Knowledge is good only if it is shared.

Monday, November 17, 2014

வானியல்- 11 (நெபுலா)

                       துவரையிலான பகுதிகளில் சூரியக் குடும்பத்தினைப் பற்றிப் பார்த்தோம். இனி இப்பதிவில் நெபுலாவைப் (Nebula) பார்க்கலாம். அதற்கு முன்னர் ப்ரதீப் குமார் மற்றும் வடுவூர் குமாருக்கு நன்றி. திரு.ஜெயபாரதனின்  கட்டுரைகளைப் முடிந்தால் பாருங்கள் என வடுவூர் குமார் குறிப்பிட்டிருந்தார். திண்ணை இணையதளத்தில் அவரது பெரும்பாலானக் கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். பல அறிவியல் கட்டுரைகளை எழுதிவருகிறார். அதைப் பற்றிக் கருத்துச் சொல்லி வா.மணிகண்டனைப் போல ஆக விருப்பமில்லை. ஸோ..விடு ஜூட்...!


கம் பேக் டு நெபுலா...

கீழே உள்ள புகைப்படத்தைப் பாருங்கள்..


The Butterfly Nebula
வண்ணத்துப் பூச்சி நெபுலா 

                            ம் விண்வெளியில் இருக்கும் பல்வேறு நெபுலாக்களில் இதுவும் ஒன்று. இவ்வகையான நெபுலாக்களுக்கு பூக்கள் மற்றும் பறவைகளின் பெயர்களை வைப்பது வழக்கம். இந்த நெபுலாவிற்கான பெயர்க்காரண விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்.
                   பொதுவாக நெபுலாக்கள் மேகத் திரள்கள் ஆகும். நெபுலா எனும் இலத்தீன் வார்த்தைக்கு மேகம் என்றுதான் பெயர். ஆனாலும் இவை வெறும் மேகமல்ல. அவற்றையும் தாண்டிப் புனிதமானது..னிதமானது...தமானது..மனாது.. இத்தகைய நெபுலாக்கள் விண்வெளியில் ஆங்காங்கே விரவிக் கிடக்கின்றன. ஹப்பிள் போன்ற தொலைதூர விண்வெளி நோக்கிகளால் இவற்றை ஓரளவுத் தெளிவாகக் காணமுடியும். மேலேயுள்ள வண்ணத்துப் பூச்சி நெபுலாவில் ஒரு சிறகிலிருந்து மற்றொரு சிறகின் எல்லை வரையிலான தூரம் மூன்று ஒளியாண்டுகள் (Light Year). நேரம் போகவில்லையெனில் பெருக்கிப் பாருங்கள். 2,83,82,19,14,17,74,24,00,00,00,00,00,00,00,000 கிலோமீட்டர்கள் தொலைவு வந்ததா? முதுகில் தட்டிக் கொள்ளுங்கள். இதிலுள்ள விசித்திரம் என்னவெனில் இத்தகைய நெபுலாவின் நிறை மிகவும் குறைவு. பூமியின் அளவுள்ள நெபுலா சில கிலோகிராம் மட்டுமே இருக்கும். ஆனால் இதன் அடர்த்தி அதிகம். எனவே இதன் ஈர்ப்புவிசையும் அதிகம். பொதுவாக இவற்றின் நிறைகளை எப்படிக் கணக்கிடுகிறார்கள்? இங்குதான் கெப்ளர் (Kepler) எனும் ஜாம்பவானை நினைவுகூறல் வேண்டும். கெப்ளரின் மூன்றாவது விதி இதற்குத் துணைபுரிகிறது.                       நெபுலாக்களில் தான் நட்சத்திரங்கள் உருவாகின்றனது. உருவாவது மட்டுமல்ல  அவை தன் புறவட்ட அடுக்கை (Outer Layer) இழந்து மடிவதும் இங்கே தான். சில வருடங்களுக்கு முன்னர் நெபுலா தொடர்பாக நான் பார்த்த ஆவணப்படத்தில் இதைப் பற்றிச் சொல்லும் போது நடராஜரின் சிலையைக் காட்டி இந்துமதக் கடவுளான சிவனின் ஆக்கலும் அழித்தலும் பற்றியும் அதற்கும் இதற்குமான தொடர்பையும்  நினைவு கூர்ந்தார் வர்ணனையாளர்.

