2014- 28E
2014- 28E கடந்த சில நாட்களாக (4 நாட்களாக) விண்வெளி ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விசயம் இதுதான். என்னைப் போல அமெச்சூர் வானியல் ஆர்வலர்கள் வேலைவெட்டி இல்லாமல் செயற்கைக்கோள்களையும் அவற்றின் நகர்வுகளையும் ஓர் ஆர்வத்தில் கண்காணித்துக் கொண்டிருப்போம். (இதைப்பற்றி ஹப்பிள் கட்டுரையில் எழுதியிருக்கிறேன்) அப்படி கண்காணித்துக் கொண்டிருந்தவர்களின் கண்களில் சிக்கியதுதான் இந்த 2014- 28E செயற்கைக் கோள். பொதுவா யோக்கியனுக்கு இருட்டில் என்ன வேலை? என்போம். அதேப் போலவே இந்த 2014- 28E செயற்கைக் கோளின் நடவடிக்கைகள் கொஞ்ச நாட்களாகவே சரியில்லை. தேவையில்லாமல் அங்கும் இங்கும் இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறது.
யார்றா இதோட ஓனர்னு விசாரிச்சா? வந்து விழுந்த பெயர் ரஷ்யா. ஆம் ரஷ்யாவின் இராணுவ செயற்கைக் கோள் இது. அவ்ளோதான் அமெரிக்கா "லபோதிபோ"ன்னு குதிக்க ஆரம்பிச்சாச்சு. என்னதான் அமெரிக்கா வல்லரசு என்றாலும் ரஷ்யாவின் விண்வெளித் திறமையை மதித்தே ஆக வேண்டும். "ஸ்புட்னிக்" முதல் இன்று வரை விண்வெளியில் அவர்களும் "கிங்" தான். ஏற்கனவே சர்வதேச விண்வெளி நிலையத் திட்டத்திலிருந்து 2020 -ல் நாங்கள் விலகப் போகிறோம்னு அமெரிக்காவிற்கு கஷாயம் கொடுத்துள்ளது ரஷ்யா. அதுமட்டுமல்ல எங்களின் RD-180 ராக்கெட் இயந்திரத்தை அமெரிக்கா தனது இராணுவத் தேவைகளுக்காக ராக்கெட்டுகளில் பயன்படுத்தக்கூடாது எனவும் ரஷ்யா கவுண்டர் கொடுத்தாங்க. எதுக்காக இந்தக் கவுண்டர்னா "உக்ரைன்" பிரச்சனையில் ரஷ்யாவின் நிலைபாட்டை அமெரிக்கா எதிர்த்ததுதான். பேட்டைலை ஒரு ரவுடிதான் இருக்க வேண்டும் அதுவும் நானாகவே கடைசி வரை இருப்பேன் என்பது அமெரிக்காவின் வாதம். இவ்ளோ டீட்டெயில் நமக்குத் தேவையில்லை. 2014- 28E க்குத் திரும்புவோம்.
2014- 28E நகர்வுகள் |
விஞ்ஞானிகள் ரெம்பத் துருவி விசாரித்ததில் இதைப் பற்றிக் கிடைத்த தகவல் கீழே..
பெயர்: 2014- 28E
உரிமையாளர்: ரஷ்யா
வாழ்நாள்: தெரியாது
எங்கே நிலை கொண்டுள்ளது: தெரியாது
என்ன காரணத்திற்காக ஏவப்பட்டது: தெரியாது
சரி, என்னதான் செய்யும் இந்தச் செயற்கைக் கோள்: தெரியாது.
இப்போ சொல்லுங்க இவ்ளோ தெரியாது இருந்தால் அமெரிக்காவுக்கு கிலி பிடிக்குமா இல்லையா?

