Knowledge is good only if it is shared.

Friday, October 17, 2014

வானியல்- 4 (சர்வதேச விண்வெளி நிலையம்)

                                        சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station)
 
                                    தினாறு நாடுகள் இணைந்து விண்வெளியில் தங்கியிருந்து சோதனைகள் செய்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் சர்வதேச விண்வெளி நிலையம்.  இங்கே பூமியிலெல்லாம் சோதனை செய்ய முடியாதா? அங்கு போய்தான் செய்ய வேண்டுமா? எனபவர்களுக்கு, பூமியில் ஈர்ப்புவிசை இல்லாத இடத்தை உருவாக்கவே முடியாது. ஆனால்  சர்வதேச விண்வெளி நிலையத்தின் மீச்சிறு ஈர்ப்புவிசை (Micro Gravity) பல்வேறு சோதனைகளுக்கு உதவியாய் உள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையம்


                      ரி, எங்கே இருக்கிறது இந்த சர்வதேச விண்வெளி நிலையம்? பூமியிலிருந்து கிட்டத்தட்ட 400 கிலோமீட்டர் உயரத்தில் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கிறது இது. நாசாவின் "ஸ்பேஸ் ஷட்டில்" (Shuttle flights) மற்றும் ரஷ்யாவின் "சோயுஸ்" (Soyuz) மூலமாக அனைத்து பொருள்களையும் பூமியிலிருந்து மேலே கொண்டு சென்று பூமியின் வட்டப்பாதையில்  ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டது இது. 1998-ல் கட்டமைக்கப்பட்ட மனிதனின் அற்புதமான பொறியியல் சாதனை. ஒவ்வொரு 92 நிமிடங்களுக்கு ஒரு முறை இது பூமியைச் சுற்றி முடித்திருக்கும். பூமியைச் சுற்றும் வேகம் மணிக்கு 28,000 கிலோமீட்டருக்கும் கொஞ்சம் அதிகம். இதற்குப் பங்களிக்கும் நாடுகளின் நிறுவனங்களைப் பற்றிய விளக்கப்படம் கீழே,

http://www.nasa.gov/images/content/491604main_main_facilities2.jpg
பங்களிக்கும் நாடுகள்


 
             "ஷ்யா"வின் கஸாக்ஸ்தானிலிருந்து 1998 நவம்பர் 20 "புரோட்டான்-கே" (Proton-K) ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. இதன் சுற்றுப்பாதை அப்போதும் ஏறக்குறைய வட்டவடிவிலேயே இருந்தது. (384 முதல் 396 கிலோமீட்டர்). இதன் தற்போதைய உயரம் 420.7 முதல் 424.1 கிலோமீட்டர் ஆகும்.  


சர்வதேச விண்வெளி நிலையதில் விண்வெளி நடை                    1984-ல் அமெரிக்காவின் "ரொனால்ட் ரீகன்" காலத்தில் இதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. நிதிச்சுமை காரனமாக பங்காளிகளைத் தேடியது. அமெரிக்கா, ஜப்பன், ரஷ்யா, கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்றவங்கதான் முக்கிய பார்ட்னர்கள்.  தற்போதைக்கு ஆறு விஞ்ஞானிகள் இருக்காங்க. அதில் "ரஷ்யா"வைச் சேர்ந்த "எலினா சரோவா"வும் ஒருவர். அந்த அக்கா போட்டோதான் கீழே இருக்கு. (மற்ற ஐவரும் ஆண்கள்). இவர்கள் அடிக்கடி இந்த விண்வெளி நிலையத்தை விட்டு வெளியே வந்து விண்வெளி நிலையத்தின் வெளிப்பாகங்களில் சில வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும். இதை விண்வெளி நடை என்பர்.மிகவும் கடினமான ஒன்று இது. விண்வெளி வீரர்கள் அதிக நாட்கள் இங்கு தங்கியிருந்து சோதனை செய்து பின்னர் பூமிக்குத் திரும்புவர்.


எலினா சரோவா

            ருத்துவம், தாவரயியல், விலங்கியல், பூமிக் கண்காணிப்பு, கதிர்வீச்சு இன்னும் பலப்பல ஆராய்சிகள் இங்கு நடக்கிறது. மனித குலத்திற்குத் தேவயான ஆராய்சிகளை இங்கு விண்வெளி வீரர்கள் செய்கின்றனர். இவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் பிற உபகரணங்கள் எல்லாம் அமெரிக்காவின் ஷட்டில் மூலம் போய்ச் சேருகிறது. இந்த விண்வெளி நிலையத்தில் மேலும் பல பகுதிகளை இணைக்கலாம். இவ்வாறு இணைப்பதை "டாக்கிங்" (Docking) என்றும் அதிலிருந்து பிரிப்பதை "அண்டாக்கிங்" (Undocking) என்றும் அழைப்பர். தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் "ஓரியான்" இதனோடு தானாகவே "டாக்கிங்" செய்து கொள்ளும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையம்

  • சர்வதேச விண்வெளி நிலையத்தின் நீளம்:109 மீட்டர் 
  • ஐந்து ஸ்கேட்டிங் வளயங்களின் அகலம்: 129.5 மீட்டர்
  • சர்வதேச விண்வெளி நிலையத்தின் அகலம்: 73 மீட்டர்
  • ஸ்கேட்டிங் வளயங்களின் நீளம்: 60.96 மீட்டர் 60.96
             து ஒரு காற்பந்தாட்ட மைதானத்தின் அளவு அல்லது ஹாக்கி மைதானத்தின் அளவு இருக்கும். ரஷ்யாவின் "மிர்" ஆய்வு மையத்தில் நாசா விஞ்ஞானிகள் 27 மாதங்கள் தங்கியிருந்து பயிற்சி செய்தனர். அதன் பின்னர்இந்த சர்வதேச விண்வெளி நிலையம் கட்டப்பட்டது. சந்திரனுக்கோ அல்லது செவ்வாய் உள்ளிட்ட கோள்களுக்கோ செல்லும் போது இங்கு சென்று தங்கி பின்னர் செல்லும் வகையில் பிற்காலத்தில் செயல்படும். இது குறைந்த பட்சம் 2020 வரை இருக்கும். அதிகபட்சம் 2028 வரை செயல்படலாம். ரஷ்யா - உக்ரேனியப் பிரச்சனையில் அமெரிக்காவினுடனான உரசல் காரணமாய் ரஷ்யா 2020-குப் பின்னர் இந்த விண்வெளி நிலையத்திலிருந்து விலகிக் கொள்தாக அறிவித்துள்ளது. அனைத்து சோதனைகளும் செய்து முடித்தாகிவிட்டது (!) என நம்பமுடியாத காரணம் ஒன்றைச் சொல்லியுள்ளது. உண்மையிலேயே அமெரிக்காவிற்கு கஷ்டமான விஷயம் இது. இது மட்டும் அல்ல ரஷ்யாவின் RD-180 இயந்திரத்தை அமெரிக்க ராக்கெட்டுகளில் பயன்படுத்தவும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது ரஷ்யா. RD-180 பற்றி இன்னுமொரு கட்டுரையில் பார்க்கலாம்.

தொடரும்...

புகைப்பட உதவி: நாசா மற்றும் கனடா ஸ்பேஸ் ஏஜென்ஸி

கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம்.


 இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் பின்னூட்டக் கருத்துகள் என்னை மேம்படுத்தும். நன்றி

No comments:

திரிபுவாதம்

     முதலில்  விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் " தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...