியவை. இத்தகைய செயற்கைக் கோள்கள் பூமி சுற்றும் வேகத்திற்கு இணையாகச் சுற்ற வேண்டும் அப்போதுதான் எப்போதும் பூமியின் ஒரே இடத்தின் மேலே இருப்பது போல இருக்கும். எனவே இந்தியாவிலிருந்து இந்தியாவின் இராணுவ மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பிற்காக அனுப்பப்படும் இத்தகைய செயற்கைக் கோள்கள் எப்போதும் இந்தியாவின் மேலேயே சுற்றிக் கொண்டிருப்பது அவசியமல்லவா. எனவே பூமியிலிருந்து தோராயமாய் 36,000 கிலோமீட்டர் தொலைவில் விடப்படும் செயற்கைக் கோள்கள் பூமியின் வேகத்திலேயே தன்னைத்தானே சுற்றி வரும் என்பது இயற்பியலின் centripetal force விதி.


ஜிசாட்-16



ராக்கெட்டின் உள்ளே இப்படித்தான் மடக்கி வைக்கப்பட்டிருக்கும்.



                     ரி, செவ்வாய் வரை மங்கள்யானை அனுப்பிய நம்மால் 36,000 கிலோமீட்டருக்கு ஏன் அனுப்பமுடியாது? முடியும். மங்கள்யான் மாதிரி சிறிய செயற்கைக் கோளாய் இருந்தால் நம்மால் முடியும். ஜிசாட்-14 செயற்கைக் கோள் ஆனது 1982 கிலோகிராம் எடையுடையது. நமது ஜிஎஸெல்வி மார்க் 2 செலுத்து வாகனம் மூலம் அனுப்பிவிட்டோம். இதனால் அதிகபட்சம் 2500 கிலோகிராம் வரை ஏவ முடியும். தற்போது ஏவப்படும் ஜிசாட்-16 ஆனாது 3,100 கிலோகிராம் எடையுடையது. சுருங்கச் சொன்னால், 2500 கிலோகிராமுக்கு உட்பட்ட எடையுடைய செயற்கைக் கோள்களை மட்டுமே நம்மால் புவி இணை வட்டப்பாதையில் செலுத்த முடியும். அதனால் தான் ஜிசாட்-16 செயற்கைக் கோளை ஏவ ஐரோப்பிய விண்வெளி மையத்தின் உதவி தேவைப்படுகிறது. அவர்கள் ஏரியான் 5 ராக்கெட்டைப் பயன்படுத்துகின்றனர். அந்த வகை ராக்கெட்டுகள் கிட்டத்தட்ட 7,000 கிலோகிராம் எடையுடைய செயற்கைக் கோள்களை புவி இணை வட்டப்பாதையில் செலுத்தும் திறனுடையவை. ஏன் நம்முடைய ஐ எஸ் ஆர் ஓ வால் அப்படியான ராக்கெட்டைச் செய்ய முடியாதா எனக் கேட்பீர்களானால். இதுவரை முடியவில்லை என்பதுதான் பதில். ஜிஎஸ்எல்வி மார்க் 3 தயாரானால் 4,000 முதல் 5,000 கிலோகிராம் எடையுடைய  செயற்கைக் கோள்களை புவி இணை வட்டப்பாதையில் செலுத்தலாம். ஜிஎஸ்எல்வி மார்க் 3 யில் "க்ரையோஜெனிக்" எஞ்சின் எனும் வஸ்து இருக்கிறது. கொஞ்ச நாளாய் இந்தியாவிற்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருக்கிறது. இது தொடர்பான தனிக் கட்டுரை கடைசியில் கீழே.


சூரியத் தகடுகள் எனும் சோலார்ப் போனல்கள் சரியாக விரிவடையுமா எனும் சோதனை.



 இனி ஜிசாட்-16,

               தை ஏவுவது Ariane-5 VA-221 செலுத்து வாகனம் (ராக்கெட்). இன்சாட் எனும் சொல்லைக் கேள்விப்பட்டிருப்போம் அதற்கு மாற்றாகத் தான் இப்போதைய ஜிசாட் வரிசை செயற்கைக் கோள்கள் ஏவப்படுகிறது. நோக்கியோவிலிருந்து ஐபோனுக்கு மாறியதைப் போல என வைத்துக் கொள்ளுங்கள். ஏவுவது மட்டுமே ஐரோப்பிய விண்வெளி மையம். ஏவி முடித்ததும் செயற்கைக் கோள்களின் உயரம் உயர்த்துவது போன்ற (manoeuvres) வேலைகளைச் செய்வது ஐ எஸ் ஆர் ஓ தான். இதற்கென செயற்கைக் கோளில் LAM மோட்டார் இருக்கும். அவற்றை இயக்கி இதைச் செய்வர்.


