Knowledge is good only if it is shared.

Sunday, June 29, 2014

PSLV-C23         ந்தியாவின் மானத்தைக் பறக்கவிட அரசியல்வாதிகள் இருப்பது போல் நமது பெருமையைப் பறக்கவிட இருக்கும் சிலவற்றுள் ஐஎஸ்ஆர்ஓ வும் ஒன்று. இருக்கும் பொருளாதாரத் தகுதியை வைத்து நாலுகால் பாய்ச்சலில் வேகமெடுக்கும் துறை இது. எப்படிப் பார்த்தாலும் அடிக்கடி வியக்கும் வண்ணம் செய்திகளில் அடிபடுகிறது. இதோ நாளை காலை 09:52 ற்கு (30-06-2014) அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது.
 PSLV மிகவும் நம்பகமான vehicle நமக்கு. அதுவும் GSLV மற்றும் GSLV Mark III யைவிட மிகவும் நம்பகமானது. (GSLV Mark III இன்னும் ரெடியாகவில்லை).

பை தி வே  PSLV யை கொஞ்சம் விலாவாரியா பாத்திரலாம்.
 • உயரம் 44.4 மீட்டர்.
 • லிஃப்ட் ஆஃப் வெயிட் 2,95,000 கிலோ (295 டன்)
 • 4 நிலை (stages)
 • முதல் நிலையில் (stage) இருக்கும் பூஸ்டர் உலகிலேயே மிகப் பெரிய பூஸ்டர். (solid propellant booster)
 • வெற்றி விகிதம் அதிகம். 2014 ஏப்ரல் வரை 25 முறை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்துள்ளது.
 • 1600 கிலோ எடையுள்ள செயற்கைக் கோளை sun-synchronous polar orbit ல பத்திரமாய்க் கொண்டு போய் சேர்த்துவிடும்.
 • மங்கள்யானை ஏவியதும் இதுதான். (அதுல கொஞ்சம் தகிடுதித்தோம் வேலை செய்து அனுப்பினோம்)
            இதோட ப்ளஸ் பாயிண்ட் என்னவெனில் two in one சொல்ற மாதிரி எடையைப் பொருத்து அதிக செயற்கைக் கோளை அனுப்பலாம். அப்படித்தான் நாளை 5 செயற்கைக்கோள்களை அனுப்பப் போகிறார்கள். பிரான்ஸ் நாட்டின் SPOT-7  செயற்கைக்கோள் ( இது Earth Observation Satellite ) அப்புறம் ஜெர்மனியின் AISAT அப்புறம் கனடாவின் செயற்கைக்கோள்கள் இரண்டு (CAN-X4) & NLS7.2 (CAN-X5) மேலும் சிங்கப்பூரின் VELOX-1.


 • பிரான்சின் SPOT-7 மொத்தம் 714 கிலோ எடையுடையது. முக்கிய செயற்கைக்கோளே இதுதான்.
 • ஜெர்மனியின் AISAT 14 கிலோ எடையுடையது.
 • கனடாவின் (CAN-X4) & NLS7.2 (CAN-X5) இரண்டும் தலா 15 கிலோ எடை.
 • சிங்கப்பூரின் VELOX-1 ஏழு கிலோ எடையுடையது. இது பல்கலைக்கழகத்தினுடையது.
   ந்த ஐந்து ஆர்டரையும் ISRO க்கு எடுத்துக் கொடுத்தது ANTRIX ங்கிற நிறுவனம். அது ISRO வினுடைய commercial நிறுவனம். கிட்டத்தட்ட இரண்டும் ஒன்றுதான். இன்னும் ISRO போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. GSLV Mark III ரெடியானால் கொஞ்சம் சந்தோஷப்படலாம். நாசா மற்றும் ரஷ்யாவின் விண்வெளி நிறுவனங்களை ஒப்பிடும் போது நாம் ரெம்பக் கீழே இருக்கிறோம். ஆனாலும் எத்தனையோ நாடுகள் இந்தப் போட்டியில் பங்குபெறும் தகுதி (அறிவு) இல்லாமல் இருக்கின்றனர். அதை ஒப்பிடும் போது நாமெல்லாம் சட்டைக் காலரை தாராளமாய்த் தூக்கிவிட்டுக் கொள்ளலாம்.

நன்றி: புகைப்பட உதவி ஐ.எஸ்.ஆர்.ஓ  இணையத்தளம் மற்றும் airbusdefenceandspace இணையத்தளம்.
டெயில் பீஸ்: பெரும்பான்மையான செயற்கைக்கோள் ஏவுதல் நேரடி ஒளிபரப்புகளை நேரலையில் பார்த்து மகிந்திருக்கிறேன். இன்றைய (30-06-2014) நிகழ்வும் சந்தோஷமான ஒன்று. ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படக் கூடிய நிகழ்வு இது. வெற்றிகரமாக 5 செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்திவிட்டோம். வளர்ந்த நாடுகளின் செயற்கைக்கோள்களை நமது நாடு செலுத்துவது பெருமைதானே. மோடியின் பேச்சு நன்றாக இருந்தது. செலுத்துதலை நேரடியாகப் பார்வையிட்ட அவர் அதன் பின்னான பேச்சில் ஹாலிவுட் திரைப்படம் "கிராவிட்டி"யைவிட மிகக்குறைந்த செலவில் ஐந்து செயற்கைக்கோள்களையும் விண்வெளியில் செலுத்தியுள்ளோம் என்றார்.


No comments:

திரிபுவாதம்

     முதலில்  விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் " தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...