Knowledge is good only if it is shared.

Monday, October 6, 2014

வானியல்-1 (சூரியக் குடும்பம்)

                  சூரியக் குடும்பம் (Solar System)
 
             படித்ததைப் பகிர்ந்து கொள்ளலாம் என ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த வலைப்பூ. சொந்தமாய் மனதிற்குள்ளே பேசுவதைவிட என்றாவது யாராவது படிக்கக் கூடும் என்ற அசட்டுத் துணிச்சலில் தான் ஆரம்பித்தேன். ஆடு புழுக்கை போடுவது போல தினமும் எழுதவேண்டுமென்ற நல்லூழெல்லாம் கிடையாது. உண்மையாக இதைப் பகிரலாம் எனத் தோன்றிவற்றையே எழுதிவந்துள்ளேன். அந்த விதியின் படி "வானியல்" பற்றி எனக்குத் தெரிந்ததை எழுதலாம் என ஆரம்பித்தது தான் இப்பதிவு. எனக்கு என்ன தகுதி எனக் கேட்கிறீர்களா? தமிழில் வானியல் தொடர்பாய் விசாலமாய்க் கட்டுரைகள் இல்லை என்பது போதாதா?


இனி...,
                        விண்வெளியைப் பற்றியும் அதிலுள்ள கோள்கள், துணைக் கோள்கள், சூரியன் முதலான நட்சத்திரங்கள், நட்சத்திரத் திரள்கள் செயற்கைக் கோள்கள் அதற்குரிய செலுத்துவாகனங்கள் என கலந்து கட்டி இருக்கும் இத்தொடர்.

சூரிய மண்டலம்:

சூரியனைச் சுற்றி வரும் கோள்கள், துணைகோள்களனைத்தும் சேர்த்து சூரிய மண்டலம் என்கிறோம். அஸ்டிராய்ஸ் கொஞ்சம் இருக்கு அதைப் பின்னாடி பார்க்கலாம்.
இதில் புதன் முதற்கொண்டு நெப்டியூன் வரை எட்டு  கோள்கள் உள்ளன.
வெயிட் ப்ளீஸ்..புளூட்டோ உள்ளெ வெளியே கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது. எனவே அதை சேர்ப்பதா அல்லது விலக்கிவைக்கவா என பெரும் பஞ்சாயத்தே ஓடிக் கொண்டிருக்கிறது.
கோள்கள்:
புதன் (Mercury)
வெள்ளி (Venus)
பூமி (Earth)
செவ்வாய் (Mars)
வியாழன் (Jupiter)
சனி (Saturn)
யுரேனஸ் (Uranus)
நெப்டியூன் (Neptune)

என எட்டுக் கோள்கள். புளூட்டோவையும் (Pluto) சேர்த்தால் ஒன்பது. சந்திரன்பூமியின் துணைக்கோள். இது போல சில கிரகங்களுக்கு துணைக்கோள்கள் உள்ளன. இவையெல்லாம் கலிலியோ கோபர் நிகஸ் போன்ற ஜாம்பவான்கள் பலவருட ஆராய்ச்சியில் சொன்னவை. நமது ஜோதிட மரபிலும் இவை இருக்கின்றன.இந்த எட்டுக் கோள்களில் கீழுள்ளவை Terrestrial Planets.

புதன் (Mercury)
வெள்ளி (Venus)
பூமி (Earth)
செவ்வாய் (Mars)

போன்றவை அனைத்தும் வடிவத்திலும் உட்பொருளிலும் பூமியைப் போலவே இருக்கும். அதற்காக பூமியைப் போலவே என நினைத்துவிட வேண்டாம். பூமியில் அதிக அளவு தண்ணீரும் ஆக்ஸிஜன் நிரம்பிய காற்றும் உள்ளது. மனிதன் பிற கோள்களில் சில நிமிடங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும்.

மீதியுள்ளவை Jovian Planets.
வியாழன் (Jupiter)
சனி (Saturn)
யுரேனஸ் (Uranus)
நெப்டியூன் (Neptune)

Jovian Planets எல்லாம் வியாழன் கிரகத்தைப் போன்றவை. மிக மிகப் பெரிய உருவமுடையவை. வியாழன் கிரகத்தின் விட்டம் (diameter) பூமியைவிட 11.2 மடங்குப் பெரியது.
கணக்கில் வராத புளூட்டோ கைவிடப்பட்ட கிரகமாக அல்லாடிக் கொண்டிருக்கிறது.

உருவங்கள் ஒப்பீடு


மேலே உள்ளப் படத்தில் கிரகங்களின் உருவங்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.இதில் மனித இனம் பூமியின் துணைக்கோளான நிலவுக்கு மட்டுமே சென்று வந்துள்ளது. அதுவும் சாதனைக்காகவும் சில ஆராய்ச்சி நோக்கங்களுக்காகவும். செவ்வாய் கிரகத்திற்கு அமெரிக்க விரைவில் மனிதரை அனுப்பும். அடுத்தக் குடியேற்றம் நடக்கும் கிரகமாக செவ்வாய் கணிக்கப்படுகிறது.
 இன்னும் எத்தனையோ கோள்கள், சூரியக்குடும்பங்கள் என கலந்து கட்டியதுதான் நமது பேரண்டம் (Galaxy). அதில் இப்போதுதான் பக்கத்து வீட்டிற்குச் செல்லவே முயற்சிக்கிறோம். இன்னும் தெருதாண்டி ஊர் தாண்டி மாவட்டம் தாண்டி மாநிலம் தாண்டி உலகை வலம் வர எவ்வளவு காலம் ஆகுமோ தெரியவில்லை. அதுவரை நமது சூரியன் உயிரோடிருக்குமா எனவும் தெரியவில்லை. ரெம்பக் குழப்பிக்க வேண்ட்டாம்.  ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

புகைப்பட உதவி: நாசா
தொடரும்...

கீழேயுள்ள "வானியல் தொடர்" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம்.


இக்கட்டுரையைப் பற்றிய உங்களின் பின்னூட்டக் கருத்துகள் என்னை மேம்படுத்தும். நன்றி

 

2 comments:

Anonymous said...

V good.. Good initiative... And Thx

- Juergen

பாலா.R ( BALA.R ) said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Juergen .

திரிபுவாதம்

     முதலில்  விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் " தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...