Knowledge is good only if it is shared.

Monday, November 24, 2014

வானியல்- 14 (அண்டம் - Galaxy)

            ஏற்கனவே நாம் நமது சூரியக் குடும்பத்தைப் பற்றி பார்த்துவிட்டோம். இந்தச் சூரியக் குடும்பம் தவிர்த்து இன்னும் பல நட்சத்திரங்கள் நமது சொந்த பால்வெளி மண்டலத்திலே இருக்கின்றன என்றும் அவற்றிற்கும் குடும்பம் எனும் நமது பூமியைப் போன்ற கிரகங்கள் இருக்கின்றன எனவும் "லைட்"டாகப் பார்த்தோம். இந்த அத்யாயத்தில் "கேலக்ஸி" என வழங்கப்படும் அண்டத்தைப் பற்றிப் பார்ப்போம். பிரபஞ்சத்தோடு குழப்பிப் கொள்ள வேண்டாம்.


NCG 4414 சுருள் வடிவ அண்டம்

                   அண்டம் என்பது என்ன? பல ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் அவற்றினுடைய கிரகங்கள் விண்கற்கள் தூசு மற்றும் வாயுகள் ஆகியவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு இயங்குவது அண்டம் ஆகும். இந்த அண்டம் பிரபஞ்சத்தின் ஓர் அங்கம். நமது சூரியக் குடும்பம் இருக்கும் அண்டத்தின் பெயர் பால் வெளி அண்டம் (Milky way galaxy).

ஹப்பிள் தொலைநோக்கி படம்பிடித்த பிரபஞ்சத்திலுள்ள அண்டங்கள்


                பொதுவாக அண்டங்கள் மிகப் பெரியது. 2,00,000 ஒளி வருடங்கள் நீளமுடையவை இவை. இவ்வாறு பல அண்டங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன. நமது பால் வெளி அண்டத்தில் நமது பூமி, நடுவிலிருந்து எல்லை வரையிலான தூரத்தில் மூன்றில் இரண்டு பங்குத் தொலைவில் அமைந்துள்ளது. நமது பால் வெளி அண்டம் சுருள்வடிவமுடையது. இந்த அண்டத்தில் "ஓரையான்" எனதும் பகுதியில் நமது பூமி அமைந்துள்ளது. நமது அண்டத்தின் அருகாமையிலுள்ள அண்டம் "ஆண்ட்ராமீடா கேலக்ஸி" என அழைக்கின்றனர். அதுவும் நம்மைப் போலவே சுருள் வடிவ அண்டம் தான். சுருள் வடிவம் போக நீள்வட்ட வடிவ அண்டம் மற்றும் ஒழுங்கற்ற வடிவமுடைய அண்டம் எனஇன்னும் இரண்டு வகை உண்டு.

NCG 1300


                  பொதுவாக அண்டத்தின் நடுவில் மிக அதிக சக்திவாய்ந்த கருந்துளை உண்டு. (கருந்துளை பற்றி தனிக் கட்டுரையில் பார்க்கலாம்) கருதுளை மட்டுமல்ல, பலபேர் கேட்டிறாத "க்வேஸ்ர்கள்" ( இதைப்பற்றியும் தனிக் கட்டுரையில் பார்க்கலாம்) கூட உண்டு. அந்த கருந்துளையின் மையத்தை நோக்கி அனைத்து நட்சத்திரங்களும் நகருகின்றன. ஏற்கனவே பார்த்த நமது பக்கத்து வீட்டுக்காரரான "ஆண்ட்ராமீடா கேலக்ஸி" நம்மிலிருந்து 22 இலட்சம் ஒளியாண்டுகள் தொலைவில் இருகிறார்.

வட்டவடிவ அண்டம்


                   வினாடிக்கு 3 இலட்சம் கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் 22 இலட்சம் வருடம் கழித்து "ஆண்ட்ராமீடா கேலக்ஸி"யை அடையலாம். இந்த "ஆண்ட்ராமீடா கேலக்ஸி"யும் நமது பால்வெளிஅண்டமும் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருகின்றன. 6,70,000 கிலோமீட்டர்/மணி வேகத்தில் நெருங்குகின்றன. இன்னும் 500 கோடி வருடங்கள் கழித்து ஒன்றுடன் ஒன்று இரண்டறக் கலந்துவிடும்.

