Knowledge is good only if it is shared.

Tuesday, October 14, 2014

ஓரியான் அல்லது ஓரையான்

                         டெல்டா IV பற்றி ஏற்கனவே பார்த்துவிட்டோம். இந்த டெல்டா IV சுமந்து செல்லும் ஓரியனைப் (ஓரையன் என்றும் உச்சரிக்கின்றனர்) பார்ப்போம்.

ஓரியன் (புகைப்பட உதவி: விக்கிப்பீடியா)
           விண்வெளியில் மனிதன் அதிகபட்சம் போன தூரம் நிலவுதான். அதுவும் 1969- லியே சாதித்தாகிவிட்டது. அதன் பின்னான மனிதப் பயணம் எல்லாம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குத் தான். நிலவுக்கு அடுத்து மனிதன் செல்ல விரும்பும் இடம் செவ்வாய். இடையில் "அஸ்டிராய்டுகள்" பக்கமும் மனிதனின் காலடி படலாம். இவ்வாறான தொலைதூர விண்வெளிப் பயணங்களுக்காகவே (Deep Space Mission) உருவாக்கப்பட்டு வருவது தான் ஓரியன். மனிதனின் சந்திர மண்டலப் பயணத்திற்கு இணையான சாதனை இது.

ஓரியான் காப்ஸூல்

          2014 டிசம்பர் 4 அன்று ஏவப்படும் டெல்டா IV-ஓரியன் விண்கலத்தில் மனிதர்கள் யாரும் செல்லப் போவதில்லைதான். இருந்தாலும் இது அத்தகைய எதிர்காலப் பயணத்திற்கான முதல் படியாக் அமையும். புவியின் தாழ் வட்டப்பாதையைத் (LOE-Low Earth Orbit) தாண்டி மனிதன்சென்று திரும்பும் பிறகாலத்திய அனைத்துப் பயணங்களுக்கும் இது அடிப்படையாகும். புவியின் தாழ் வட்டப்பாதை (LOE-Low Earth Orbit) பூமியின் மேலே 160 முதல் 2000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரப்பு ஆகும். இதற்குள்தான்"சர்வதேச விண்வெளி நிலையம்" "உளவுச் செயற்கைக் கோள்கள்" "தகவல் தொடர்புச் செயற்கைக் கோள்கள்" "ஹப்பிள் தொலைநோக்கி" விண்வெளிக் கழிவுகளான சீனா அடித்து நொறுக்கிய எஃப் ஒய்-1சி (FY-1C) எனும் பெங்குயின் (Fengyun) வகைச் செயற்கைக் கோளின் பாகங்கள், இரிடியம் மற்றும் காஸ்மாஸ் செயற்கைகோள் மோதியதால் உடைந்த பாகங்கள் போன்றவை உள்ளன. இவற்றையெல்லாம் தாண்டி விண்வெளியின் தொலைதூரத்திற்குச் சென்று திரும்பும் வண்ணம் ஓரியான் தயாரிக்கப்படுகிறது.

https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a9/Orion_spacecraft_launch_configuration_%282009_revision%29.jpg/800px-Orion_spacecraft_launch_configuration_%282009_revision%29.jpg
ஓரியான்

           ந்திரனுக்குச் சென்று வந்த "அப்போலோ-11" வடிவத்திலேயே இந்த ஓரியனும் இருக்கும். (வடிவம் மட்டும்தான். தொழில்நுட்பம் பலமடங்கு புதியது) அதைப் போலவே கடலில் திரும்பி இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்வெளிக்குச் சென்று பூமிக்குத் திரும்பும் போது இதன் வேகம் மணிக்கு 45,000 (43,452) கிலோமீட்டராக இருக்கும். பூமியின் வாயுமண்டலத்தில் நுழையும் போது ஏற்படும் உராய்வினால் ஏற்படும் வெப்பத்தைத் தாங்கும் வண்ணம் இதன் வெளிப்புறத் தகடுகள் 16.5 அடி அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை 5000 டிகிரி பாரன்ஹீட் (2760 செல்ஸியஸ்) வெப்ப நிலையைத் தாங்கும். ஓரியான் பொதுவாக சந்திரன், அஸ்டிராய்டுகள் மற்றும் செய்வாய்க் கிரகத்திற்கு பத்திரமாகச் சென்று திரும்பும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. . மேலும் இது "சர்வதேச விண்வெளி நிலையத்தின்" "பேக் அப்" சிஸ்டமாகவும் இனைத்துக் கொள்ளும். ஆம், "ஆட்டோ டாக்கிங்" வசதி இந்த ஓரியானில் உள்ளது.

