Knowledge is good only if it is shared.

Sunday, October 19, 2014

மங்கள்யானின் காலவரிசை

                               செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கள்யானின் காலவரிசை.

மங்கள்யான் தொடர்பான முதன்மைக் கட்டுரை இங்கே.

செவ்வாயை நோக்கி...



            ரு செயற்க்கைக் கோளை விண்ணில் ஏவி அதைக் கட்டுப்படுத்துவது என்பது உண்மையிலேயே மலைக்க வைக்கும் சாதனைதான். அதுவும் பல மில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில் சென்று கொண்டிருக்கும் செயற்கைக் கோளையும் அதிலுள்ள இயந்திரத்தை இயக்குவதும் பல்வேறு சவால்கள் நிறைந்தது. சமீபத்திய மங்கள்யான் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய ஒன்று. அமெரிக்காவின் கண்ணிப்பு ஆண்டெனாக்களின் உதவி மட்டும் பெறப்பட்டு மற்ற அனைத்தும் இந்திய முயற்சியிலேயே நடந்தேறிய ஒன்று இந்நிகழ்வு. அதன் ஒவ்வொரு நாளின் "டே பை டே" நிகழ்வு கீழே,

  • 05 நவம்பர் 2013 PSLV-C25 ஏவுகலன் மூலம் ஶ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து 14:38 மணிக்கு மங்கள்யான் ஏவப்பட்டது.
  •  
  •  07 நவம்பர் 2013 அன்று மங்கள்யான் பூமியைச் சுற்றும் நீளம் அதிகரிக்கப்பட்டது.
அதிகாலை 01:17 மணிக்கு 440 நியூட்டன் திரவ இயந்திரம் 416 வினாடிகள் இயக்கப்பட்டு மங்கள்யான் செயற்கைக் கோளின் நீள்வட்டப்பாதை பூமிக்கு அருகில் 252 கிலோமீட்டர்களாகவும் பூமிக்குத் தொலைவில் 28,825 ஆகவும் மாற்றப்பட்டது.
  • 08 நவம்பர் 2013 அன்று இரண்டாவது முறையாக மங்கள்யானின் நீள்வட்டப்பாதையின் நீளம் அதிகரிக்கப்பட்டது.
இதில் அதிகாலை 02:18:51 மணிக்கு 440 நியூட்டன் திரவ இயந்திரம் 570.6 வினாடிகள் இயக்கப்பட்டு மங்கள்யான் செயற்கைக் கோளின் நீள்வட்டப்பாதை பூமிக்குத் தொலைவில் 40,186 ஆக மாற்றப்பட்டது. 
  • 09 நவம்பர் 2013 மூன்றாவது முறையாக மங்கள்யானின் நீள்வட்டப்பாதையின் நீளம் அதிகரிக்கப்பட்டது.
அதிகாலை 02:10:43 மணிக்கு 440 நியூட்டன் திரவ இயந்திரம் 707 வினாடிகள் இயக்கப்பட்டு மங்கள்யான் செயற்கைக் கோளின் நீள்வட்டப்பாதை பூமிக்குத் தொலைவில் 71,636 ஆக மாற்றப்பட்டது. 
  • 11 நவம்பர் 2013 அன்று நான்காவது முறையாக மங்கள்யானின் நீள்வட்டப்பாதையின் நீளம் அதிகரிக்கப்பட்டது.
 14:38 மணிக்கு மங்கள்யான் செயற்கைக் கோளின் நீள்வட்டப்பாதை பூமிக்குத் தொலைவில் 78,276 கிலோமீட்டர்களாக ஆக மாற்றப்பட்டது. ( இதில் 1,00,000 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்குமாறு நீள்வட்டப்பாதையை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது முடியவில்லை) காரணம், primary and redundant coils சக்தியூட்டி 440 நியூட்டன் திரவ இயந்திரம் இயங்கும்போது நின்றுவிட்டது. பின்னர் attitude control thrusters மூலம் இயக்கப்பட்டதால் எதிர்பார்த்த திசைவேகம் கிடைக்கவில்லை. எனவே 1,00,000 கிலோமீட்டர்களுக்குப் பதில்  78,276 கிலோமீட்டர்களாக மட்டுமே நீட்டிக்கப்பட்டது.
  • நான்காவது முறை நீளத்தை சரியாக நீட்டிக்க முடியாததால் நான்கிற்கும் ஐந்திற்கும் இடையே 12 நவம்பர் 2013 அன்று ஒரு துணை திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதில் அதிகாலை 05:03:50 மணியளவில் 303.8 வினாடிகள் இயந்திரம் இயக்கப்பட்டு நீள்வட்டப்பாதையின் நீளம் 1,18,642 கிலோமீட்டர்களாக அதிகரிக்கப்பட்டது.
  • 16 நவம்பர் 2013 அன்று ஐந்தாவது (உண்மையில் ஆறாவது) முறையாக மங்கள்யானின் நீள்வட்டப்பாதையின் நீளம் அதிகரிக்கப்பட்டது.
இதில் இயந்திரம் 243.5 வினாடிகள் இயக்கப்பட்டு நீள்வட்டப்பாதையின் நீளம் 1,92,874 கிலோமீட்டர்களாக அதிகரிக்கப்பட்டது.




