Thursday, November 27, 2014

வானியல்- 15 (வோயஜர் - voyager)



       வோயஜர் - voyager
  விண்வெளியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் எனக்குப் பிடித்த 10 திட்டங்களில் இது மூன்றாவது.

                  வோயஜர் 1 & 2 விண்கலன்கள் நாசாவுக்கு மிக முக்கியமானத் திட்டங்கள். பூமியிலிருந்து இதுவரை எந்த ஒரு விண்கலனும் செல்லாத பகுதியில் இவை சென்று கொண்டிருக்கின்றன. 35 வருடங்களாக செயல்பாட்டில் உள்ளது இத்திட்டம். 1977-ல் ஆரம்பிக்கப்பட்டவை இவை இரண்டும். "ப்ளூட்டோ"வையும் தாண்டிச் சென்று தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. 



                வோயஜர் 1 சூரியக் குடும்பத்தினையும் தாண்டிச் சென்றுவிட்டது. வோயஜர் 2 "Heliosphere" வெளி அடுக்கான "Heliosheath" பற்றி அதிகத் தகவல்களைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பகுதியில்தான் சூரியப் புயலின் தாக்கம் சூரியக்குடும்பத்தின் வெளியேயுள்ள Interstellar பகுதியின் அழுத்தத்தால் குறைவாக உள்ளது. எனவே இந்தப் பகுதியைப் பற்றிய தகவல்கள் பிற்கால ஆராய்ச்சிக்கு மிக மிக முக்கியமானதாகும். இவ்விரண்டு விண்கலன்களும் அனுப்பும் அறிவியல் தகவல்கள் தரைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள Deep Space Network-ன் ஆண்டெனாக்களால் சேகரிக்கப்படுகின்றன.

Voyager.jpg
வோயஜர் 1

               முதலில் இத்திட்டம் வியாழன் கிரகத்தையும் சனிக் கிரகத்தையும் ஆராயும் நோக்கிலே ஆரம்பிக்கப்பட்டது. வியாழனின் எரிமலைகளைப் பற்றியும், நிலவைப் பற்றியும் சனிக் கிரகத்தின் பிரம்மாண்ட வளையத்தைப் பற்றியுமான தகவல்களைத் திரட்டிய பின்னர் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டது. வோயஜர் 2 "யுரேனஸ்" மற்றும் "நெப்டியூன்" கிரகங்களை ஆராயுமாறு திட்டம் தீட்டப்பட்டது. இதுவரையில் இக்கிரகங்களை அடைந்த முதல் விண்கலன் இவைதான். அதன் பின்னரும் இத்திட்டம் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டது. இப்போது இத்திட்டத்தின் புதிய பெயர் Voyager Interstellar Mission (VIM). திட்டத்தின் நோக்கம். நமது சூரியனின் ஆளுகையின் வெளி அடுக்கையும் அதற்கும் வெளியேயான பகுதியையும் ஆராய்வது. 



                 இத்திட்டத்தின் மூலம் சூரியக் குடும்பத்திற்கு வெளியேயுள்ள கிரகங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பது. மேலும் சூரியக் குடும்பத்தின் வெளியேயுள்ள பிறவற்றையும் தெரிந்து கொள்வது. வோயஜர் விண்கலன்கள் ஆரம்பிக்கப்பட்ட போது நிர்ணயிக்கப்பட்ட நோக்கத்தையும் தாண்டி வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. வோயஜர் 1, 1977 செப்டம்பரிலும் வோயஜர் 2, 19977 ஆகஸ்டிலும் செலுத்தப்பட்டது. வோயஜர் 1 இதுவரை பூமிக்கும் சூரியனுக்குமானத் தொலைவைப் போல 40 மடங்குத் தொலைவு பயணம் செய்துள்ளது. வோயஜர் 2 பூமிக்கும் சூரியனுக்குமானத் தொலைவைப் போல 31 மடங்குத் தொலைவு பயணம் செய்துள்ளது. இப்போது சூரியனின் காந்தப் புலன்களின் விளைவுகளையும் "ப்ளாஸ்மா"த் துகள்களைப் பற்றியும் அதிகத் தகவல்களை இவை இரண்டும் தருகின்றன. வோஜயர் 1 ஒரு வருடத்தில் பூமிக்கும் சூரியனுக்குமிடையேயானத் தொலைவைப் போல 3.6 மடங்கு தொலவைக் கடந்துவிடும். வோஜயர் 2 ஒரு வருடத்தில் பூமிக்கும் சூரியனுக்குமிடையேயானத் தொலைவைப் போல 3.3 மடங்கு தொலவைக் கடந்துவிடும்.வோயஜர் 1 35 டிகிரி வடதிசையிலும் வோயஜர் 2 48 டிகிரி தென் திசையிலும் பயணிக்கின்றன.

