Knowledge is good only if it is shared.

Thursday, October 2, 2014

பிஎஸ்எல்வி- சி26 PSLV- C26 (IRNSS-1C)

ஜூன் 30, 2014 அன்று விண்ணில் பறந்த பிஎஸ்எல்வி- சி 23 பற்றிய எனது கட்டுரை இங்கே.

       என்ன இது கடைசியாக பிஎஸ்எல்வி- சி23 தானே விண்ணில் ஏவப்பட்டது அதன் பின்னர் பிஎஸ்எல்வி- சி24 தானே வர வேண்டும் என்பவர்களுக்கு,
  பிஎஸ்எல்வி- சி24 ஏற்கனவே ஏவியாகிவிட்டது. பிஎஸ்எல்வி- சி25 2013 நவம்பரில் மங்கள்யானைக் கொண்டு சென்றது. எனவே இப்போது பிஎஸ்எல்வி- சி26 ன் முறை.
          பிஎஸ்எல்வி- சி26 IRNSS- 1C யைக் கொண்டு செல்கிறது. இந்த வரிசையில் ஏற்கனவே IRNSS- 1A மற்றும் IRNSS- 1B செயற்கைக் கோள்களை முறையே பிஎஸ்எல்வி- சி22 மற்றும் பிஎஸ்எல்வி- சி24 எடுத்துச் சென்றது. IRNSS என்பதை Indian Regional Navigation Satellite என்பர். இதை அழகுத் தமிழில் இந்தியப் பகுதிகான இடஞ்சுட்டும் செயற்கைக் கோள் அமைப்பு எனச் சொல்லலாம். பொதுவாக நேவிகேஷன் செயற்கைக் கோள் இது. இந்த வரிசையின் மூன்றாவது செயற்கைக் கோள் இது. இந்த வரிசையில் இன்னும் நான்கு செயற்கைக் கோள்கள் பாக்கி இருக்கிறது. ஆம், IRNSS- 1A முதல் IRNSS- 1G வரை மொத்தம் ஏழு செயற்கைக் கோள்களை ஏவும் திட்டம் இருக்கிறது. ஏற்கனவே ஏவப்பட்ட IRNSS- 1A மற்றும் IRNSS- 1B போன்றவை நிலைகொண்டுள்ள பகுதியின் வரைபடம் கீழே,
IRNSS- 1A

IRNSS- 1B

                  இரண்டுமே மடகாஸ்கர் முதல் ஈரான் வரையிலான கடற்பகுதியைக் கண்காணிக்கின்றன. சரக்குக் கப்பல்கள் தீவிரவாத ஊடுருவல் போன்றவற்றிற்காக இருக்கலாம். மேலும் இவை பொதுவாக பூமியிலிருந்து சராசரி 36,000 கிலோமீட்டர்கள் உயரத்தில் இருக்கும். எப்போதும் இதே பகுதியைக் கண்காணிக்கும் வண்ணம் பூமியின் ஒரு குறிப்பிட்டப் பகுதியை நோக்கி இருக்க வேண்டுமெனில் இந்த  உயரத்தில் சுற்றினால் தான் சாத்தியப்படும். இச்செயற்கைக் கோள்களின் வேகம் வினாடிக்கு ஒன்று முதல் ஒன்றறை கிலோமீட்டர்கள். சரி விஷயத்திற்கு வருவோம். பிஎஸ்எல்வி- சி26 வழக்கம் போல ஶ்ரீஹரிக்கோட்டாவிலிருந்துகிளம்புகிறது. பிஎஸ்எல்வி விஷயத்தில் நாம் பாண்டித்யம் பெற்ற நிபுணர்கள். பிஎஸ்எல்வி- சி26 புகைப்படம் கீழே,
ஏவுதளத்தில் தயாராய்.


