Saturday, May 31, 2014

The round up

விமலாதித்த மாமல்லனின் இந்தக் கட்டுரையை யதேச்சயாய் பார்த்ததிலிருந்து இந்தத் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. மிக முக்கியப் படங்கள் என அனைவராலும் சொல்லப்படுகிற திரைப்படங்களில் 5% படங்களைப் பார்த்திருப்பேன். எல்லாமே 'அட்ரா சக்கை' ரகமில்லையெனினும் காமரசம் ததும்பும் தமிழ்ப் படங்களுக்கு எவ்வளவோ தேவையில்லைதான்.
மனித மனதின் குரூர தந்திரங்கள், சுயநலம் என அத்தனையும் சிறப்பாய் வெளிப்படும் திரைப்படம் இது. "Szegénylegények" ங்கிற பெயரில் ஹங்கேரியில் வெளியான படம் இது. நல்ல இலக்கிய ரசனைக்கு மொழியாவது மண்ணாவது. துணிந்தவனுக்கு தான் வெற்றியோ இல்லையே, ஆனால் நல்ல திரைப்படம் கிடைக்கும். 
 நிக்லோஸ் யான்ஸ்கோ (Miklós Jancsó) எடுத்த திரைப்படம் இது. நான் பார்த்தது சப்டைட்டிலோடுதான். எளிதாக படத்தோடு ஒன்ற முடிந்தது. என்னமோ என்னோட கண்முன்னால் காட்சிகள் நடப்பது போல இருந்தது. பெரும்பாலும் பின்னணி இசை மெளவுனம் தான்.உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தும் நடிகர்கள் இப்படத்தின் பலம். எனக்கெல்லாம் இத்திரைப்படத்தைப் பற்றிச் சொல்ல எதுவும் இல்லை. அதாவது அருகதை இல்லைன்னு அர்த்தம்.

 படத்தின் பெயர் "தி ரவுண்ட் அப்" ஆஸ்திரியப் படைகளிடம் போர்கைதியாகச் சிக்கிக் கொண்ட போராளிகளை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சித்திரை செய்வதைப் பற்றிய கதை.
 அட சூப்பர் படம் போலன்னு நினைச்சுக்கிட்டு குடும்பத்தோடு பார்த்தீங்கன்னா, அப்புறம் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.
இத்திரைப்படத்தைப் பற்றி நான் எழுதிய தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை.

No comments:

எஞ்சினியர்ஸ்.

                      ஒ ரு காலத்தில் கனவுப் படிப்பாக இருந்தது. சீட் கிடைப்பதே பெரும்பாடு. நுழைவுத் தேர்வு எழுதி பன்னிரெண்டாம் வகுப்பின் கட்...