Knowledge is good only if it is shared.

Saturday, November 1, 2014

வானியல்- 10 (சூரியக் குடும்பத்திற்கும் அப்பால்)
சூரியக் குடும்பத்திற்கும் அப்பால்...

        துவரையிலான கட்டுரைகளில் சூரியனையும், அதை மையமாகக் கொண்டு சுழலும் பூமி முதலான கிரகங்களையும், அக்கிரகங்களில் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையேயான விண்கற்களையும், நெப்டியூனுக்குப் பிறகான பனிப் பகுதியில் உள்ள புளூட்டோ உள்ளிட்ட சிறுகிரகங்களையும் அங்கிருந்து கிளம்பி வரும் வால் நட்சத்திரங்களையும் சுருக்கமாகப் பார்த்தோம். சரி, இந்த கைப்பர் பட்டை, ஓர்ட் க்ளவுட் பகுதிக்குப் பின்னர் என்ன இருக்கிறது? மொத்த உலகமே இவ்வளவுதானா என்றால் இல்லை. நாம் இதுவரை பார்த்தது சூரியன் எனும் நட்சத்திரக் குடும்பத்தின் உறுப்பினர்களைப் பற்றி. இந்தச் சூரியன் இருக்கும் பால்வெளி மண்டலத்தில் இன்னும் பல நட்சத்திரங்கள் இருகின்றன.

 

Milky Way Annotated
நமது பால்வெளி அண்டம்


                  வற்றிற்கும் குடும்பம் (கிரகங்கள்) உண்டு. நமது பால்வெளி மண்டலத்தில் மட்டும் சூரியனைப் போல ஒரு இலட்சம் கோடி நட்சத்திரங்கள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கின்றனர். இதை எப்படிச் சொல்லலாம் எனில் இதுவரை நாம் பார்த்த சூரியக் குடும்பம், ஒரு கிராமத்திலுள்ள ஒரு வீட்டிலுள்ள உறுப்பினர்களை மட்டுமே. இன்னும் அக்கிராமத்தில் வேறு வீடுகள் இருக்கின்றன. இது போல பல கிராமங்கள் இருக்கும். நமது பால்வெளி மண்டலத்தைப் போல மொத்தம் இந்தப் பிரபஞ்சத்தில் இலட்சம் கோடி அண்டங்கள் இருக்கின்றன. வெயிட் ப்ளீஸ்....இவையெலாம் இந்தப் பிரபஞ்சத்தில் வெறும் 5 சதவீதம் தான். தலை சுற்றுகிறதா? எனக்குச் சுற்றியது ஒரு காலத்தில். வானியலின் மீதான ஆர்வம் எனது எட்டு வயதில் தோன்றியது. கண்டதையும் படித்தவன் பண்டிதனாவான் என்பதைப் போல எதையெல்லாமோ படித்து மண்டை கிறுக்கானதுதான் மிச்சம். "ஐன்ஸ்டீனின்" "பிரபஞ்சமும் டாக்டர் ஐன்ஸ்டீனும்" என்ற புத்தகம் என்னைப் புரட்டிப் போட்ட ஒன்று. குழந்தைகளும் விரும்பிப் படிக்கும் வகையிலான ஒன்று. சற்று பழைய சிந்தனைகளில் தொகுப்பு என்றாலும், நமது சிந்தனையைக் கிளறி "அட, ஆமால்ல.." எனக் கேட்க வைக்கும் வகையிலான புத்தகம். சொந்தக் கதையை விட்டுவிட்டு வானியலுக்கு வருகிறேன்.

The Majestic Sombrero Galaxy (M104)
தொலைவிலுள்ள மற்றுமோர் கேலக்ஸி


                    வெறும் 5% தான் மேற்குறிப்பிட்ட அண்டங்கள் என்றேன். மீதியுள்ளவை? 68 % கறுப்பு ஆற்றல், 27 % கறுப்புப் பொருள். இவற்றைப் பற்றிய ஆராய்ச்சியில் மிகக் குறைந்த அளவே அவற்றைப் பற்றித் தெரியும். மனித குலத்தால் அத்தனை அண்ட சராசர பிரபஞ்சங்களையும் ஒருகாலமும் முழுவதுமாய் அறிய முடியாது என்றே தோன்றுகிறது.

Hubble Ultra Deep Field 2014 (click to enlarge)
ஹப்பிள் தொலைநோக்கி படம்பிடித்த நமது பிரபஞ்சத்தின் ஒரு பகுதி                மது பால்வெளி அண்டத்தின் அருகே நம்மைப் போலவே 30 அண்டங்கள் இருக்கிறது. மிகப் பக்கத்தில் இருப்பவர் "ஆண்ட்ராமீடா (Andromeda) கேலக்சி". நமது பால்வெளி அண்டம் எவ்வளவு பெரியது? ஒரு மணி நேரத்தில் மூன்று இலட்சம் கிலோமீட்டர் தொலைவு நீங்கள் பயணம் செய்தால் நமது பால் வெளி அண்டத்தின் கன்னியாக்குமரியிலிருந்து காஷ்மீர் வரை (ஒரு எல்லையிலிருந்து மறு எல்லை வரை) சென்று வர ஒரு இலட்சம் ஆண்டுகள் ஆகும். நமது சக்திக்கு உட்பட்டு இதுவரை 1,700 கிரகங்களைக் (extrasolar planets) கண்டுபிடித்துள்ளோம். இன்னும் பல ஆயிரக்கணக்கான கிரகங்கள் இருக்கின்றன. பூமியில் மட்டும்தான் உயிரினங்கள் இருக்குமா என்ன? இந்த ஆயிரமாயிரம் கிரகங்களில் ஒன்றில் கூடவா இருக்காது. அப்படி ஏதாவது இருக்கிறதா எனவும் தேடுதல் நடக்கிறது. அத்தகைய உயிரினங்கள் நம்மைவிட புத்திசாலி, அவற்றின் பெயர் ஏலியன் எனவும் ஒரு பக்கம் கதை ஓடுகிறது. பறக்கும் தட்டு, லொட்டு லொசுக்கு என செம த்ரில்லான டாப்பிக் அது.

