Knowledge is good only if it is shared.

Monday, October 27, 2014

வானியல்- 7 (சிறு கிரகங்கள், கைப்பர் பட்டை மற்றும் ஓர்ட் கிளவுட்)

சிறு கிரகங்கள், கைப்பர் பட்டை மற்றும் ஓர்ட் கிளவுட் - Dwarf Planets, Kuiper Belt and Oort Cloud


                சூரியக்குடும்பத்தின் கடைக்குட்டியான நெப்டியூனுக்குப் (புளூட்டோ கோளாக கருதப்படவில்லை) பிறகு என்ன இருக்கிறது? சிறு கிரகங்கள், கைப்பர் பட்டை மற்றும் ஓர்க் கிளவுட் இருக்கிறது. அதைப்பற்றி இந்தப் பகுதியில் பார்ப்போம்.



                 த்தொடரில் அடிக்கடி "புளூட்டோ" கோளாகக் கருதப்படவில்லை என சொல்லி வந்தேன்.  புளூட்டோ சூரியனைச் சுற்றும் தனது பாதையை ஒழுங்காக வைக்கவில்லை. புதன் முதலான நெப்டியூன் வரையிலான பிற எட்டு கிரகங்களைவிட இந்தச் சிறு கிரகங்கள் மிகச் சிறியவை. நமது நிலவை விட மிகச் சிறியவை. இத்தகைய சிறு கிரகங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு "புளூட்டோ" ஆகும். இவை எல்லாம் நெப்டியூனுக்குப் பின்னர் உள்ள "கைப்பர் பட்டையில்" அமைந்துள்ளன. இவை அனைத்தும் பனிக்கட்டியால் ஆனவை.




                          "புளூட்டோ" சூரியனிலிருந்து  5,90,00,00,000 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே "அஸ்டிராய்டுகள்" இருப்பதாக ஏற்கனவே பார்த்தோம். அந்த விண்கற்கள் கூட்டத்தில் அமைந்துள்ள சிறு கிரகமதான் "சிரஸ்" (Ceres) இது பூமியின் நாள் கணக்கில் 4.6 வருடங்களில் சூரியனை சுற்றி வலம் வரும். தன்னைத்தானே ஒரு முறை சுற்றி முடிக்க ஒன்பது மணி நேரம் ஆகும். இத்தகைய சிறு கிரகங்கள் பாறைகள் அல்லது பனிக்கட்டியால் ஆனவை. அது பாறையா அல்லது பனிக்கட்டியா என்பது அது அமைந்துள்ள இடத்தைப் பொறுத்தது. நெப்டியூனுக்கு பிறகு அமைந்துள்ள சிறுகிரகங்கள் அனைத்தும் பனிக்கட்டியால் ஆனவை. அஸ்டிராய்டு பட்டையில் அமைந்துள்ள சிறுகிரகங்கள் பாறையால் ஆனவை. பெரும்பாலான சிறுகிரகங்களுக்கு நிலவு உண்டு. இவைகளுக்கு வளையம் (புளூட்டோ விதிவிலக்கு, இதுக்கு மெல்லிய வளையமும் 5 நிலவும் உண்டு) இருப்பதாய் தகவல் இல்லை.



                 "ரிஸ்" எனும் சிறு கிரகத்திற்கு மிக மெல்லிய வளிமண்டலம் உண்டு. இங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்பு இல்லை. நமது சூரியக் குடும்பத்தின் முன்னாள் கடைக்குட்டியான "புளூட்டோ" 2006 ஆண்டு கோள் என்ற வாய்ப்பை இழந்தார். அவரைப் போல இன்னும் பலர் "கைப்பர் பட்டை"யினுள் இருப்பதால் ஏற்பட்ட விவாதத்தின் அதன் கிரகம் என்ற அந்தஸ்து பறிக்கப்பட்டது. "நாசா"வால் ஏவப்பட்ட "நியூ ஹாரிஸன்" விண்கலம் இந்த "கைப்பர் பட்டை"யினுள் சென்று ஆராயும்போது இன்னும் அதிக தகவல்கள் கிடைக்கும்.

கைப்பர் பட்டை - Kuiper Belt


              சூரியனிலிருந்து பல ஆயிரம் கோடிக்கணக்கான தொலைவிற்கு அப்பால் நெப்டியூனுக்கும் பிறகான பகுதியில் ஒரு தட்டைப் போல (disc-shaped region) பகுதியில் பல பனிக்கட்டியினாலான சிறுகோள்கள்  காணப்படுகின்றன. "புளூட்டோ" மற்றும் "இரிஸ்" போன்றவை இப்பகுதியில்தான் உள்ளன. இது ஒரு ஐஸ் உலகம். இங்குள்ளவை எல்லாம் நமது பூமியின் நிலவைவிட சிறியவையே. பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தொலைவைப் போல 30 முதல் 55 மடங்கு தொலைவில் நெப்டியூனுக்கு அப்பால் இந்த கைபர் பட்டை உள்ளது.