  • 1 டிசம்பர் சில முக்கிய செயல்கள் நடந்தது. 
  1. மங்கள்யான் "பார்வேர்ட் ரொட்டேஷன்" செய்யப்பட்டது.செவ்வாயை நோக்கித் தள்ளுவதற்காக  இது செய்யப்பட்டது.
  2. அதிகாலை 00:49-க்கு மங்கள்யானிலுள்ள இயந்திரம் 1328.89 வினாடிகள் இயக்கப்பட்டு 647.96 மீ/வினாடி திசைவேகத்துடன் செவ்வாயை நோக்கித் திருப்பப்பட்டது. இதை Trans Mars Injection (TMI) என்பர்.  
  3. தொடர்ந்து கண்காணித்து பாதை மாற்றம் செய்வதற்காக "மீடியம் கெயின் ஆண்டனா" (Medium Gain Antenna) இயக்கப்பட்டது. 


  •  2 டிசம்பர் அன்று மங்கள்யான் சந்திரனைத் தாண்டி சென்றது. மங்கள்யான் கடந்த தொலைவு 5,36,000 கிலோமீட்டர்.
  • 4 டிசம்பர், பூமியின் எல்லையைவிட்டு Sphere of Influence (SOI)) முழுவதுமாய் வெளியேறியது. பூமிக்கும் மங்கள்யானுக்கு இடையே 9,25,000 கிலோமீட்டர் தொலைவு ஆகும்.
  • 11 டிசம்பர், அதிகாலை 06:35 -க்கு முதல் பாதை சரிசெய்தல் (Trajectory Correction Manoeuvre (TCM)) செய்யப்பட்டது. 22 நியூட்டன் த்ரெஸ்டர்ஸ் (22 Newton Thrusters) இயந்திரம் 40.5 வினாடிகள் இயக்கப்பட்டு பாதை சரி செய்யப்பட்டது. இந்நேரத்தில் மங்கள்யான் பூமியிலிருந்து 29 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.
  • 11 பிப்ரவரி 2014, மங்கள்யான் ஏவப்பட்டு 100 நாட்கள் நிறைவு.
  • 09 ஏப்ரல் 2014, தனது மொத்தப் பயணத்தில் பாதித் தூரத்தை மங்கள்யான் கடந்தது.



  • 11 ஜூன் 2014, இரண்டாவது  பாதை சரிசெய்தல் (Trajectory Correction Manoeuvre (TCM))  மாலை 16:3 க்கு செய்யப்பட்டது. 22 நியூட்டன் த்ரெஸ்டர்ஸ் (22 Newton Thrusters) இயந்திரம் 16 வினாடிகள் இயக்கப்பட்டு பாதை மாற்றம் சரி செய்யப்பட்டது. இந்நேரத்தில் மங்கள்யானுக்கும் பூமிக்குமான தொலைவு 10,20,00,000 கிலோமீட்டர்கள். சமிக்கைகள் சென்று அடைய எடுக்கும் நேரம் 340 வினாடிகள். மங்கள்யான் தனது மொத்தப் பயணத் தொலைவான 68,00,00,000 கிலோமீட்டரில்  46,60,00,000 கிலோமீட்டர் தொலைவு பயணம் செய்துள்ளது. மங்கள்யானில் இணைக்கப்பட்டுள்ள ஐந்து அறிவியல் உபகரணங்களும் நல்ல நிலையில் இருப்பதாக ஐ எஸ் ஆர் ஓ அறிவித்தது.