       

செயற்கைக் கோளின் புகைப்படம் கீழே,
                  இந்தச் செயற்கைக் கோளானது எலக்ட்ரோ மேக்னட்டிக் பரிசோதனை மற்றும் அதிர்வு தாங்கும் சோதனை போன்ற சிலவகை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே விண்ணில் ஏவப்படும். அத்தகைய பரிசோதனைகள் சிலவற்றின் புகைப்படம் கீழே,

அதிர்வு தாங்கும் சோதனை

Electro- Magetic Interference and Electro-Magetic Compatibility(EMI-EMC) tests
Acoustic testசரி, எதற்காக இந்த IRNSS-1C செயற்கைக்கோள்?
 • Navigation
 • Vehicle tracking
 • Precise timing
 • Navigation aid for hikers and travellers
 • Disaster management
 • Integration with mobile phones
 • Mapping and geodetic data capture
 • Visual and voice navigation for drivers.
         இவ்வளவு வேலைகளையும் இந்தச் செயற்கைக் கோள் அடுத்த பத்தாண்டுகளில் செய்யப்போகிறது. ஆம் இதோட ஆயுள் பத்து வருடம். உருவம், 1.5 மீட்டர் கனசதுர (1.58 X 1.50 X 1.50) வடிவில் இருக்கும். எடை(உண்மையில் நிறை எடை அல்ல)  600 கிலோகிராம்கள் (600.1Kg)

என்னென்ன உபகரணங்களெல்லாம் IRNSS-1C செயற்கைக்கோளில் உள்ளது?

 • Star sensors
 • Global horn
 • Corner cube retro reflector
 • c-band horn
மேலும் ஏவிமுடித்ததும் செயற்கைக் கோளைக் கட்டுப்படுத்தி பாதை மாற்றம் மற்றும் பிற செயல்களுக்காக,
440 நியூட்டன் திரவ Apogee motor மற்றும் 22 நியூட்டன் thursters போன்றவை இருக்கும்.

இவ்ளோ டீட்டெயில் போதும். பேக் டு  PSLV- C26.

PSLV- C26 அசெம்பிளி லைன் பிகைப்படங்கள் கீழே,                                    

      பி எஸ் எல் வி-யின் XL வேரியண்ட் இந்த சி26. 44.4 மீட்டர்கள் உயரம் உடையது. மொத்தம் நான்கு நிலை உண்டு. ஆறு ஸ்ட்ரெப் ஆன் பூஸ்டர்ஸ். நான்கு கிளம்பும் போதே எரியத்தொடங்கும் மீதம் இரண்டும் 25 வினாடிகள் கழித்து வானில் போய்க்கொண்டிருக்கும் போது இயங்கத் தொடங்கும். 
முதல் மற்றும் மூன்றாவது நிலைகளில் திட எரிபொருள். HTPB என்பது அதனோட பொயர். அதை  Hydroxyl Terminated Poly Butadiene  என விரிவாக்கம் செய்யலாம். இரண்டாம் மற்றும் நான்காம் அடுக்குகளில் திரவ எரிபொருள். இரண்டாவது அடுக்கில் Unsymmetrical Dimethyl Hydrazine எனும் UH25 மற்றும் Notrogen Tetroxide  கலவை. நான்காவது அடுக்கில் Mono Methyl Hydrazine எனும் MMH மற்றும் Mixed Oxides of Nitrogen கலவை எரிபொருளாக இருக்கும்.
இவை எல்லாம் சேர்ந்து கிட்டத்தட்ட 20 நிமிட (20.31minutes) நேரத்தில் 500 கிலோமீட்டர்கள் (499.63Km) உயரத்தில் IRNSS-1C செயற்கைக்கோளை ஏவிவிடும். அதன் பின்னர் அதிலுள்ள மோட்டார்களை இயக்கி பாதை மாற்றம் (மொத்தம் நான்கு முறை) எல்லாம் செய்து நீள்வட்டப்பாதையில் சுற்றிவரச் செய்து பின்னர் 3600 கிலோமீட்டர்கள் தொலைவில் எப்போதும் இந்தியாவின் குறிப்பிட்ட பகுதியை நோக்கியே (Geostationary) சுற்றி வரும்படி  வட்டப்பாதைக்கு மாற்ற வேண்டும். இதை ஐ எஸ் ஆர் ஓ-வின் ஹசன்(Hassan) கட்டுப்பாட்டு அமைப்பு பார்த்துக் கொள்ளும். அக்டோபர் 10, 2014 அன்று விண்ணில் ஏவப்படுவதாக அறிவிக்கப்பட்டு தற்போது ஒரு வாரம் கழித்து ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்பட உதவி: ஐ எஸ் ஆர் ஓ.

No comments:

திரிபுவாதம்

     முதலில்  விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் " தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...