மின்காந்தச் சோதனை (EMI-EMC).




செயற்கைக் கோளை கொஞ்சம் விலாவரியாகப் பார்ப்போம்.



தூய்மை அறை எனும் "க்ளீன் ரூம்" சோதனை.



தூய்மை அறை எனும் "க்ளீன் ரூம்" சோதனை.



                 ஜிசாட்-16 செயற்கைக் கோளானது ஏற்கனவேசெலுத்தப்பட்ட ஜிசாட்-8, ஐஆர்என்எஸ்-1ஏ  மற்றும் ஐஆர்என்எஸ்-1பி- செயற்கைக் கோள்களுக்கு இணையாக நிலை நிறுத்தப்படும்.

எடை: 3181.6 கிலோகிராம்
அளவு: 2மீ X 1.77மீ X 3.1மீ  வடிவம். 
LAM மோட்டார்: 440 நியூட்டன் திரவ மோட்டார்
மின்சக்தி: 180 AH லித்தியம் மின்கலன்களுடன் 6000 வாட் மின்சக்தி.
ஆண்டெனா: சி வரிசை ஆண்டெனா மற்றும் கேயூ வரிசை ஆண்டெனா 22மீ X 24 மீ நீள்வட்ட வடிவமுடையது. 
ஆயுட்காலம்: 12 வருடங்கள்.
பூமி மற்றும் சூரிய உணரிகள் (சென்சார்ஸ்) மூலம் இருப்பிடத்தை உறுதி செய்து கொள்ளும்.


Ariane 5ES with ATV 4 on its way to ELA-3.jpg
ஜிசாட்-16 ஐ செலுத்தும் ஏரியான் 5 செலுத்து வாகனம்.



             கேயூ வரிசயில் 12 டிரான்ஸ்பாண்டர்களும் சி வரிசையில் 24 டிரான்ஸ்பாண்டர்களும் உள்ளன. நீட்டிக்கப்பட்ட சி வரிசையில் 12 டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன. ஆக மொத்தம் 48 டிரான்ஸ்பாண்டர்கள். இத்தகைய டிரான்ஸ்பாண்டர்கள்தான் தகவல் தொடர்புக்கு உதவுகின்றன. ஐ எஸ் ஆர் ஓ இதுவரை தயாரித்த செயற்கைக் கோள்களில் அதிக பட்ச டிரான்ஸ்பாண்டர்கள் கொண்டது இதுதான். 55 டிகிரி கிழக்கில் நிலை நிறுத்தப்படுகிறது.

மேலும் சில புகைப்படங்கள் கீழே,


http://www.arianespace.com/images/missionup-dates/2014/1239-1.jpg




http://www.arianespace.com/images/missionup-dates/2014/1239-2.jpg




http://www.arianespace.com/images/missionup-dates/2014/1239-3.jpg


"க்ரையோஜெனிக்" தொடர்பான கட்டுரை.

ஜி எஸ் எல் வி உருவாக்கம்.

PSLV-C23 பற்றிய கட்டுரை.

பிஎஸ்எல்வி- சி26 PSLV- C26 (IRNSS-1C) பற்றிய கட்டுரை.

மங்கள்யானைப் பற்றியக் கட்டுரை.

புகைப்பட உதவி: ஐ எஸ் ஆர் ஓ, விக்கிப்பீடியா மற்றும் Arianespace.
 

இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் கருத்துகளை கீழே விட்டுச் செல்லுங்கள். நன்றி !!!





No comments:

எஞ்சினியர்ஸ்.

                      ஒ ரு காலத்தில் கனவுப் படிப்பாக இருந்தது. சீட் கிடைப்பதே பெரும்பாடு. நுழைவுத் தேர்வு எழுதி பன்னிரெண்டாம் வகுப்பின் கட்...