சரி, இந்த வோயஜரில் என்ன உபகரணங்கள் உள்ளன?

Magnetic Field Investigation (MAG)

Low Energy Charged Particle Investigation (LECP)

Plasma Investigation (PLS)

Cosmic Ray Investigation (CRS)

Plasma Wave Subsystem (PWS)

இந்த ஐந்து உபகரணங்களும் நமக்குத் தேவையான தகவல்களை வழங்குகின்றன.


A space probe with squat cylindrical body topped by a large parabolic radio antenna dish pointing left, a three-element radioisotope thermoelectric generator on a boom extending down, and scientific instruments on a boom extending up. A disk is fixed to the body facing front left. A long triaxial boom extends down left and two radio antennas extend down left and down right.
வோயஜர் விண்கலன்

            இவ்விண்கலன்களிலுள்ள High Gain Antenna மூலம் s-band சிக்னல்கள் வழியாக தொடர்பு கொள்கிறோம். தொடர்பு கொள்ளும் வேகம் வினாடிக்கு 16 பிட்கள். (16-bits/Sec). விண்கலன் நமக்குத் தகவல்களை x-band மூலம் வினாடிக்கு 160 பிட்கள் (160-bits/Sec) வேகத்தில் அனுப்புகிறது. High Gain Antenna- வானது 3.7 மீட்டர் வடிவமுடையது. இந்த High Gain Antenna எப்போதும் பூமியைப் பார்த்தே இருக்கும் படி Attitude and Articulation Control Subsystem மூலம் சரி செய்யப்படுகிறது. இவ்விண்கலன்களிலுள்ள கணிப்பொறிகள் High Gain Antenna வைக் கட்டுப்படுத்துவதிற்கும், விண்கலன்களின் உபகரணங்களிலிருந்து பெறப்படும் தகவல்களை பிரித்தெடுத்து பிழை களைந்து பூமிக்கு அனுப்பும் பணியைத் தானாக செய்யும்படி வடிவமைக்கப்பட்டவை.

3.7 மீட்டர் High Gain Antenna


                இவ்விண்கலனுக்குத் தேவையான மின்சக்தியை மூன்று Radioisotope thermoelectric Generators (RTG) அளிக்கின்றன. ஒவ்வொரு விண்கலனும் இயங்க 315 வாட்ஸ் மின்சக்தி தேவை. மின் உற்பத்திக் குறையும் பட்சத்தில் சில கருவிகள் தானாகவே அணைந்துவிடும்படி இவை வடிவமைக்கப்பட்டுள்ளது. 


Radioisotope thermoelectric Generators (RTG

                தற்போதைய நிலவரப்படி இவ்விரண்டு விண்கலன்களிலும் சில கருவிகள் அணைத்தே வைக்கப்பட்டுள்ளன.



தொடரும்...


புகைப்பட உதவி:  விக்கிப்பீடியா.

இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் கருத்துகளை கீழே விட்டுச் செல்லுங்கள். நன்றி !!!

கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள்.

No comments:

எஞ்சினியர்ஸ்.

                      ஒ ரு காலத்தில் கனவுப் படிப்பாக இருந்தது. சீட் கிடைப்பதே பெரும்பாடு. நுழைவுத் தேர்வு எழுதி பன்னிரெண்டாம் வகுப்பின் கட்...