See Explanation.  Clicking on the picture will download
 the highest resolution version available.
வளைய நெபுலா


                 நெபுலாக்கள் அதிஉயர் கதிர்களை வெளியிடுகின்றன. விண்வெளி என்பது நாம் நினைப்பது போல ஒன்றுமற்ற வெளி அல்ல. நெபுலாக்களில் ஹைட்ரஜன், ஹீலியம் மற்றும் ப்ளாஸ்மா போன்றவை செறிவுடன் காணப்படுகின்றன. இவை எல்லாம் அதி அழுத்தத்தில் ஒன்று சேர்ந்து அதிக அடர்த்தியாக மிக அதிக ஈர்ப்பு விசையைக் கொண்டுள்ளன. இவ்வாறு ஒன்று சேர்ந்து அவை அதிக நிறையுடையதாகும் போது அதன் ஈர்ப்புவிசை இன்னும் அதிகமாக தன்னைச் சுற்றியுள்ள பிர திரள்களையும் தன்னுள் இழுக்கின்றன. இப்பிடியே கட்டுக்கடங்காமல் அழுத்தமும் நிறையும் ஈர்ப்புவிசையும் அதிகரித்துக் கொண்டே போக, போகிறபோக்கில் அணுக்கரு இணைவு (Nuclear Fusion) உண்டாகிறது. சூரியனில் நிகழும் அதே வினை.               த்தகைய நெபுலாக்களில் இவ்வாறனான அணுக்கரு இணைவினால் ஏற்படும் மின்காந்தக் கதிர்வீச்சு (Electromagnetic Radiation) அதன் ப்ளாஸ்மாவுடன் (Plasma) சேர்ந்து கொண்டு "டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்" எனும் கீதத்தோடு நட்சத்திரம் பிறக்க வழி செய்கிறது. இந்த நட்சத்திரம் தனது வளிமண்டலத்தினை இழந்து இறந்து மீண்டும் நெபுலாவாவதும் நடக்கிறது. அதை "ப்ளானட்டரி நெபுலா" (Planetary Nebula) என்பர். இது போல நெபுலாவில் நான்கு வகை உண்டு. நமக்கு மிகவும் பரிட்சயமான "சூப்பர் நோவா"வும் (Supernova Remnants) நெபுலாவின் வகைதான். மீதமுள்ளவை "க்ளாஸிக்கல் நெபுலா" (Classical) மற்றும் "டிஃபியூஸ் நெபுலா" (Diffuse).ஒரு ரகசியம்: நவம்பர் மாத இரவு வானில் பதினென்று மணிக்குப் பின்னர் கிழக்குத் திசையிலிருந்து மூன்று நட்சத்திரங்கள்  வரிசையாய் இருக்குமாறு நடுவானை நோக்கி மெதுவாக நகர்ந்து வந்து கொண்டிருக்கும். அதை "ஓரியன்" (Orion) என்பர். அந்த நட்சத்திரக் கூட்டத்தினைப் தொலை நோக்கியால் பார்த்தால் அங்கே "ஓரியன்" நெபுலா பிரகாசிக்கும். விண்வெளி ஆய்வாளர்கள் அடிக்கடி ஆய்வு செய்யும் நெபுலா இது. ஆனால் எனது சிறு வயது முதல் ஓரியன் நட்சத்திரத்தைப் பார்த்து வருகிறேன். நெபுலாவைப் பார்க்க வாய்ப்புக் கிடைக்குமா எனத் தெரியவில்லை. ஓரியன் கீழே...
 

தொடரும்...
புகைப்பட உதவி: நாசா மற்றும் விக்கிப்பீடியா.

இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் கருத்துகளை கீழே விட்டுச் செல்லுங்கள். நன்றி !!!


கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம்.


2 comments:

Anonymous said...

Nice Bala keep it up expecting more

பாலா.R ( BALA.R ) said...

நன்றி :)

திரிபுவாதம்

     முதலில்  விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் " தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...