Knowledge is good only if it is shared.

Sunday, January 5, 2014

GSLV, GSAT 14 மற்றும் CRYOGENIC.

                
                       தக தகன்னு மினுங்கிறதுதான் ஜிசாட்-14.

தேர் போல மெதுவாக ஜிஎஸ்எல்வி ஏவுதளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
                 அடுத்தவனுக்கு ஆப்பு வைப்பதென்றால் எல்லோருக்கும் சந்தோஷம் தான் போல. சாதாரண மனிதனைச் சொல்லவில்லை. அமெரிக்காவைச் சொல்லுகிறேன். இந்தியாவின் ஐ.எஸ்.ஆர்.ஓ தன்னை மேம்படுத்தும் விதமாக புதிய வகை செயற்கைக் கோள்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. சரி.. அப்படி செய்ததை என்ன செய்ய முடியும்? மேலே அனுபித்தான் ஆக வேண்டும். அனுப்புவதற்கு பவர்ஃபுல்லான ராக்கெட் இல்லை. ராக்கெட் இல்லைன்னு சொல்றதவிட ராக்கெட்டை மேலே இழுத்துச் செல்லும் இஞ்சின் இல்லை. என்னவெல்லாமோ குட்டிக்கரணம் அடிச்சுப் பாத்தாங்க, கதைக்கு ஆகல. உக்காந்து  யோசிச்சு அடுத்த நாடுகள்கிட்ட உதவி கேக்கலாம்னு நினைச்சாங்க. அது ஜவ்வா இழுக்க ஆரம்பிச்சுருச்சு. சரி இது கதைக்கு உதவாது அவங்க இழுக்கட்டும் நாம் ரெடி பண்ணுன செயற்கைக் கோளை 'பிரஞ்ச் கயானா' கொண்டு போய் அவங்கள வச்சு மேலே அனுப்பச் சொலலாம்னு முடிவு பண்ணி அப்பிடியே செய்ய ஆரம்பிச்சாங்க. அதாவது சாட்டிலைட் நம்ம சரக்கு. அதைக் கொண்டு போய் மேல நிப்பாட்டுறது அடுத்த நாடுகளோட உதவியுடன். டீலிங் நல்லாதான் இருக்கு. ஆனால் எவ்ளோ நாள்தான் அடுத்தவன் மேலேயே சவாரி செய்யுறது. அதுல வேற டீலிங் ரேட்டும் ரெம்ப அதிகம். நாமளும் சந்திரன், செவ்வாய்-னு ராக்கெட் அனுப்ப ( செயற்கைக் கோளை அனுப்ப) கனவு காண ஆரம்பிச்சாச்சு. சொந்தச் சரக்கு இருந்தாத்தான் இனிமேல் காலம் தள்ள முடியும்.  ஜவ்வா இழுத்துக்கிட்டு இருந்த டீம் ஜப்பானைக் கேட்டாங்க அவங்க பேசுன 'பாஷை' புரியலையா என்னன்னு தெரியல வெறுங்கையோட திரும்பி வந்தாங்க. இன்னுமொரு டீம் கிளம்பிப் போய் அமெரிக்காவிடம் கேட்டாங்க. எவண்டா சிக்குவான்னு காத்திருந்த அமெரிக்கா லேசாச் சிரிச்சுட்டே ,'' ரேட் அதிகம் பரவாயில்லையா?'' ன்னாங்க.. சொன்ன 'ரேட்'டக் கேட்டதும் சொல்லாமக் கொள்ளாம திரும்பி வந்துட்டாங்க. கூட்டாளி ரஷ்யாவைக் கேட்டாங்க கமுக்கமா டீலிங் 'ஓகே' ஆயிடுச்சு. சைடுல ஆட்டையப் போட்ட கமிஷன் விவரம் எதுவும் சரியாத் தெரியல. இப்போதான் க்ளைமேக்ஸ். செவனேன்னு போய்கிட்டு இருந்த டீல்ல அமெரிக்காகாரன் கால நீட்ட ஆரம்பிச்சான். எங்கிட்ட வாங்கலைன்னா வேற எவனும் கொடுக்கவும் விட மாட்டேன்னு ஏழரையக் கொடுக்க ஆரம்பிச்சான். ஏதே ஒரு சர்வதேசச் சட்டத்தைக் காட்டி (அது MTCR சட்டம்) அதை மீறி ரஷ்யா இந்தியாவுக்குக் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லிட்டான். அடப்பாவி, முதல்ல நீ கொடுக்கிறேன்னு சொன்னியேடான்னு இந்தியா கேட்டதுக்கு, ''அது அப்படித்தான் முடிஞ்சதைப் பாத்துக்கோன்னு'', சொல்லிட்டாங்க.  நீங்களும் கீழே உள்ள போட்டோஸ பத்துக்கோங்க..