ஆட்டோ டாக்கிங்

          ட்கள் யாரும் இல்லாமலேயே தானாகவே சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து கிளம்பி சந்திரனுக்கோ அல்லது செவ்வாய்க் கிரகத்தின் சந்திரனுக்கோ சென்று ஆய்வை முடித்துக் கொண்டு திரும்பும்.
 

 மேலே உள்ள படத்தில் Crew Module எனும் crew Capsule தான் ஓரியானில் விண்வெளி ஆய்வாளர்கள் இருக்கும் பகுதி. இதுதான் பூமிக்குத் திரும்பி வரும். Launch abort System டெல்டா கிளம்பும் போது ஏதாவ்து விபத்து ஏற்பட்டால் சில மில்லி வினாடிகளுக்குள் crew Capsule "ஆட்டோ பைலட் எஜெக்ட் சிஸ்டம்" (Escape System) போல மூன்று வினாடிகளுக்குள் 500 அடி தொலைவில் ராக்கெட்டுகளில் உதவியால் அதிவேகத்தில் குதித்து "பாராசூட்" உதவியுடன் பத்திரமாய் தரையிறங்கிவிடும். விண்வெளி வீரர்களின் பாதுகாப்பிற்காக.       Service Module லானது Crew Module குத் தேவையான மின்சக்தி தண்ணீர், ஆக்ஸிஜன், நைட்ரஜன் போன்றவற்றை வழங்குகிறது. ஓரியானை உருவாக்குவதில் பல புதிய தொழில் நுட்பங்கள் புகுத்தப்பட்டதாக "நாசா" அறிவித்துள்ளது. முப்பரிமாண அச்சு (3D printing) , புதிய பத்தவைத்தல் (Welding) முறை போன்றவை அவை. இந்த ஓரியான் பூமிக்குத் திரும்பியதும் அவற்றை மீண்டும் பயன்படுத்தலாம். ஓரியான் பல்வேறு சவால்களைத் தாண்டிச் சென்று வரும். பூமியின் கவசமாக உள்ள "வான் ஆலன் பட்டை"யின் (van allen belt) கதிர்வீச்சு எல்லைக்கும் அப்பால் சென்று மீண்டும் இதனுள் திரும்பும். இதைத் தாண்டி செல்லும் போது கதிர்வீச்சுத் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதைத் தாங்கும் வண்ணம் crew Capsule வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை "அலுமினியம் லித்தியம் அலாய்" உலோகத்தால் ஆனவை. கதிர்வீச்சை உணரும் "உணரிகள்" (Sensors) இதன் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஓரியானில் ஆறு பேர் பயணிக்கலாம். இதன் சிஸ்டதிலுள்ள தகவல் பரிமாற்ற வேகம் சர்வதேச விண்வெளி நிலைய கணிப்பொறியின் தகவல் பரிமாற்ற வேகத்தைவிட ஆயிரம் மடங்கு அதிகம். இதன் சோலார் தகடுகள் மிகவும் மெல்லியவை. 19 அடி விட்டத்தில் 6000 வாட்ஸ் மின்சத்தியை உருவாக்குபவை. பேட்டரி பேக் அப் சிஸ்டமும் உண்டு.

ஓரியான் உருவாக்கம்.

      200 அடி உயரமும்  27.5 அடி விட்டமும், மையப் பகுதியில் க்ரையோஜெனிக் இஞ்சினையும் உடைய டெல்டா IV மற்றும் ஓரியான் மனித அறிவியலின் புதிய பரிமாணம். பிறகாலத்திய கோள்களுக்கிடையேயான பயணத்தின் முக்கிய நிகழ்வு இது. 2014 டிசம்பர் 4 நாசாவுக்கு மிக முக்கியமான நாள். மனித குலத்திற்கும் தான்.

ஓரியான்


புகைப்பட உதவி: நாசா மற்றும் விக்கிப்பீடியா

3 comments:

Ramesh 123 said...

thanks for the amazing information.

K.BALAKRISHNAN (BALA), TRICHY said...

பயனுள்ள தகவல்கள். மேலும் தொடர்ந்து எழுதுங்களேன்.

K.BALAKRISHNAN (BALA), TRICHY said...

பயனுள்ள தகவல்கள். மேலும் தொடர்ந்து எழுதுங்களேன்.

திரிபுவாதம்

     முதலில்  விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் " தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...