Knowledge is good only if it is shared.

Thursday, November 27, 2014

வானியல்- 15 (வோயஜர் - voyager)



       வோயஜர் - voyager
  விண்வெளியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் எனக்குப் பிடித்த 10 திட்டங்களில் இது மூன்றாவது.

                  வோயஜர் 1 & 2 விண்கலன்கள் நாசாவுக்கு மிக முக்கியமானத் திட்டங்கள். பூமியிலிருந்து இதுவரை எந்த ஒரு விண்கலனும் செல்லாத பகுதியில் இவை சென்று கொண்டிருக்கின்றன. 35 வருடங்களாக செயல்பாட்டில் உள்ளது இத்திட்டம். 1977-ல் ஆரம்பிக்கப்பட்டவை இவை இரண்டும். "ப்ளூட்டோ"வையும் தாண்டிச் சென்று தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. 



                வோயஜர் 1 சூரியக் குடும்பத்தினையும் தாண்டிச் சென்றுவிட்டது. வோயஜர் 2 "Heliosphere" வெளி அடுக்கான "Heliosheath" பற்றி அதிகத் தகவல்களைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பகுதியில்தான் சூரியப் புயலின் தாக்கம் சூரியக்குடும்பத்தின் வெளியேயுள்ள Interstellar பகுதியின் அழுத்தத்தால் குறைவாக உள்ளது. எனவே இந்தப் பகுதியைப் பற்றிய தகவல்கள் பிற்கால ஆராய்ச்சிக்கு மிக மிக முக்கியமானதாகும். இவ்விரண்டு விண்கலன்களும் அனுப்பும் அறிவியல் தகவல்கள் தரைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள Deep Space Network-ன் ஆண்டெனாக்களால் சேகரிக்கப்படுகின்றன.

Voyager.jpg
வோயஜர் 1

               முதலில் இத்திட்டம் வியாழன் கிரகத்தையும் சனிக் கிரகத்தையும் ஆராயும் நோக்கிலே ஆரம்பிக்கப்பட்டது. வியாழனின் எரிமலைகளைப் பற்றியும், நிலவைப் பற்றியும் சனிக் கிரகத்தின் பிரம்மாண்ட வளையத்தைப் பற்றியுமான தகவல்களைத் திரட்டிய பின்னர் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டது. வோயஜர் 2 "யுரேனஸ்" மற்றும் "நெப்டியூன்" கிரகங்களை ஆராயுமாறு திட்டம் தீட்டப்பட்டது. இதுவரையில் இக்கிரகங்களை அடைந்த முதல் விண்கலன் இவைதான். அதன் பின்னரும் இத்திட்டம் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டது. இப்போது இத்திட்டத்தின் புதிய பெயர் Voyager Interstellar Mission (VIM). திட்டத்தின் நோக்கம். நமது சூரியனின் ஆளுகையின் வெளி அடுக்கையும் அதற்கும் வெளியேயான பகுதியையும் ஆராய்வது. 



                 இத்திட்டத்தின் மூலம் சூரியக் குடும்பத்திற்கு வெளியேயுள்ள கிரகங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பது. மேலும் சூரியக் குடும்பத்தின் வெளியேயுள்ள பிறவற்றையும் தெரிந்து கொள்வது. வோயஜர் விண்கலன்கள் ஆரம்பிக்கப்பட்ட போது நிர்ணயிக்கப்பட்ட நோக்கத்தையும் தாண்டி வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. வோயஜர் 1, 1977 செப்டம்பரிலும் வோயஜர் 2, 19977 ஆகஸ்டிலும் செலுத்தப்பட்டது. வோயஜர் 1 இதுவரை பூமிக்கும் சூரியனுக்குமானத் தொலைவைப் போல 40 மடங்குத் தொலைவு பயணம் செய்துள்ளது. வோயஜர் 2 பூமிக்கும் சூரியனுக்குமானத் தொலைவைப் போல 31 மடங்குத் தொலைவு பயணம் செய்துள்ளது. இப்போது சூரியனின் காந்தப் புலன்களின் விளைவுகளையும் "ப்ளாஸ்மா"த் துகள்களைப் பற்றியும் அதிகத் தகவல்களை இவை இரண்டும் தருகின்றன. வோஜயர் 1 ஒரு வருடத்தில் பூமிக்கும் சூரியனுக்குமிடையேயானத் தொலைவைப் போல 3.6 மடங்கு தொலவைக் கடந்துவிடும். வோஜயர் 2 ஒரு வருடத்தில் பூமிக்கும் சூரியனுக்குமிடையேயானத் தொலைவைப் போல 3.3 மடங்கு தொலவைக் கடந்துவிடும்.வோயஜர் 1 35 டிகிரி வடதிசையிலும் வோயஜர் 2 48 டிகிரி தென் திசையிலும் பயணிக்கின்றன.

சரி, இந்த வோயஜரில் என்ன உபகரணங்கள் உள்ளன?

Magnetic Field Investigation (MAG)

Low Energy Charged Particle Investigation (LECP)

Plasma Investigation (PLS)

Cosmic Ray Investigation (CRS)

Plasma Wave Subsystem (PWS)

இந்த ஐந்து உபகரணங்களும் நமக்குத் தேவையான தகவல்களை வழங்குகின்றன.


A space probe with squat cylindrical body topped by a large parabolic radio antenna dish pointing left, a three-element radioisotope thermoelectric generator on a boom extending down, and scientific instruments on a boom extending up. A disk is fixed to the body facing front left. A long triaxial boom extends down left and two radio antennas extend down left and down right.
வோயஜர் விண்கலன்

            இவ்விண்கலன்களிலுள்ள High Gain Antenna மூலம் s-band சிக்னல்கள் வழியாக தொடர்பு கொள்கிறோம். தொடர்பு கொள்ளும் வேகம் வினாடிக்கு 16 பிட்கள். (16-bits/Sec). விண்கலன் நமக்குத் தகவல்களை x-band மூலம் வினாடிக்கு 160 பிட்கள் (160-bits/Sec) வேகத்தில் அனுப்புகிறது. High Gain Antenna- வானது 3.7 மீட்டர் வடிவமுடையது. இந்த High Gain Antenna எப்போதும் பூமியைப் பார்த்தே இருக்கும் படி Attitude and Articulation Control Subsystem மூலம் சரி செய்யப்படுகிறது. இவ்விண்கலன்களிலுள்ள கணிப்பொறிகள் High Gain Antenna வைக் கட்டுப்படுத்துவதிற்கும், விண்கலன்களின் உபகரணங்களிலிருந்து பெறப்படும் தகவல்களை பிரித்தெடுத்து பிழை களைந்து பூமிக்கு அனுப்பும் பணியைத் தானாக செய்யும்படி வடிவமைக்கப்பட்டவை.