  •  15 செப்டம்பர் 2014, செவ்வாயின் வட்டப்பாதையில் நுழைவதற்கானஇயந்திரத்தை இயக்கும் கட்டளைகள் மங்கள்யானில் தரவேற்றம் செய்யப்பட்டு சரி பார்க்கப்பட்டது.
  • 17 செப்டம்பர் 2014 நான்காவது பாதை சரிசெய்தல் (Trajectory Correction Manoeuvre (TCM)) செய்யப்பட்டது
  • 22 செப்டம்பர் 2014, பிற்பகல் 14:30 க்கு 440 நியூட்டன் திரவ அபோஜி மோட்டார் (440 Newton Liquid Apogee Motor (LAM)) சரியாக வேலை செய்யுமா என சோதனை செய்யப்பட்டது. கடைசியா இந்த மோட்டார் 1 டிசம்பர் 2013 அன்று இயக்கப்பட்டது. பத்து மாதங்களுக்குப் பின்னர் 3.968 வினாடிகள் இயக்கப்பட்டு இதன் செயல் நிலை உறுதி செய்யப்பட்டது. இதை இயக்கியதால் மங்கள்யானின் திசைவேகம் 2.18 மீ/வி என மாறியது.
  • 24 செப்டம்பர், மங்கள்யான் செவ்வாயின் வட்டப்பாதையில் நுழைவிக்கப்பட்டது. ஏற்கனவே கட்டளைகள் 15 செப்டம்பர் அன்று தரவேற்றப்பட்டிருந்த படி, இக்கட்டளைகள் மூலம் 440 நியூட்டன் திரவ அபோஜி மோட்டார் (440 Newton Liquid Apogee Motor (LAM)) மற்றும் இதைப்போன்ற எட்டு இயந்திரங்கள் அதிகாலை 07:17:32 மணிக்கு 1388.67 வினாடிகள் தானாகவே இயங்கின. மங்கள்யானின் திசைவேகம்  1099 மீ/வி ஆகும். மங்கள்யான் செவ்வாயின் வட்டப்பாதையில் நுழைந்து நீள்வட்டப்பாதையில் சுற்ற ஆரம்பித்தது. இந்நிகழ்வின் வரிசை கீழே,
  1. மீடியம் கெயின் ஆண்டனா மாற்றப்பட்டது
  2. மங்கள்யான் முன்னோக்கித் திரும்பியது. (Forward rotation)
  3. எதிர்பார்த்த மடி மங்கள்யானுக்கும் பூமிக்குமான சமிக்கைத் தொடர்பு அறுந்தது. செவ்வாயின் மறுபுறத்தில் சென்றது.  செவ்வாய் பூமிக்கும் மங்கள்யானுக்கும் இடையே இருந்தது.
  4. மீண்டும் தொடர்பு கிடைத்த போது 440 நியூட்டன் திரவ அபோஜி மோட்டார் (440 Newton Liquid Apogee Motor (LAM)) மற்றும் இதைப்போன்ற எட்டு இயந்திரங்கள் திட்டமிட்டபடி இயங்கியது உறுதி செய்யப்பட்டது.
  5. மங்கள்யான் செவ்வாயின் வட்டப்பாதையில் நுழைந்தது உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பான காணொளி ஒன்று கீழே,




7300 கிலோமீட்டர் தொலைவிலிருந்து மங்கள்யான் எடுத்த 376m ஸ்பேசியல் ரிசலூஷன் (spatial resolution) புகைப்படம் கீழே,
    http://isro.org/pslv-c25/Imagegallery/satellitesimages/mars1.jpg
    மங்கள்யான் எடுத்த செவ்வாயின் முதல் புகைப்படம்
  1. 421.7 கிமீ - 76,993.6 கிமீ நீள்வட்டப்பாதையில் மங்கள்யான் செவ்வாயைச் சுற்ற ஆரம்பித்தது.
  • 19 அக்டோபர் 2014 அன்று செவ்வாயின் அருகில் வரும் siding spring (C/2013 A1) எனும் விண்கல்லால் மங்கள்யான் பாதிக்கப்படாமல் இருக்க மங்கள்யானின் நீள்வட்டப்பாதை மாற்றியமைக்கப்பட்டது. இதற்கு 1.9 கிலோகிராம் எரிபொருள் செலவானது.
மங்கள்யானால் எடுக்கப்பட்ட புகைப்படங்களுள் சில கீழே,







புகைப்படம்: Olympus Mons, and More from ISRO's Mars Orbiter Mission
 
The largest mountain on Mars – the Olympus Mons and the famous Arsia, Pavonis and Ascraeus collinear mons adjacent to Daedalia Planum. Valles Marineris- the longest canyon in the solar system can also be seen.


புகைப்பட உதவி: ஐ எஸ் ஆர் ஓ


இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் பின்னூட்டக் கருத்துகள் என்னை மேம்படுத்தும். நன்றி

No comments:

எஞ்சினியர்ஸ்.

                      ஒ ரு காலத்தில் கனவுப் படிப்பாக இருந்தது. சீட் கிடைப்பதே பெரும்பாடு. நுழைவுத் தேர்வு எழுதி பன்னிரெண்டாம் வகுப்பின் கட்...