Pillars of Creation
நெபுலா


             "ப்ளாக் ஹோல்" எனும் சமாச்சாரம் ஒன்று இருக்கிறது. நட்சத்திரங்கள் பிறந்து, வளர்ந்து, ஒளிவிட்டு, சாகும் தருவாயில் "ப்ளாக் ஹோல்" ஆகிவிடும். இதை கருந்துளை என அழகாய்த் தமிழ்ப்படுத்திருக்கின்றனர். பெயர்தான் கருந்துளை. மிகக்குறைவான இடத்தில் அபரிதமான ஆற்றலைக் கொண்டுள்ளது இந்தக் கருந்துளை. இந்த ஆற்றலின் ஈர்ப்பு விசையிலிருந்து எதுவுமே தப்பமுடியாது. ஆம், ஒளி உட்பட... அப்புறம் எப்படி இதை ஆராய்வது :( தற்போதைக்கு இத்தகைய கருந்துளைகள் இருப்பதை, அதைச் சுற்றி உள்ள நட்சத்திரங்கள் அண்டங்களின் நகர்வைக் கொண்டு அறிகின்றனர். தண்ணீரில் உள்ள சுழி, தண்ணிரில் மிதக்கும் இலை தழைகளைச் சுருட்டி தன் குழிக்குள் இழுப்பதைப் போல இந்தக் கருந்துளை தன்னைச் சுற்றியுள்ள நட்சத்திரங்களை "ஸ்வாகா" செய்கிறது. 


Stellar Quakesநமது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ளவற்றைபற்றி அறிய தற்போது நமக்கு, 

  • Astrophysics Missions
  • Voyager 1 & 2
  • Hubble Telescope


போன்றவை உதவியாய் உள்ளன.


http://solarsystem.nasa.gov/multimedia/gallery/Interstellar_SS.jpg
Voyager 1 & 2கடந்த காலங்களில்,

  • Pioneer 10 & 11
  • Deep Impact (EPOXI)
  • WISE (NEOWISE)

போன்றவை உதவியாய் இருந்தன.

                நமது பால்வெளி அண்டத்திலுள்ள அனைத்து நட்சத்திரங்களும் (சூரியன் உட்பட) பால்வெளி மண்டலத்தின் மையத்திலுள்ள கருந்துளையைச் சுற்றி வருகின்றன. நமது சூரியனைவிட 40 இலட்சம் மடங்கு ஆற்றலுடையது அந்தக் கருந்துளை. பூமியிலிருந்து அந்தக் கருந்துளையை அடைய, முன்பே கூறியது போல வினாடிக்கு மூன்று இலட்சம் கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் 28,000 வருடங்களில் போய்ச் சேர்ந்துவிடலாம். !!!

          நிலவுக்கு மனிதன் சென்றதே அதிகபட்ச தூரம். இன்னும் 15 வருடங்களில் செவ்வாய்க்குச் செல்லலாம். சூரியக் குடும்பத்தைவிட்டே இன்னும் நமது கருவிகள் வெளியே செல்லவில்லை. கோடிக்கனக்கான நட்சத்திரங்கள், அண்டங்கள்...பிரபஞ்சம் என கற்பனையில்தான் பிரயாணிக்க முடியும்.

நமது விண்வெளியினைப் பற்றி ஓரளவிற்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

இன்னும் தொடர்ந்து பார்க்கலாம்...தொடரும்...

புகைப்பட உதவி: நாசா.

 கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம்.

இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் கருத்துகளை கீழே விட்டுச் செல்லுங்கள். நன்றி !!!

3 comments:

pradeep kumar said...

Super gi you have explained very simply write about super and hyper nova and how black holes are created

வடுவூர் குமார் said...

வெகு அரிதாக விண்வெளி பற்றிய கட்டுரைகள் வெளிவரும் அதில் இதுவும் ஒன்று.திரு ஜெயபாரதன் பதிவுகளை முடிந்தால் பாருங்கள்.

பாலா.R ( BALA.R ) said...

நன்றி pradeep kumar மற்றும் வடுவூர் குமார். திரு. ஜெயபாரதன் அவர்களின் கட்டுரையை திண்ணை இணைய இதழில் படிதிருக்கிறேன். உங்கள் இருவரின் கருத்திற்கு மிக்க நன்றி :)

திரிபுவாதம்

     முதலில்  விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் " தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...