3.7 மீட்டர் High Gain Antenna


                இவ்விண்கலனுக்குத் தேவையான மின்சக்தியை மூன்று Radioisotope thermoelectric Generators (RTG) அளிக்கின்றன. ஒவ்வொரு விண்கலனும் இயங்க 315 வாட்ஸ் மின்சக்தி தேவை. மின் உற்பத்திக் குறையும் பட்சத்தில் சில கருவிகள் தானாகவே அணைந்துவிடும்படி இவை வடிவமைக்கப்பட்டுள்ளது. 


Radioisotope thermoelectric Generators (RTG

                தற்போதைய நிலவரப்படி இவ்விரண்டு விண்கலன்களிலும் சில கருவிகள் அணைத்தே வைக்கப்பட்டுள்ளன.



தொடரும்...


புகைப்பட உதவி:  விக்கிப்பீடியா.

இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் கருத்துகளை கீழே விட்டுச் செல்லுங்கள். நன்றி !!!

கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள்.

Monday, November 24, 2014

வானியல்- 14 (அண்டம் - Galaxy)

            ஏற்கனவே நாம் நமது சூரியக் குடும்பத்தைப் பற்றி பார்த்துவிட்டோம். இந்தச் சூரியக் குடும்பம் தவிர்த்து இன்னும் பல நட்சத்திரங்கள் நமது சொந்த பால்வெளி மண்டலத்திலே இருக்கின்றன என்றும் அவற்றிற்கும் குடும்பம் எனும் நமது பூமியைப் போன்ற கிரகங்கள் இருக்கின்றன எனவும் "லைட்"டாகப் பார்த்தோம். இந்த அத்யாயத்தில் "கேலக்ஸி" என வழங்கப்படும் அண்டத்தைப் பற்றிப் பார்ப்போம். பிரபஞ்சத்தோடு குழப்பிப் கொள்ள வேண்டாம்.


NCG 4414 சுருள் வடிவ அண்டம்

                   அண்டம் என்பது என்ன? பல ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் அவற்றினுடைய கிரகங்கள் விண்கற்கள் தூசு மற்றும் வாயுகள் ஆகியவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு இயங்குவது அண்டம் ஆகும். இந்த அண்டம் பிரபஞ்சத்தின் ஓர் அங்கம். நமது சூரியக் குடும்பம் இருக்கும் அண்டத்தின் பெயர் பால் வெளி அண்டம் (Milky way galaxy).

ஹப்பிள் தொலைநோக்கி படம்பிடித்த பிரபஞ்சத்திலுள்ள அண்டங்கள்


                பொதுவாக அண்டங்கள் மிகப் பெரியது. 2,00,000 ஒளி வருடங்கள் நீளமுடையவை இவை. இவ்வாறு பல அண்டங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன. நமது பால் வெளி அண்டத்தில் நமது பூமி, நடுவிலிருந்து எல்லை வரையிலான தூரத்தில் மூன்றில் இரண்டு பங்குத் தொலைவில் அமைந்துள்ளது. நமது பால் வெளி அண்டம் சுருள்வடிவமுடையது. இந்த அண்டத்தில் "ஓரையான்" எனதும் பகுதியில் நமது பூமி அமைந்துள்ளது. நமது அண்டத்தின் அருகாமையிலுள்ள அண்டம் "ஆண்ட்ராமீடா கேலக்ஸி" என அழைக்கின்றனர். அதுவும் நம்மைப் போலவே சுருள் வடிவ அண்டம் தான். சுருள் வடிவம் போக நீள்வட்ட வடிவ அண்டம் மற்றும் ஒழுங்கற்ற வடிவமுடைய அண்டம் எனஇன்னும் இரண்டு வகை உண்டு.

NCG 1300


                  பொதுவாக அண்டத்தின் நடுவில் மிக அதிக சக்திவாய்ந்த கருந்துளை உண்டு. (கருந்துளை பற்றி தனிக் கட்டுரையில் பார்க்கலாம்) கருதுளை மட்டுமல்ல, பலபேர் கேட்டிறாத "க்வேஸ்ர்கள்" ( இதைப்பற்றியும் தனிக் கட்டுரையில் பார்க்கலாம்) கூட உண்டு. அந்த கருந்துளையின் மையத்தை நோக்கி அனைத்து நட்சத்திரங்களும் நகருகின்றன. ஏற்கனவே பார்த்த நமது பக்கத்து வீட்டுக்காரரான "ஆண்ட்ராமீடா கேலக்ஸி" நம்மிலிருந்து 22 இலட்சம் ஒளியாண்டுகள் தொலைவில் இருகிறார்.

வட்டவடிவ அண்டம்


                   வினாடிக்கு 3 இலட்சம் கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் 22 இலட்சம் வருடம் கழித்து "ஆண்ட்ராமீடா கேலக்ஸி"யை அடையலாம். இந்த "ஆண்ட்ராமீடா கேலக்ஸி"யும் நமது பால்வெளிஅண்டமும் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருகின்றன. 6,70,000 கிலோமீட்டர்/மணி வேகத்தில் நெருங்குகின்றன. இன்னும் 500 கோடி வருடங்கள் கழித்து ஒன்றுடன் ஒன்று இரண்டறக் கலந்துவிடும்.

NCG 5866


                   கேலக்ஸிகளின் பெயர்கள் எண்களாக இருக்கும். அந்த எண்களுக்கு முன்னர் New General Catalog என்பதன் சுருக்கமான NGC அல்லது European Southern Observatory என்பதன் சுருக்கமான ESO அல்லது Infrared Astronomical Satellite என்பதன் சுருக்கமான IRAS அல்லது Markarian என்பதன் சுருக்கமான M அல்லது Uppsala General Catalog என்பதன் சுருக்கமான UGC எனக் குறிப்பிடப்படும். சில வேளைகளில் ஒருசில கேலக்ஸிக்களுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட பெயர்களும் இருக்கும். காரணம் இரண்டு  Catalog-களில் அவற்றின் பெயர் பதியப்பட்டிருக்கும்.





                       விஞ்ஞானிகள் இந்த கேலக்ஸிகளை அவற்றிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களைக் கொண்டு ஆராய்கின்றனர். பொதுவாக கேலக்ஸிகள் எல்லா வகையான மின்காந்தக் கதிர்வீச்சையும் உமிழும். ஆனால் இந்த புறஊதாக் கதிர்கள் அதிகச் சேதாரமில்லாமல் பூமியை வந்தடைவதால் அக்கதிர்களை ஆராய்வதின் மூலம் இந்த அண்டங்கள் மற்றும் அவற்றிலுள்ள நட்சத்திரங்களின் பிறப்பை அறிய இயலும்.


M82


               இந்த அண்டங்களிலுள்ள நட்சத்திரங்கள் உமிழும் வெளிச்சத்தின் அளவை வைத்து அந்த அண்டம் எவ்வளவு தொலைவில் அமைந்துள்ளது என விஞ்ஞானிகள் கணக்கிடுகின்றனர். 1000 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள அண்டங்களையும் இவ்வாறு கணக்கிட்டுள்ளனர்.


