Friday, June 13, 2014

தெறிக்கும் ரத்தம் !

               இராக்கிய இஸ்லாமிய தேசம் மற்றும் லெவெண்ட் (Islamic State in Iraq and the Levant) இதிலுள்ள Levant ங்கிறதை எடுத்துட்டு Syria ன்னு போட்டுக்கலாம். Islamic State in Iraq and the Syria. சுருக்கமா இசிஸ் (ISIS) என்னது இதுன்னு கேக்கிறீங்களா.






                     மிடில் ஈஸ்ட் முழுக்க இப்போ இதப்பத்திதான் பேச்சு. பிபிஸி, சி.என்.என் மற்றும் அல்ஜஜீரா எல்லாம் புல் டைம் வேலையா இந்தச் செய்திகளைத் தான் மேய்ஞ்சுக்கிட்டு இருக்காங்க. இந்த இசிஸ் ஈராக்கை புரட்டி எடுத்துக்கிட்டு இருக்காங்க. என்னடா ஒரே சத்தமா இருக்கேன்னு பத்திரிகைச் செய்திகளைப் பார்த்தல்... ''இசிஸ்'' ''இசிஸ்'' னு புலம்பிக்கிட்டு இருக்காங்க. யாருடா இது? புது குருபுன்னு நிமிந்து உக்காந்தா, இல்ல பாஸ் நாங்க ஈராக் போரின் போதே இருக்கோம்கிறாங்க.





                    சிரியாவின் சில பகுதி அப்புறம் ஈராக்கின் சில பகுதிகளை ஒன்றிணைத்து  ''Islamic State in Iraq and the Levant'' ன்னு தனி இஸ்லாமியத் தேசம் அமைக்கணும்னுகிறது இவங்களோட கனவு. அதுசரி...இது மாதிரி உலகம் முழுவதும் ஏகப்பட்ட குரூப் இருக்காங்க. பட், இவங்க கொஞ்சம் வித்தியாசமான பார்ட்டி. ஈராக்கின் முக்கியமான இடங்களையெல்லாம் கைப்பற்றிக்கிட்டே வர்றாங்க. ஈராக் அதிபர் அவசர அவரசமா மந்திரி சபையைக் கூட்டி அதிபர் ஆட்சியை அமல்படுத்தலாம்னு கெஞ்சுறார். ஆனால் மந்திரிசபை முடியாதுன்னு கைவிரிச்சுடுச்சு. ஏனெனில் அதிபர் ஆட்சியால் மட்டும் நிலமையைக் கட்டுப்படுத்த முடியுமா என்ன? இசிஸின் முன்னால இராணுவ வீரர்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு தெறித்து ஓடுறாங்க. ''மோசுல்''ங்கிற பேருல ஒரு நகரம், கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் நகரைக் காலி பன்ணிட்டு அகதியா ஓடிக்கிட்டு இருக்காங்க. ''இசிஸ்''க்கு பயந்துங்கிறதை விட, ''இசிஸை'' விரட்ட இராணுவம் தாக்கும் போது பாதிக்கப்படுவோம்னு ஓடிக்கிட்டு இருக்காங்க. ''இசிஸ்'' ஆட்கள் வண்டியில் ஏறி ஊரு உலகமெல்லாம் சுற்றி, ஒவ்வொரு அரசு அதிகாரிகளையும் லிஸ்டோட தேடிப்பிடித்து சுட்டுக் கொல்றாங்க. ஆளும் அரசை அகற்றிவிட்டு இஸ்லாமிய ஆட்சியை அமைபோம் சபதம் வேற போட்ருக்காங்க. ஈராக் அதிபர் ''கிடைக்கிற ஆயுதங்களை எடுத்துக் கொண்டு இசிஸ் ஆட்களை அடித்துக் கொல்லுங்கள்''னு மக்களிடம் பரிதாபமாய் சொல்கிறார்.





                         மெரிக்கப் படைகள் இருக்கிறது வரை ஒழுங்க சேட்டை பண்ணாம இருந்த குரூப் இப்போ அவங்க கிளம்பியதும் வேலையைக் காட்ட ஆரம்பிச்சுட்டாங்க. ஒபாமாவோ ''ஈராக்கிற்கு எல்லா வகையிலும் உதவி செய்வோம்''னு ரெம்பக் கவலையா சொல்றார். கொடுமை என்னன்னா, இந்த இசிஸ் குரூப் அல் காயிதாவை விட பயங்கற குரூப்பாம். கொலை நடுங்குது நமக்கு. முன்பொரு காலத்தில் சிரியா மற்றும் ஈராக்கில் அங்கங்க சண்டை போட்டுக்கிட்டு இருந்த இரண்டு குருப் இணைஞ்சு தன்னோட பேரை இசிஸ்னு வச்சுக்கிட்டாங்க. அப்புறம் ''அல் காயிதா''வோடு ஜாயிண் வெஞ்சர் அடிப்படையில் கொஞ்ச நாள் ஈராக் மற்றும் சிரியாவைக் கலங்கடிச்சாங்க. அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியலை. இசிஸ்க்கும் எங்களுக்கும் ஒட்டும் கிடையாது உறவும் கிடையாதுன்னு அல் காயிதா அறிவிச்சாங்க. எப்பவும் ஒரு குகையில ஒரு சிங்கம் தான் இருக்க முடியும் போல.  அபு பக்கர் அல்-பககாதி இதுதான் தலைவர் பேரு. இவரு தலைக்குத்தான் அமெரிக்கா 10 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அறிவிச்சாங்க. இடையில வேற புரளியக் கிளப்பினாங்க. அவரைக் கொன்னுட்டோம்..இல்லையில்லை பிடிச்சாச்சுனு. பட் இப்பவும் அவர் தலைமையில்தான் ஈராக்கில் ரத்தம் தெறித்துக் கொண்டிருக்கிறது. விரைவில் பாக்தாத்திலும் தெறிக்க ஆரம்பிக்கும். உலகமே கவலையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.





புகைப்பட உதவி: BBC

இது தொடர்பாக தமிழ் விக்கிப்பீடியாவில் நான் எழுதியக் கட்டுரைகள் கீழே,

இசிஸ்
வட ஈராக் தாக்குதல்
அபு பக்கல் அல்-பககாதி

No comments:

எஞ்சினியர்ஸ்.

                      ஒ ரு காலத்தில் கனவுப் படிப்பாக இருந்தது. சீட் கிடைப்பதே பெரும்பாடு. நுழைவுத் தேர்வு எழுதி பன்னிரெண்டாம் வகுப்பின் கட்...