Knowledge is good only if it is shared.

Sunday, October 12, 2014

டெல்டா IV

                           டிசம்பர் 4 ஆம் தியதிதான் விண்ணில் ஏவப்படுகிறது ஓரியன். இந்த ஓரியனைச் சுமந்து செல்வது டெல்டா IV. எட்டு வாரங்கள் இருக்கும் போதே ஏவுதளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு நேராக நிறுத்தியும் ஆகிவிட்டது. ஏன் இத்தனை அவசரம்?            லகின் சக்திவாய்ந்த செலுத்து வாகனத்தில் (Rocket) இதுவும் ஒன்று. டெல்டா குடும்பம் 1960 களில் இருந்தே இருந்தாலும், டெல்டா 2 மற்றும் 4 தான் இப்போதும் நாசாவால் பயன்படுத்தப்படுகிறது.       ஐ எஸ் ஆர் ஓ வின் மங்காயான் ஏவப்பட்ட போது நாசாவின் (NASA) "மேவன்" (MAVEN) கிளம்பிய அதே "கேப் கேனவரல்" தளத்திலிருந்துதான் "டெல்டா IV" புறப்படுகிறது. அதன் ஏவுதலைக் காண அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளேன். கிடைக்குமா எனத் தெரியவில்லை.(புட்டுக்கிச்சு.. அனுமதி மறுப்புக் கடிதம் அனுப்பிவிட்டார்கள் :( )
 குறிப்பு: மேவனைக் கொண்டு சென்றது டெல்டா  IV அல்ல, அது அட்லஸ் V.
             நாம் தான் இன்னும் பி எஸ் எல் வி யை மட்டும் வைத்து ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறோம். நாசா டெல்டா II, டெல்டா  IV மற்றும் அட்லஸ் V என கலக்கிக் கொண்டிருக்கின்றனர். பி எஸ் எல் வியின் லிஃப்ட் ஆஃப் திறன் (LIFT OFF): கிட்டத்தட்ட 300 டன்கள். டெல்டா  IV கிட்டத்தட்ட 750 டன்கள். லிஃப்ட் ஆஃப் திறனெல்லாம் கணக்கிடுவது அபத்தம். Geo Transfer Orbit வரை கொண்டு சொல்லும் payload எடை டெல்டா  IV கிட்டத்தட்ட 15 டன்கள். ஆனால் பி எஸ் எல் வி Geo Transfer Orbit வரை கொண்டு சொல்லும் payload எடை 1.5 டன்கள். கம்பேக் டு டெல்டா IV,

டெல்டா IV


                         ந்த டெல்டா IV -ல் மூன்று வெர்ஷன் இருக்கும். மீடியம், மீடியம் + மற்றும் ஹெவி. மீடியம் 4 டன் வரை கொண்டு செல்லும். மீடியம் + 6 டன்கள் வரை,  ஹெவி 14 டன்கள். ஓரியனைக் கொண்டுசெல்லும் டெல்டா IV ஹெவி மாடல். ஹெவி மாடலில் இரண்டு  ஸ்ட்ரெப் ஆன் பூஸ்டர்ஸ் LRB ஆக (Liquid Rocket Boosters) CBC (Common Boost Core) உடன் இருக்கும். இவை மூன்றிலும் இருப்பது RS- 68A இஞ்சின். இதோட "த்ரெஸ்ட்" 3137 கிலோ நியூட்டன். அப்புறம் 5 மீட்டர் "க்ரையோஜெனிக்" இரண்டாம் நிலையாக இருக்கும். இதில் RL-10B-2 இஞ்சின். இதோட "த்ரெஸ்ட்" 110 கிலோ நீயூட்டன். கடைசியில் 5 மீட்டருக்கு "காம்போஸிட் பயரிங்" அல்லது "மெட்டாலிக் பயரிங்" இஞ்சின் இருக்கும். இதில் முதல் இரண்டு நிலைகளும் 90 நிமிடங்களில் (ஒண்ணரை மணி நேரம்) 421 கிலோமீட்டர்கள் உயரத்தில் 7.66 கிலோமீட்டர் திசைவேகத்தில் ஓரியனைத் தள்ளிவிடும் என திட்டமிடப்பட்டுள்ளது. இது ஸ்பெஷலாக கிரகம் விட்டு கிரகம் செல்லும் செயற்கைக் கோளுக்காக தயாரிக்கப்பட்ட ஒன்று. இந்த ஓரியனும் விண்வெளியில் தொலை தூரத்திற்கு அனுப்பப்படுகிறது. இத்தகைய ஓரியன் வகை செயற்கைக் கோள்கள் பிற்காலத்தில் மனிதர்களைச் சுமந்து கொண்டு "செவ்வாய்" (MARS) செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டவை. அதற்கான முன்னோட்டம்தான் இந்த டிசம்பர் ஏவுதல். இரண்டு வருடத்திற்கு முந்தைய டெல்டா IV லாஞ்சிங் வீடியோ கீழே.


            ஓரியன் பற்றிய கட்டுரை இங்கே.

              கிரையோஜனிக் (CRYOGENIC) தான் நம்ம ஐ எஸ் ஆர் ஓ வைத் தண்ணி காட்டிக் கொண்டு இருக்கிறது. இந்த வருட (2014) நவம்பர் டிசம்பரில்  ஐ எஸ் ஆர் ஓ ஒரு கிரையோஜெனிக் இஞ்சின் பொருத்தப்பட்ட ஜி எஸ் எல் வி யை ஏவுவதாகத் திட்டம் இருந்தது. இந்தக் கட்டுரை எழுதும் இந்த நிமிடத்தில்  IRNSS 1C ஏவுதல் அக்டோபர் 10-லிருந்து அக்டோபர் 16-க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன் பின் தான் ஜி எஸ் எல் வி கதையைப் பார்க்க வேண்டும். இது தொடர்பான எனது பழைய கட்டுரை இங்கே.

2 comments:

Ramesh 123 said...
This comment has been removed by the author.
Ramesh 123 said...

the world has changed so much, different types of rockets they are used eg; saturn v telta, shuttles,atlas,ares,jupiter and much more, but we are not devoloped. geo stationary and polar satllite launching vehicle are used long years when devoloped isro sent to the manned objects to orbit,but i appriciate isro sent mangalyan to mars i salute. anyway nice information thnks.

திரிபுவாதம்

     முதலில்  விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் " தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...