ஆண்ட்ரோமீடா கேலக்ஸி


               நம் பால்வெளி அண்டத்திலிருந்து தொலைவில் அமைந்துள்ள அண்டங்கள் நம்மிடமிருந்து வேகமாக நகர்ந்து செல்கின்றன. இருப்பிடத்தின் தொலைவு அதிகரிக்க அதிகரிக்க அவை நம்மைவிட்டு விலகிச் செல்லும் வேகமும் அதிகரிக்கின்றன. இதுதான் "ஹப்பிள்" விதி. இவர்தான் நமது வானவெளியில் தொலைவில் மேகங்களாகக் காணப்படுபவை பிற அண்டங்கள் என்பதைக் கண்டுணர்ந்து சொன்னவர். மேலும் அண்டங்களை அவற்றின் உருவங்களை வைத்து இவர்தான் வகைப்படுத்தினார். அவரைக் கெளவுரவிக்கவே ஒரு வானியல் தொலைநோக்கிக்கு "ஹப்பிள் தொலைநோக்கி" எனப் பெயரிடப்பட்டது.

         எல்லாம் சரி நம்து பிரபஞ்சத்தில் மொத்தம் எவ்வளவு அண்டங்கள் இருக்கின்றன? இக்கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள "ஹப்பிள்" எடுத்த புகைப்படம் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு புகைப்படம். அதிலே ஆயிரக்கணக்கான அண்டங்களை கணக்கிட்டுள்ளனர். தற்போது நம்மிடம் இருக்கும் கருவியைக் கொண்டு கணக்கிட்டதில் பிரபஞ்சத்தில் 10,000 கோடி முதல் 20,000 கோடி அண்டங்கள் இருக்கின்றன.

சரி, பிரபஞ்சம் என்றாலே அனைத்தும் அடக்கம். ஆனால் ஒரு பிரபஞ்சம் அல்லது வேறு பிரபஞ்சம் இருக்கிறதா?


தொடரும்...


புகைப்பட உதவி:  விக்கிப்பீடியா.

இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் கருத்துகளை கீழே விட்டுச் செல்லுங்கள். நன்றி !!!

கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள்.

Friday, November 21, 2014

வானியல்- 13 (2014- 28E)

2014- 28E



            2014- 28E கடந்த சில நாட்களாக (4 நாட்களாக) விண்வெளி ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விசயம் இதுதான். என்னைப் போல அமெச்சூர் வானியல் ஆர்வலர்கள் வேலைவெட்டி இல்லாமல் செயற்கைக்கோள்களையும் அவற்றின் நகர்வுகளையும் ஓர் ஆர்வத்தில் கண்காணித்துக் கொண்டிருப்போம். (இதைப்பற்றி ஹப்பிள் கட்டுரையில் எழுதியிருக்கிறேன்) அப்படி கண்காணித்துக் கொண்டிருந்தவர்களின் கண்களில் சிக்கியதுதான் இந்த 2014- 28E செயற்கைக் கோள். பொதுவா யோக்கியனுக்கு இருட்டில் என்ன வேலை? என்போம். அதேப் போலவே இந்த 2014- 28E செயற்கைக் கோளின் நடவடிக்கைகள் கொஞ்ச நாட்களாகவே சரியில்லை. தேவையில்லாமல் அங்கும் இங்கும் இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறது.

Space view of the sun rising over Europe on blue planet Earth. Elements of this image furnished by NASA.

           யார்றா இதோட ஓனர்னு விசாரிச்சா? வந்து விழுந்த பெயர் ரஷ்யா. ஆம் ரஷ்யாவின் இராணுவ செயற்கைக் கோள் இது. அவ்ளோதான் அமெரிக்கா "லபோதிபோ"ன்னு குதிக்க ஆரம்பிச்சாச்சு. என்னதான் அமெரிக்கா வல்லரசு என்றாலும் ரஷ்யாவின் விண்வெளித் திறமையை மதித்தே ஆக வேண்டும். "ஸ்புட்னிக்" முதல் இன்று வரை விண்வெளியில் அவர்களும் "கிங்" தான். ஏற்கனவே சர்வதேச விண்வெளி நிலையத் திட்டத்திலிருந்து 2020 -ல் நாங்கள் விலகப் போகிறோம்னு அமெரிக்காவிற்கு கஷாயம் கொடுத்துள்ளது ரஷ்யா. அதுமட்டுமல்ல எங்களின் RD-180 ராக்கெட் இயந்திரத்தை அமெரிக்கா தனது இராணுவத் தேவைகளுக்காக ராக்கெட்டுகளில் பயன்படுத்தக்கூடாது எனவும் ரஷ்யா கவுண்டர் கொடுத்தாங்க. எதுக்காக இந்தக் கவுண்டர்னா "உக்ரைன்" பிரச்சனையில் ரஷ்யாவின் நிலைபாட்டை அமெரிக்கா எதிர்த்ததுதான். பேட்டைலை ஒரு ரவுடிதான் இருக்க வேண்டும் அதுவும் நானாகவே கடைசி வரை இருப்பேன் என்பது அமெரிக்காவின் வாதம். இவ்ளோ டீட்டெயில் நமக்குத் தேவையில்லை. 2014- 28E க்குத் திரும்புவோம்.


Mysterious objects: Object 2014-28E, which was tracked over Guatemala on Monday night by observers N2YO, has been making unusual movements according to amateur astronomers
2014- 28E நகர்வுகள்


விஞ்ஞானிகள் ரெம்பத் துருவி விசாரித்ததில் இதைப் பற்றிக் கிடைத்த தகவல் கீழே..

பெயர்: 2014- 28E

உரிமையாளர்: ரஷ்யா

வாழ்நாள்: தெரியாது

எங்கே நிலை கொண்டுள்ளது: தெரியாது

என்ன காரணத்திற்காக ஏவப்பட்டது: தெரியாது

சரி, என்னதான் செய்யும் இந்தச் செயற்கைக் கோள்: தெரியாது.

இப்போ சொல்லுங்க இவ்ளோ தெரியாது இருந்தால் அமெரிக்காவுக்கு கிலி பிடிக்குமா இல்லையா?