Artist's concept of Eris and its moon. The sun is in the distance.
கைப்பர் பட்டை மற்றும் ஓர்ட் கிளவுட்



             200 வருடங்களுக்குள் ஒருமுறை பூமியை எட்டிப் பார்க்கும் வால்நட்சத்திரம் எனும் எரிகற்கள் இங்கிருந்துத்தான் வருகின்றன. வரும் வேகத்தில் பனிக்கட்டி உருகி சூரிய ஒளின் எதிர் திசையில் தெரிவதையே நாம் வால் என நினைக்கிறோம். சரி இந்த வாலின் நீளம் எவ்வளவு தொலைவு இருக்கும். அதிகமில்லை ஜெண்டில்மேன், சில இலட்சம் கிலோமீட்டர் தொலைவிற்கு நீண்டிருக்கும். 100 கிலோமீட்டருக்கும் அதிக விட்டமுடைய பல ஆயிரம் கோடி ஐஸாலான பொருட்கள் இந்த கைப்பர் பகுதியில் உள்ளன. இங்குள்ள சிறு கோள்களுக்கு சிறிய அளவிலான நிலவும் உண்டு. அடுத்த வருடம் 2015 "நியூ ஹாரிஸன்" விண்கலம் புளூட்டோவை எட்டும். அதன் பிறகே இது தொடர்பான இன்னும் பல தகவல்கள் கிடைக்கும். இந்த கைப்பர் பட்டையைக் 1950 களில் கண்டு பிடித்தவர்கள் Gerard Kuiper மற்றும் Jan Oort. இந்தக் கைப்பர் பட்டையும் சூரியக் குடும்பத்தின் அங்கமே.
 

ஓர்ட் க்ளவுட் - Oort Cloud


Color illustration of New Horizons at Pluto. Links to mission page.
"நியூ ஹாரிஸன்" விண்கலம்



                 துவும் ஐஸ் பொருட்களால் ஆன பகுதிதான். கைப்பர் பட்டைக்குப் பிறகு வரந்து விரிந்து இருகிறது. 200 வருடங்களுக்கும் மேலான இடைவெளியில் பூமியை எட்டிப்பார்க்கும் வால்நட்சத்திரம் எனும் எரிகற்கள் இங்கிருந்துத்தான் வருகின்றன.

                  கடந்த வாரம் (19 அக்டோபர்) இந்த "ஓர்ட் க்ளவுட்" பகுதியிலிருந்து வால் நட்சத்திரமாய் செவ்வாய் கோளுக்கு Comet Siding Spring அல்லது C/2013 A1 என்ற பெயரில் விருந்துக்கு வந்த விருந்தாளியை "ஹப்பிள்" தொலை நோக்கி பிடித்த படம் கீழே,


Compass and Scale Image for Mars and Comet Siding Spring




          பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தொலைவைப் போல 5 ஆயிரம் முதல் 1 இலட்சம் மடங்கு வரையிலான தொலைவிற்குப் பரந்து காணப்படுகிறது. இந்த "ஓர்ட் க்ளவுட்" பகுதி.

கைப்பர் பட்டை மற்றும் ஓர்ட் கிளவுட்


          லட்சம் கோடிக்கும் அதிகமான பனிக்கட்டியினாலான பொருட்கள் இங்கு உள்ளன. "ஓர்ட் க்ளவுட்"-டை 1950 களில் கண்டு பிடித்தவர்கள் Gerard Kuiper மற்றும் Jan Oort. இந்த "ஓர்ட் க்ளவுட்"-டும் சூரியக் குடும்பத்தின் உறுபினர் ஆவார்.


ஓர்ட் க்ளவுட்டிலிருந்து வந்த "ஹாலி-பாப்" வால் நட்சத்திரம்.

சூரியக் குடுப்பத்தினை ஓரளவு சுருக்கமாகப் பார்த்துவிட்டோம். இனிமேல் அண்டம், நட்சத்திரம், நெபுலா, சூப்பர் நோவா, "ப்ளாக் ஹோல்", பிரபஞ்சம், வானியல் அலகுகள், வளர்ந்த நாடுகளின் வானியல் திட்டங்கள் என ஒவ்வொன்றாய் பார்க்கலாம்.

தொடரும்...

புகைப்பட உதவி: நாசா

கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம்.

இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் பின்னூட்டக் கருத்துகள் என்னை மேம்படுத்தும். நன்றி

2 comments:

pradeep kumar said...

Mr. Bala,

Your series about the space is really an awesome one, very informative and in understandable tamil as well. Keep the good work

பாலா.R ( BALA.R ) said...

நன்றி pradeep kumar :)

எஞ்சினியர்ஸ்.

                      ஒ ரு காலத்தில் கனவுப் படிப்பாக இருந்தது. சீட் கிடைப்பதே பெரும்பாடு. நுழைவுத் தேர்வு எழுதி பன்னிரெண்டாம் வகுப்பின் கட்...