NCG 5866


                   கேலக்ஸிகளின் பெயர்கள் எண்களாக இருக்கும். அந்த எண்களுக்கு முன்னர் New General Catalog என்பதன் சுருக்கமான NGC அல்லது European Southern Observatory என்பதன் சுருக்கமான ESO அல்லது Infrared Astronomical Satellite என்பதன் சுருக்கமான IRAS அல்லது Markarian என்பதன் சுருக்கமான M அல்லது Uppsala General Catalog என்பதன் சுருக்கமான UGC எனக் குறிப்பிடப்படும். சில வேளைகளில் ஒருசில கேலக்ஸிக்களுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட பெயர்களும் இருக்கும். காரணம் இரண்டு  Catalog-களில் அவற்றின் பெயர் பதியப்பட்டிருக்கும்.





                       விஞ்ஞானிகள் இந்த கேலக்ஸிகளை அவற்றிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களைக் கொண்டு ஆராய்கின்றனர். பொதுவாக கேலக்ஸிகள் எல்லா வகையான மின்காந்தக் கதிர்வீச்சையும் உமிழும். ஆனால் இந்த புறஊதாக் கதிர்கள் அதிகச் சேதாரமில்லாமல் பூமியை வந்தடைவதால் அக்கதிர்களை ஆராய்வதின் மூலம் இந்த அண்டங்கள் மற்றும் அவற்றிலுள்ள நட்சத்திரங்களின் பிறப்பை அறிய இயலும்.


M82


               இந்த அண்டங்களிலுள்ள நட்சத்திரங்கள் உமிழும் வெளிச்சத்தின் அளவை வைத்து அந்த அண்டம் எவ்வளவு தொலைவில் அமைந்துள்ளது என விஞ்ஞானிகள் கணக்கிடுகின்றனர். 1000 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள அண்டங்களையும் இவ்வாறு கணக்கிட்டுள்ளனர்.


ஆண்ட்ரோமீடா கேலக்ஸி


               நம் பால்வெளி அண்டத்திலிருந்து தொலைவில் அமைந்துள்ள அண்டங்கள் நம்மிடமிருந்து வேகமாக நகர்ந்து செல்கின்றன. இருப்பிடத்தின் தொலைவு அதிகரிக்க அதிகரிக்க அவை நம்மைவிட்டு விலகிச் செல்லும் வேகமும் அதிகரிக்கின்றன. இதுதான் "ஹப்பிள்" விதி. இவர்தான் நமது வானவெளியில் தொலைவில் மேகங்களாகக் காணப்படுபவை பிற அண்டங்கள் என்பதைக் கண்டுணர்ந்து சொன்னவர். மேலும் அண்டங்களை அவற்றின் உருவங்களை வைத்து இவர்தான் வகைப்படுத்தினார். அவரைக் கெளவுரவிக்கவே ஒரு வானியல் தொலைநோக்கிக்கு "ஹப்பிள் தொலைநோக்கி" எனப் பெயரிடப்பட்டது.

         எல்லாம் சரி நம்து பிரபஞ்சத்தில் மொத்தம் எவ்வளவு அண்டங்கள் இருக்கின்றன? இக்கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள "ஹப்பிள்" எடுத்த புகைப்படம் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு புகைப்படம். அதிலே ஆயிரக்கணக்கான அண்டங்களை கணக்கிட்டுள்ளனர். தற்போது நம்மிடம் இருக்கும் கருவியைக் கொண்டு கணக்கிட்டதில் பிரபஞ்சத்தில் 10,000 கோடி முதல் 20,000 கோடி அண்டங்கள் இருக்கின்றன.

சரி, பிரபஞ்சம் என்றாலே அனைத்தும் அடக்கம். ஆனால் ஒரு பிரபஞ்சம் அல்லது வேறு பிரபஞ்சம் இருக்கிறதா?


தொடரும்...


புகைப்பட உதவி:  விக்கிப்பீடியா.

இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் கருத்துகளை கீழே விட்டுச் செல்லுங்கள். நன்றி !!!

கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள்.

No comments:

எஞ்சினியர்ஸ்.

                      ஒ ரு காலத்தில் கனவுப் படிப்பாக இருந்தது. சீட் கிடைப்பதே பெரும்பாடு. நுழைவுத் தேர்வு எழுதி பன்னிரெண்டாம் வகுப்பின் கட்...