Image: Cosmos-2498 orbit

        அவங்களுக்குத் தெரிந்த தகவல் மிகவும் குறைவு. 2014- 28E என்ற பெயர். பெயர் எதுவாக இருந்தாலும் ஒன்றுமில்லை. இவ்வளவு ஏன் பெயரே வைக்கப்படவில்லை என்றாலும் பரவாயில்லை. அதனால் எந்த குடிமோசமும் ஆகப் போவதில்லை. இதை ஏவியது ரஷ்யா என்பதுதான் அமெரிக்காவின் உதறலுக்குக் காரணம். ராணுவத் தகவல் தொடர்புக்காக ஆறு மாதத்திற்கு முன்னர் ரஷ்யா ஏவியது இந்தச் செயற்கைக் கோள் என்ற ஒத்தை தகவல்தான் இதுவரை திரட்ட முடிந்தது. (இல்லை, நாங்க தொடர்ந்து கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம் எனவும் அமெரிக்கா சொல்கிறது)

           காலாவதியான பல்வேறு செயற்கைக் கோள்கள் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இது என முதலில் நினைத்திருந்தனர். அப்புறம் பார்தால் ரஷ்யாவின் பிற செயற்கைக் கோள்களுக்கு அருகில் நெருங்கிச் செல்வதும் தகவல் பரிமாறூவதுமாக இருந்திருக்கிறது. கடைசியில் ஒரு செயற்கைக் கோளுடன் இணைந்து கொண்டது.

Russia has a number of satellites in the solar system, and has over ambitious space projects in the pipeline - including sending an unmanned probe to the Moon by 2015 

           அவ்வளவுதான் அனுமரின் வாலில் தீப்பிடித்து இலங்கை எரிந்ததுபோல், ஆளாளுக்கு குதிக்க ஆரம்பித்துவிட்டனர். இது விளாதிமிர் புதினின் அடுத்த கட்ட நடவடிக்கை. பனிப்போர், பவர் ப்ளே அது இது என குதித்தனர். ஒற்றை வார்த்தையில் சொல்வதானால், இந்தச் செயற்கைக் கோள் பிற செயற்கைக் கோள்களைக் தாக்கும் ஆயுதம் என சந்தேகிக்கின்றனர் அறிஞர்கள். சந்தேகம் என்பதைவிட பயம் என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும். அமெரிக்காவும் சைனாவும் கூட இப்படி செயற்கைக் கோள்களைத் தாக்கும் வல்லமையைக் கொண்டுள்ளனர். இதற்கு முன்னர் பரிசோதித்தும் பார்த்திருக்கின்றனர்.  சைனாவுடன் இணைந்து ஹேக்கர்கள் அமெரிக்க வானிலைக் கண்காணிப்பு செயற்கைக் கோளில் புகுந்து விளையாடிய சம்பவமும் இதற்கு முன்னர் நடந்துள்ளது.

            இந்த அக்கப்போரெல்லாம் செயற்கைக் கோள்களை பழுதுபார்க்கவும் அல்லது விண்வெளிக் கழிவுகளை கையாளுவதற்குமான பயிற்சியாகவும் இருகலாம் என்ற யூகமும் முன்வைக்கப்படுகிறது. மொத்தத்தில் வயற்றில் புளியைக் கரைக்கும் விஷயம் என்னவெனில் ரஷ்யா இந்தச் செயற்கைக் கோள்களைப் பற்றி மிகக்குறைவான தகவல்களையே வெளியிட்டுள்ளது.

The U.S. Air Force's mysterious X-37B unmanned space plane is serviced by a ground crew after successfully landing at Vandenberg Air Force Base in California on Oct. 17, 2014. The landing wrapped up a record-breaking 674-day spaceflight for the winged min
X-37B


                இதுல ரெம்பப் பெரிய காமெடி என்னவெனில் X-37B என்ற திருநாமமுடைய அமெரிக்காவின் விண்வெளிக்கப்பல் அதிஉயர் உளவுக் காரணங்களுக்காக விண்வெளியில் 22 மாதங்கள் சுற்றிவிட்டு திரும்பியது. இப்போ ரஷ்யாவின் முறை. ஹிஹி... ரஷ்யாவின் டீல், உனக்கு X-37B எனில் ஏன் எனக்கு 2014-28E ஆக இருக்கக் கூடாது?

நன்றி: கெட்டி இமேஜஸ் மற்றும் இணையத்தளங்கள்.


இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் கருத்துகளை கீழே விட்டுச் செல்லுங்கள். நன்றி !!!



 

Thursday, November 20, 2014

வானியல்- 12 (சூப்பர்நோவா மற்றும் ஹைப்பர்நோவா)



                                                           சூப்பர்நோவா மற்றும் ஹைபர்நோவா


சென்னையைச் சேர்ந்த சுப்ரமண்யம் சந்திரசேகர் எனும் வானியல் அறிஞருக்கு இக்குறுங்கட்டுரை சமர்ப்பணம்.

                   வானியலின் அற்புதங்களில் ஒன்று சூப்பர்நோவா (Supernova). வாழ்ந்து கெட்ட குடும்பம் எனச் சொல்வதைப் போல நட்சத்திரம் தனது ஆற்றலை இழந்து கடைசியில் சூப்பர்நோவாவாக மாறுகிறது. வாழ்ந்து கெட்ட குடும்பம் என்பதால் ஒன்றுமில்லாதது என அர்த்தமில்லை. அபரிதமான சக்தியை வெளிப்படுத்தும் இது. சூரியன் வெளிப்படுத்தும் சக்தியைவிட கோடிகோடிகோடி (ஆம் 1020 ) சக்தியை வெளிப்படுத்துகிறது. நட்சத்திரம் தனது எரிபொருளை இழந்ததும் மிகமிகப் பெரியதாக வெடிக்கிறது. எல்லா நட்சத்திரமும் தனது அந்திமக் காலத்தில் சூப்பர்நோவாவாக மாறுமா? இல்லை. உதாரணம் நமது சூரியன் ஒரு நட்சத்திரமே. ஆனால் அது சூப்பர்நோவாவாக மாறாது. ஏனெனில் சூரியனால் சந்திரசேகர் வரையறையை (Chandrasekar limit) மீற முடியாது. (விபரம் கீழே)


சுப்பிரமணியன் சந்திரசேகர்
சந்திரசேகர்



              த்தகைய சூப்பர்நோவா வெடிப்புகள் நமது பால்வெளி அண்டத்தில் (Milky way Galaxy) மிகக் குறைவாகவே நடக்கின்றன. விண்வெளியிலுள்ள பிற அண்டங்களில் நட்சத்திரம் வெடித்து சூப்பர்நோவாவாக மாறுவது அடிக்கடி நடக்கிறது. 

சூப்பர்நோவா உருவாவதை இருவகைகளாக வகைப்படுத்தியுள்ளனர்.



முதல் வகை: ஒரே அச்சை மையமாகக் கொண்டு சுழலும் இரண்டு நட்சத்திரங்களில் (Binary stars) ஒன்று தனது பங்காளியை ஸ்வாகா பண்ணிக் கொண்டு இணைப்பின் (Fusion) மூலம் வெடிப்பது.









இரண்டாம் வகை: ஒரு நட்சத்திரம் தன்னுடைய எரிபொருள் அனைத்தையும் இழந்து தனது மையக்கருவின் ஈர்ப்புவிசை தாங்காமல் நிலை குலைந்து (Core collapse) வெடித்துச் சிதறுவது. 