அவங்களுக்குத் தெரிந்த தகவல் மிகவும் குறைவு. 2014- 28E என்ற பெயர். பெயர் எதுவாக இருந்தாலும் ஒன்றுமில்லை. இவ்வளவு ஏன் பெயரே வைக்கப்படவில்லை என்றாலும் பரவாயில்லை. அதனால் எந்த குடிமோசமும் ஆகப் போவதில்லை. இதை ஏவியது ரஷ்யா என்பதுதான் அமெரிக்காவின் உதறலுக்குக் காரணம். ராணுவத் தகவல் தொடர்புக்காக ஆறு மாதத்திற்கு முன்னர் ரஷ்யா ஏவியது இந்தச் செயற்கைக் கோள் என்ற ஒத்தை தகவல்தான் இதுவரை திரட்ட முடிந்தது. (இல்லை, நாங்க தொடர்ந்து கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம் எனவும் அமெரிக்கா சொல்கிறது)
காலாவதியான பல்வேறு செயற்கைக் கோள்கள் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இது என முதலில் நினைத்திருந்தனர். அப்புறம் பார்தால் ரஷ்யாவின் பிற செயற்கைக் கோள்களுக்கு அருகில் நெருங்கிச் செல்வதும் தகவல் பரிமாறூவதுமாக இருந்திருக்கிறது. கடைசியில் ஒரு செயற்கைக் கோளுடன் இணைந்து கொண்டது.

அவ்வளவுதான் அனுமரின் வாலில் தீப்பிடித்து இலங்கை எரிந்ததுபோல், ஆளாளுக்கு குதிக்க ஆரம்பித்துவிட்டனர். இது விளாதிமிர் புதினின் அடுத்த கட்ட நடவடிக்கை. பனிப்போர், பவர் ப்ளே அது இது என குதித்தனர். ஒற்றை வார்த்தையில் சொல்வதானால், இந்தச் செயற்கைக் கோள் பிற செயற்கைக் கோள்களைக் தாக்கும் ஆயுதம் என சந்தேகிக்கின்றனர் அறிஞர்கள். சந்தேகம் என்பதைவிட பயம் என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும். அமெரிக்காவும் சைனாவும் கூட இப்படி செயற்கைக் கோள்களைத் தாக்கும் வல்லமையைக் கொண்டுள்ளனர். இதற்கு முன்னர் பரிசோதித்தும் பார்த்திருக்கின்றனர். சைனாவுடன் இணைந்து ஹேக்கர்கள் அமெரிக்க வானிலைக் கண்காணிப்பு செயற்கைக் கோளில் புகுந்து விளையாடிய சம்பவமும் இதற்கு முன்னர் நடந்துள்ளது.
இந்த அக்கப்போரெல்லாம் செயற்கைக் கோள்களை பழுதுபார்க்கவும் அல்லது விண்வெளிக் கழிவுகளை கையாளுவதற்குமான பயிற்சியாகவும் இருகலாம் என்ற யூகமும் முன்வைக்கப்படுகிறது. மொத்தத்தில் வயற்றில் புளியைக் கரைக்கும் விஷயம் என்னவெனில் ரஷ்யா இந்தச் செயற்கைக் கோள்களைப் பற்றி மிகக்குறைவான தகவல்களையே வெளியிட்டுள்ளது.
X-37B |
இதுல ரெம்பப் பெரிய காமெடி என்னவெனில் X-37B என்ற திருநாமமுடைய அமெரிக்காவின் விண்வெளிக்கப்பல் அதிஉயர் உளவுக் காரணங்களுக்காக விண்வெளியில் 22 மாதங்கள் சுற்றிவிட்டு திரும்பியது. இப்போ ரஷ்யாவின் முறை. ஹிஹி... ரஷ்யாவின் டீல், உனக்கு X-37B எனில் ஏன் எனக்கு 2014-28E ஆக இருக்கக் கூடாது?
நன்றி: கெட்டி இமேஜஸ் மற்றும் இணையத்தளங்கள்.
இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் கருத்துகளை கீழே விட்டுச் செல்லுங்கள். நன்றி !!!
No comments:
Post a Comment