                 ரண்டு வகையிலானாலும் பொதுவாக, மிகப்பிரகாசமாக வெளித்துச் சிதறும் நட்சதிரம் சூப்பர்நோவா எனப்படும். இவ்வாறான நிகழ்வில் இதிலிருந்து வெளியாகும் வெப்பம்1044  ஜூல்கள். 1000 கோடி வருடங்கள் சூரியன் எவ்வளவு சக்தியை உமிழுமோ அதே அளவு சக்தி வெளிப்படுகிறது. இதில் இரண்டாவது வகையை அதிலிருந்து வரும் ஒளியின் நிறமாலையின் (Spectrum) அடிப்படையில் மேலும் இருவகைகளாகப் பிரித்துள்ளனர்.



                    

                 ரண்டாவது வகையின் படி ஒரு மிகப்பெரிய நட்சத்திரம் தன் மையத்திலுள்ள ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் அனைத்தையும் எரித்துத் தீர்த்துவிடுகிறது. இப்போது இதனிடம் எந்த எரிபொருளும் இல்லை. ஆனால் அதன் மையப்பகுதியில் அதிக நிறையும் அழுத்தமும் (ஈர்ப்புவிசையும்) இருப்பதால் இந்நட்சத்திரத்திலுள்ள மற்ற பொருட்கள் மையத்தால் (Core) கவரப்பட்டு மையத்தில் அதிக அழுத்தத்துடன் குவிக்கப்படுகிறன. இதன் இதன் வெளிப்புற அடுக்கு (Outer layer) மிகவும் இலகுவாகிறது. இவ்வாறு மையத்தில் குவிக்கப்படும் பொருட்களால் அந்நட்சத்திரத்தின் நிறை சூரியனின் நிறையை விட1.39 மடங்கிற்கு மேல் அதிகரித்தால் அது வெடித்துச் சிதறி சூப்பர்நோவாவாகிறது. இந்த 1.39 என்பது தமிழக விஞ்ஞானி சந்திரசேகர் என்பவர் கண்டுபிடித்த ஒன்று. இதை "சந்திரசேகர் லிமிட்" என்கின்றனர்.




                விஞ்ஞானிகளின் சமீபத்தியக் கண்டுபிடிப்பின்படி இத்தகைய சூப்பர்நோவாக்கள் அவை வெடிப்பதற்கு முன்னர் மிகப்பெரிய ராட்சச ஸ்பீக்கர்களைப் போல "ஹம்" என்ற ஒலியுடன் அதிர்கின்றன. விகடனில் பத்து வருடங்களுக்கு முன்னர் தமிழக விஞ்ஞானி ஒருவர்  நாசாவில் பணிபுரிந்த போது நமது பிரபஞ்ச வெளியில் பரவியுள்ள இந்த ஒலியைத்தான் இந்து மதத்தில் "ஓம்" என உச்சரிப்பதாகப் பேட்டியளித்திருந்தார்.
                      வ்வாறு வெடிக்கும் நட்சத்திரங்கள் (சூப்பர்நோவோ) காமா கதிர்களை உமிழ்கின்றன. இவை நாம் ஏற்கனவே பார்த்தபடி "ஹப்பிள்" தொலைநோக்கியால் ஆராயப்படுகின்றன. இவ்வாறு வெடிக்கும் சூப்பர்நோவாக்களை அவை கண்டுப்பிடிக்கும் வருடத்தின் பெயரால் குறிக்கின்றனர். SN 1604 என்பது நமது பால்வெளி அண்டத்தில் கடைசியாக நடந்த சூப்பர்நோவா வெடிப்பின் பெயர்.  இவாறான சூப்பர்நோவா வெடிப்பினால் உண்டாகும் அதிர்வலைகளில் புதிக நட்சத்திரம் உருவாவதற்கான தூண்டுதல் நடக்கிறது. வாழ்க்கை வட்டம்ங்கிறது நமக்கு மட்டும் அல்ல நட்சத்திரத்துக்கும் பொருந்தும் போல.

இனி, ஹைப்பர்நோவா.
     
                    மிகமிக அபரிதமாக சக்தியை வெளியிடும் சூப்பர்நோவா ஹைப்பர்நோவா (Hypernova) என அழைக்கப்படுகிறது. இதை "சூப்பர் லூமினஸ் சூப்பர்நோவா" (SLSNe) என்பர். இதிலிருந்து மிக அதிக நேரம் காமாக் கதிர்கள் வெளியாகும்.

 

                  சூப்பர்நோவாவின் விளைவால் அது தனைச் சுற்றி உள்ள பிறவற்றையும் இணைத்து மிகப் பெரும் வெடிப்பாகிறது. சாதரண சூப்பர்நோவாவைவிட 1000 மடங்கு சக்தி வெளியாகிறது. காமாக் கதிர்கள் வெடிக்கும் (Gamma - ray Bursts) இந்நிகழ்வுக்கு "ஹைப்பர்நோவா" எனப் பெயரிடப்பட்டது.



                 ந்த காமாக் கதிர்கள் வெடிப்பு நிகழ்வுதான் விண்வெளியின் மிகப்பெரும் சக்தி நிகழ்வு ஆகும். ஹைப்பர்நோவா வெடிப்பின் போது மிக அபரிதமான காமாக்கதிர்கள் வெடிப்பும் நிகழ்கின்றன. பூமியின் அருகில் இம்மாதிரியான ஒரு ஹைப்பர்நோவா வெடிப்பு நிகழ்ந்தால் நிச்சயம் பூமிக்கு அதிக ஆபத்து உண்டு. அதிர்ஷ்டவசமாக பூமியின் அருகில் இவ்வாறான ஹைப்பர்நோவா எதுவும் இல்லை. நமது பால்வெளி அண்டத்தில் சூப்பர்நோவா வெடிப்பு நிகழ்வதே மிகவும் அரிது.

            1960களில் ரஷ்யாவின் நியூக்ளியர் அணுச்சோதனைகளை கண்காணிக்க அமெரிக்கச் செயற்கைக் கோள்கள் காமா கதிர்களை ஆராயும் கருவிகளை கொண்டிருந்தன. அணுவெடிப்பின் போதும் அதிக அளவு காமாக் கதிர்கள் வெளியாகும். ஆனால் இத்தகைய செயற்கைக் கோள்களால் ரஷ்யச் சோதனைகள் எதையும் கண்டுணர முடியவிலல்லை. அதற்குப் பதில் விண்வெளியில் நடக்கும் காமாக் கதிர் வெடிப்பைக் கண்டுபிடித்தன.

            இத்தகைய சூப்பர்நோவா ஹைப்பர்நோவா வெடிப்பின் மூலமே புதிய கருந்துழைகள் உருவாகின்றன எனவும், சூப்பர்நோவா கைப்பர்நோவா வெடிப்புகளிலதான் நமது சூரியக் குடும்பமும் உருவாகியிருக்கும் எனவும்  விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

தொடரும்...


புகைப்பட உதவி: நாசா மற்றும் விக்கிப்பீடியா.

இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் கருத்துகளை கீழே விட்டுச் செல்லுங்கள். நன்றி !!!

கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம் அல்லது இங்கே சொடுக்குங்கள்.

Tuesday, November 18, 2014

வானியல் தொடர்

        வானியல் தொடரின் அனைத்துப் பாகங்களும் கீழே...

வானியல்-1 (சூரியக் குடும்பம்)

வானியல்- 2 (விண்கற்கள்)

வானியல்- 3 (வான் ஆலன் கதிர்வீச்சுப் பட்டை)

வானியல்- 4 (சர்வதேச விண்வெளி நிலையம்)

வானியல்- 5 (Terrestrial Planets)

வானியல்- 6 (Jovian Planets)

வானியல்- 7 (சிறு கிரகங்கள், கைப்பர் பட்டை மற்றும் ஓர்ட் கிளவுட்)

வானியல்- 8 (ஹயபுஸா)

வானியல்- 9 (ஹப்பிள் தொலைநோக்கி - HUBBLE TELESCOPE)

வானியல்- 10 (சூரியக் குடும்பத்திற்கும் அப்பால்)

வானியல்- 11 (நெபுலா) 

வானியல்- 12 (சூப்பர்நோவா மற்றும் ஹைப்பர்நோவா)

வானியல்- 13 (2014- 28E)

வானியல்- 14 (அண்டம் - Galaxy)

வானியல்- 15 (வோயஜர் - voyager)

வானியல்- 16 (நியூ ஹெராசன்ஸ் - New Horizons)

வானியல்- 17 (GSLV Mk-III X / CARE)

வானியல் -18 (RD 180 + அரசியல்)

வானியல்- 19 கருந்துளை (Black hole)

வானியல்- 20 நிலவுத் திட்டங்கள் (Moon Missions)

வானியல்- 21 க்வேஸர்கள் (Quasars)

வானியல்- 22 ஸ்காட் கெல்லி மற்றும் மைக்கேல் கோர்னியன்கோ

வானியல் - 23 கலிலியோ

வானியல் - 24 தொலைதூர வலைப்பின்னல் (DSN)

வானியல் - 25 அங்காரா (Angara)

வானியல் - 26 க்யூரியாஸிட்டி உலாவி (Curiosity rover)

வானியல் - 27 ஃபால்கன் (Falcon)

வானியல் - 28 ரொஸெட்டா (Rosetta)

வானியல் - 29 வானியல் அலகுகள்

வானியல் - 30 Magnetospheric MultiScale Mission எனும் MMS

வானியல் - 31 டைட்டனும் (Titan) அதன் கடலும்.

வானியல் - 32 முப்பது மீட்டர் தொலைநோக்கி (TMT)

வானியல் - 33 ஆஸ்ட்ரோசாட் (ASTROSAT)

வானியல் - 34  ஜிசாட்- 15 (GSAT - 15)

Monday, November 17, 2014

வானியல்- 11 (நெபுலா)

                       துவரையிலான பகுதிகளில் சூரியக் குடும்பத்தினைப் பற்றிப் பார்த்தோம். இனி இப்பதிவில் நெபுலாவைப் (Nebula) பார்க்கலாம். அதற்கு முன்னர் ப்ரதீப் குமார் மற்றும் வடுவூர் குமாருக்கு நன்றி. திரு.ஜெயபாரதனின்  கட்டுரைகளைப் முடிந்தால் பாருங்கள் என வடுவூர் குமார் குறிப்பிட்டிருந்தார். திண்ணை இணையதளத்தில் அவரது பெரும்பாலானக் கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். பல அறிவியல் கட்டுரைகளை எழுதிவருகிறார். அதைப் பற்றிக் கருத்துச் சொல்லி வா.மணிகண்டனைப் போல ஆக விருப்பமில்லை. ஸோ..விடு ஜூட்...!


கம் பேக் டு நெபுலா...

கீழே உள்ள புகைப்படத்தைப் பாருங்கள்..


The Butterfly Nebula
வண்ணத்துப் பூச்சி நெபுலா 

                            ம் விண்வெளியில் இருக்கும் பல்வேறு நெபுலாக்களில் இதுவும் ஒன்று. இவ்வகையான நெபுலாக்களுக்கு பூக்கள் மற்றும் பறவைகளின் பெயர்களை வைப்பது வழக்கம். இந்த நெபுலாவிற்கான பெயர்க்காரண விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்.




                   பொதுவாக நெபுலாக்கள் மேகத் திரள்கள் ஆகும். நெபுலா எனும் இலத்தீன் வார்த்தைக்கு மேகம் என்றுதான் பெயர். ஆனாலும் இவை வெறும் மேகமல்ல. அவற்றையும் தாண்டிப் புனிதமானது..னிதமானது...தமானது..மனாது.. இத்தகைய நெபுலாக்கள் விண்வெளியில் ஆங்காங்கே விரவிக் கிடக்கின்றன. ஹப்பிள் போன்ற தொலைதூர விண்வெளி நோக்கிகளால் இவற்றை ஓரளவுத் தெளிவாகக் காணமுடியும். மேலேயுள்ள வண்ணத்துப் பூச்சி நெபுலாவில் ஒரு சிறகிலிருந்து மற்றொரு சிறகின் எல்லை வரையிலான தூரம் மூன்று ஒளியாண்டுகள் (Light Year). நேரம் போகவில்லையெனில் பெருக்கிப் பாருங்கள். 2,83,82,19,14,17,74,24,00,00,00,00,00,00,00,000 கிலோமீட்டர்கள் தொலைவு வந்ததா? முதுகில் தட்டிக் கொள்ளுங்கள். இதிலுள்ள விசித்திரம் என்னவெனில் இத்தகைய நெபுலாவின் நிறை மிகவும் குறைவு. பூமியின் அளவுள்ள நெபுலா சில கிலோகிராம் மட்டுமே இருக்கும். ஆனால் இதன் அடர்த்தி அதிகம். எனவே இதன் ஈர்ப்புவிசையும் அதிகம். பொதுவாக இவற்றின் நிறைகளை எப்படிக் கணக்கிடுகிறார்கள்? இங்குதான் கெப்ளர் (Kepler) எனும் ஜாம்பவானை நினைவுகூறல் வேண்டும். கெப்ளரின் மூன்றாவது விதி இதற்குத் துணைபுரிகிறது.



                       நெபுலாக்களில் தான் நட்சத்திரங்கள் உருவாகின்றனது. உருவாவது மட்டுமல்ல  அவை தன் புறவட்ட அடுக்கை (Outer Layer) இழந்து மடிவதும் இங்கே தான். சில வருடங்களுக்கு முன்னர் நெபுலா தொடர்பாக நான் பார்த்த ஆவணப்படத்தில் இதைப் பற்றிச் சொல்லும் போது நடராஜரின் சிலையைக் காட்டி இந்துமதக் கடவுளான சிவனின் ஆக்கலும் அழித்தலும் பற்றியும் அதற்கும் இதற்குமான தொடர்பையும்  நினைவு கூர்ந்தார் வர்ணனையாளர்.

See Explanation.  Clicking on the picture will download
 the highest resolution version available.
வளைய நெபுலா


                 நெபுலாக்கள் அதிஉயர் கதிர்களை வெளியிடுகின்றன. விண்வெளி என்பது நாம் நினைப்பது போல ஒன்றுமற்ற வெளி அல்ல. நெபுலாக்களில் ஹைட்ரஜன், ஹீலியம் மற்றும் ப்ளாஸ்மா போன்றவை செறிவுடன் காணப்படுகின்றன. இவை எல்லாம் அதி அழுத்தத்தில் ஒன்று சேர்ந்து அதிக அடர்த்தியாக மிக அதிக ஈர்ப்பு விசையைக் கொண்டுள்ளன. இவ்வாறு ஒன்று சேர்ந்து அவை அதிக நிறையுடையதாகும் போது அதன் ஈர்ப்புவிசை இன்னும் அதிகமாக தன்னைச் சுற்றியுள்ள பிர திரள்களையும் தன்னுள் இழுக்கின்றன. இப்பிடியே கட்டுக்கடங்காமல் அழுத்தமும் நிறையும் ஈர்ப்புவிசையும் அதிகரித்துக் கொண்டே போக, போகிறபோக்கில் அணுக்கரு இணைவு (Nuclear Fusion) உண்டாகிறது. சூரியனில் நிகழும் அதே வினை.



               த்தகைய நெபுலாக்களில் இவ்வாறனான அணுக்கரு இணைவினால் ஏற்படும் மின்காந்தக் கதிர்வீச்சு (Electromagnetic Radiation) அதன் ப்ளாஸ்மாவுடன் (Plasma) சேர்ந்து கொண்டு "டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்" எனும் கீதத்தோடு நட்சத்திரம் பிறக்க வழி செய்கிறது. இந்த நட்சத்திரம் தனது வளிமண்டலத்தினை இழந்து இறந்து மீண்டும் நெபுலாவாவதும் நடக்கிறது. அதை "ப்ளானட்டரி நெபுலா" (Planetary Nebula) என்பர். இது போல நெபுலாவில் நான்கு வகை உண்டு. நமக்கு மிகவும் பரிட்சயமான "சூப்பர் நோவா"வும் (Supernova Remnants) நெபுலாவின் வகைதான். மீதமுள்ளவை "க்ளாஸிக்கல் நெபுலா" (Classical) மற்றும் "டிஃபியூஸ் நெபுலா" (Diffuse).



ஒரு ரகசியம்: நவம்பர் மாத இரவு வானில் பதினென்று மணிக்குப் பின்னர் கிழக்குத் திசையிலிருந்து மூன்று நட்சத்திரங்கள்  வரிசையாய் இருக்குமாறு நடுவானை நோக்கி மெதுவாக நகர்ந்து வந்து கொண்டிருக்கும். அதை "ஓரியன்" (Orion) என்பர். அந்த நட்சத்திரக் கூட்டத்தினைப் தொலை நோக்கியால் பார்த்தால் அங்கே "ஓரியன்" நெபுலா பிரகாசிக்கும். விண்வெளி ஆய்வாளர்கள் அடிக்கடி ஆய்வு செய்யும் நெபுலா இது. ஆனால் எனது சிறு வயது முதல் ஓரியன் நட்சத்திரத்தைப் பார்த்து வருகிறேன். நெபுலாவைப் பார்க்க வாய்ப்புக் கிடைக்குமா எனத் தெரியவில்லை. ஓரியன் கீழே...




 

தொடரும்...
புகைப்பட உதவி: நாசா மற்றும் விக்கிப்பீடியா.

இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் கருத்துகளை கீழே விட்டுச் செல்லுங்கள். நன்றி !!!


கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம்.


Saturday, November 1, 2014

வானியல்- 10 (சூரியக் குடும்பத்திற்கும் அப்பால்)




சூரியக் குடும்பத்திற்கும் அப்பால்...

        துவரையிலான கட்டுரைகளில் சூரியனையும், அதை மையமாகக் கொண்டு சுழலும் பூமி முதலான கிரகங்களையும், அக்கிரகங்களில் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையேயான விண்கற்களையும், நெப்டியூனுக்குப் பிறகான பனிப் பகுதியில் உள்ள புளூட்டோ உள்ளிட்ட சிறுகிரகங்களையும் அங்கிருந்து கிளம்பி வரும் வால் நட்சத்திரங்களையும் சுருக்கமாகப் பார்த்தோம். சரி, இந்த கைப்பர் பட்டை, ஓர்ட் க்ளவுட் பகுதிக்குப் பின்னர் என்ன இருக்கிறது? மொத்த உலகமே இவ்வளவுதானா என்றால் இல்லை. நாம் இதுவரை பார்த்தது சூரியன் எனும் நட்சத்திரக் குடும்பத்தின் உறுப்பினர்களைப் பற்றி. இந்தச் சூரியன் இருக்கும் பால்வெளி மண்டலத்தில் இன்னும் பல நட்சத்திரங்கள் இருகின்றன.

 

Milky Way Annotated
நமது பால்வெளி அண்டம்


                  வற்றிற்கும் குடும்பம் (கிரகங்கள்) உண்டு. நமது பால்வெளி மண்டலத்தில் மட்டும் சூரியனைப் போல ஒரு இலட்சம் கோடி நட்சத்திரங்கள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கின்றனர். இதை எப்படிச் சொல்லலாம் எனில் இதுவரை நாம் பார்த்த சூரியக் குடும்பம், ஒரு கிராமத்திலுள்ள ஒரு வீட்டிலுள்ள உறுப்பினர்களை மட்டுமே. இன்னும் அக்கிராமத்தில் வேறு வீடுகள் இருக்கின்றன. இது போல பல கிராமங்கள் இருக்கும். நமது பால்வெளி மண்டலத்தைப் போல மொத்தம் இந்தப் பிரபஞ்சத்தில் இலட்சம் கோடி அண்டங்கள் இருக்கின்றன. வெயிட் ப்ளீஸ்....இவையெலாம் இந்தப் பிரபஞ்சத்தில் வெறும் 5 சதவீதம் தான். தலை சுற்றுகிறதா? எனக்குச் சுற்றியது ஒரு காலத்தில். வானியலின் மீதான ஆர்வம் எனது எட்டு வயதில் தோன்றியது. கண்டதையும் படித்தவன் பண்டிதனாவான் என்பதைப் போல எதையெல்லாமோ படித்து மண்டை கிறுக்கானதுதான் மிச்சம். "ஐன்ஸ்டீனின்" "பிரபஞ்சமும் டாக்டர் ஐன்ஸ்டீனும்" என்ற புத்தகம் என்னைப் புரட்டிப் போட்ட ஒன்று. குழந்தைகளும் விரும்பிப் படிக்கும் வகையிலான ஒன்று. சற்று பழைய சிந்தனைகளில் தொகுப்பு என்றாலும், நமது சிந்தனையைக் கிளறி "அட, ஆமால்ல.." எனக் கேட்க வைக்கும் வகையிலான புத்தகம். சொந்தக் கதையை விட்டுவிட்டு வானியலுக்கு வருகிறேன்.

The Majestic Sombrero Galaxy (M104)
தொலைவிலுள்ள மற்றுமோர் கேலக்ஸி


                    வெறும் 5% தான் மேற்குறிப்பிட்ட அண்டங்கள் என்றேன். மீதியுள்ளவை? 68 % கறுப்பு ஆற்றல், 27 % கறுப்புப் பொருள். இவற்றைப் பற்றிய ஆராய்ச்சியில் மிகக் குறைந்த அளவே அவற்றைப் பற்றித் தெரியும். மனித குலத்தால் அத்தனை அண்ட சராசர பிரபஞ்சங்களையும் ஒருகாலமும் முழுவதுமாய் அறிய முடியாது என்றே தோன்றுகிறது.

Hubble Ultra Deep Field 2014 (click to enlarge)
ஹப்பிள் தொலைநோக்கி படம்பிடித்த நமது பிரபஞ்சத்தின் ஒரு பகுதி



                மது பால்வெளி அண்டத்தின் அருகே நம்மைப் போலவே 30 அண்டங்கள் இருக்கிறது. மிகப் பக்கத்தில் இருப்பவர் "ஆண்ட்ராமீடா (Andromeda) கேலக்சி". நமது பால்வெளி அண்டம் எவ்வளவு பெரியது? ஒரு மணி நேரத்தில் மூன்று இலட்சம் கிலோமீட்டர் தொலைவு நீங்கள் பயணம் செய்தால் நமது பால் வெளி அண்டத்தின் கன்னியாக்குமரியிலிருந்து காஷ்மீர் வரை (ஒரு எல்லையிலிருந்து மறு எல்லை வரை) சென்று வர ஒரு இலட்சம் ஆண்டுகள் ஆகும். நமது சக்திக்கு உட்பட்டு இதுவரை 1,700 கிரகங்களைக் (extrasolar planets) கண்டுபிடித்துள்ளோம். இன்னும் பல ஆயிரக்கணக்கான கிரகங்கள் இருக்கின்றன. பூமியில் மட்டும்தான் உயிரினங்கள் இருக்குமா என்ன? இந்த ஆயிரமாயிரம் கிரகங்களில் ஒன்றில் கூடவா இருக்காது. அப்படி ஏதாவது இருக்கிறதா எனவும் தேடுதல் நடக்கிறது. அத்தகைய உயிரினங்கள் நம்மைவிட புத்திசாலி, அவற்றின் பெயர் ஏலியன் எனவும் ஒரு பக்கம் கதை ஓடுகிறது. பறக்கும் தட்டு, லொட்டு லொசுக்கு என செம த்ரில்லான டாப்பிக் அது.

Pillars of Creation
நெபுலா


             "ப்ளாக் ஹோல்" எனும் சமாச்சாரம் ஒன்று இருக்கிறது. நட்சத்திரங்கள் பிறந்து, வளர்ந்து, ஒளிவிட்டு, சாகும் தருவாயில் "ப்ளாக் ஹோல்" ஆகிவிடும். இதை கருந்துளை என அழகாய்த் தமிழ்ப்படுத்திருக்கின்றனர். பெயர்தான் கருந்துளை. மிகக்குறைவான இடத்தில் அபரிதமான ஆற்றலைக் கொண்டுள்ளது இந்தக் கருந்துளை. இந்த ஆற்றலின் ஈர்ப்பு விசையிலிருந்து எதுவுமே தப்பமுடியாது. ஆம், ஒளி உட்பட... அப்புறம் எப்படி இதை ஆராய்வது :( தற்போதைக்கு இத்தகைய கருந்துளைகள் இருப்பதை, அதைச் சுற்றி உள்ள நட்சத்திரங்கள் அண்டங்களின் நகர்வைக் கொண்டு அறிகின்றனர். தண்ணீரில் உள்ள சுழி, தண்ணிரில் மிதக்கும் இலை தழைகளைச் சுருட்டி தன் குழிக்குள் இழுப்பதைப் போல இந்தக் கருந்துளை தன்னைச் சுற்றியுள்ள நட்சத்திரங்களை "ஸ்வாகா" செய்கிறது. 


Stellar Quakes



நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ளவற்றைபற்றி அறிய தற்போது நமக்கு, 

  • Astrophysics Missions
  • Voyager 1 & 2
  • Hubble Telescope


போன்றவை உதவியாய் உள்ளன.


http://solarsystem.nasa.gov/multimedia/gallery/Interstellar_SS.jpg
Voyager 1 & 2



கடந்த காலங்களில்,

  • Pioneer 10 & 11
  • Deep Impact (EPOXI)
  • WISE (NEOWISE)

போன்றவை உதவியாய் இருந்தன.

                நமது பால்வெளி அண்டத்திலுள்ள அனைத்து நட்சத்திரங்களும் (சூரியன் உட்பட) பால்வெளி மண்டலத்தின் மையத்திலுள்ள கருந்துளையைச் சுற்றி வருகின்றன. நமது சூரியனைவிட 40 இலட்சம் மடங்கு ஆற்றலுடையது அந்தக் கருந்துளை. பூமியிலிருந்து அந்தக் கருந்துளையை அடைய, முன்பே கூறியது போல வினாடிக்கு மூன்று இலட்சம் கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் 28,000 வருடங்களில் போய்ச் சேர்ந்துவிடலாம். !!!

          நிலவுக்கு மனிதன் சென்றதே அதிகபட்ச தூரம். இன்னும் 15 வருடங்களில் செவ்வாய்க்குச் செல்லலாம். சூரியக் குடும்பத்தைவிட்டே இன்னும் நமது கருவிகள் வெளியே செல்லவில்லை. கோடிக்கனக்கான நட்சத்திரங்கள், அண்டங்கள்...பிரபஞ்சம் என கற்பனையில்தான் பிரயாணிக்க முடியும்.

நமது விண்வெளியினைப் பற்றி ஓரளவிற்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

இன்னும் தொடர்ந்து பார்க்கலாம்...



தொடரும்...

புகைப்பட உதவி: நாசா.

 கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம்.

இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் கருத்துகளை கீழே விட்டுச் செல்லுங்கள். நன்றி !!!

எஞ்சினியர்ஸ்.

                      ஒ ரு காலத்தில் கனவுப் படிப்பாக இருந்தது. சீட் கிடைப்பதே பெரும்பாடு. நுழைவுத் தேர்வு எழுதி பன்னிரெண்டாம் வகுப்பின் கட்...