              ஏ..தள்ளி நிண்ணுப்பா, அசெம்பிள் பன்ணும்போது வேடிக்கை பாக்காதீங்க.
                      அப்பிடியே கண்ணுல ஒத்திக்கலாம் போல இருக்கு.
                                                 பளிச் பளிச். சூப்பர் லுக்!
 முக்கியமான மேட்டரே இந்த க்ரையோஜினிக் இஞ்சின் தான். ஸோ நல்லாப் பாத்துக்கோங்க.
      அனுப்புறோம், ஜெயிக்கிறோம் அமெரிக்கா முகத்துல கரியப் பூசுறோம். ஓகே வா?
                      எப்பிடியோ வல்லான் வகுத்ததே வாய்க்கால்னு தெரிஞ்சு போச்சு. ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்காவுக்குத் தெரியாம வாங்குறதுக்கான முயற்சி பண்ணுனாங்க. அமெரிக்காவோட கண்ணு ரெம்பப் பெரிசு அதுல மண்ணத் தூவுறது ரெம்பக் கஷ்டம்னு லேட்டாதான் புரிஞ்சுது. இன்பெட்வீன்ல ஏர் இண்டியாவக் கூப்பிட்டு, "ரஷ்யாவுல இருந்து க்ரையோஜெனிக் இஞ்சின கள்ளத்தனமா கொண்டு வந்துருவியாப்பா" அப்பிடீன்னாங்க.. அதுக்கு அவங்க, " தல இது ரெம்ப பேஜாரான மேட்டருன்னு'' சொல்லிட்டே ஜகா வாங்கிட்டாங்க. அப்பால ரஷ்யாவோ 'யுரல் ஏர்லைன்ஸ்' கிட்ட கேட்டாங்க. "ஓகே, பாஸ் ஆனா ப்ராஸஸிங் அண்ட் டெலிவரி சார்ஜ் அதிகம்" னாங்க. ஒரு மாதிரி திருட்டு டீலிங் முடியவும் சி.ஐ.ஏ வின் நரிகள் ரஷ்யா மற்றும் இந்தியா முழுவதும் தன்னோட கறுப்பு ஆடுகள் மூலம் செக் வச்சுக்கிட்டே இருந்தாங்க. வேறு வழியே இல்லை. இந்தியாவுக்கு சொந்தமாக் க்ரையோஜினிக்கைச் செய்தே ஆக வேண்டிய நிலமை. சட்டத்திற்கு உட்பட்டு சில உதவிகளை ரஷ்யாவிடம் வாங்கி க்ரையோஜெனிக் இஞ்சின் செய்து முடித்தார்கள். விதி அப்பதான் நக்கலாச் சிரிக்க ஆரம்பிச்சது. எல்லாமே தோல்வி. சொல்லிகிற மாதிரி இல்லாம சோதனை முயற்சிகள் ஒண்ணோ ரெண்டோ மட்டும்தான் வெற்றி. ஸ்கூலுல கோட்டு அடிச்சு ஒரே க்ளாஸ்ல ரெம்ப நாள் உக்கார்ர ஸ்டூடண்ட் மாதிரி ஆகிப்போச்சு நிலமை. இதுல வெக்கப்பட ஒண்ணும் இல்லை. ஏன்னா... அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, சீனா, ஜப்பான் அப்பால இந்தியா இவங்களத்தவிர வேறு எந்த ''ஜிம்பன்''களாலையும் 'க்ரையோஜெனிக்' இஞ்சினைத் தயாரிக்க முடியலை. ஆக்ஜிஜன் மற்றும் ஹைட்ரஜன் வாயுக்களை தனித்தனி டேங்ல வைக்கணும். பிரச்சனை இது இல்லை. அதை மைனஸ் 183 முதல் மைனஸ் 253 டிகிரில வைக்கணும். மைனஸ்ல குளிரவைக்கிறதும் பிரச்சனை இல்லை. ஆனால் இந்த வாயுக்கள் மைனஸ்ல குளிரவைக்கும் போது திரவமா மாறிடும். அந்தத் திரவம் எந்த உலோகத்திலேயும் ரெம்ப நேரம் இருக்காது. உலோகத்தை உருக்கவோ அல்லது நொறுக்கவோ ஆரம்பிச்சிரும். அப்புறம் எப்பிடி, இவங்களை இஞ்சின் சேம்பர்ல கொண்டு போய் எரிக்கிறது. அதனாலதான் ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யான்னு தலையால தண்ணி குடிச்சாங்க நம்ம ஆளுங்க. ஒரு வழியா முக்கிமுனங்கி இஞ்சின் ரெடியாகியாச்சு. ஜனவரி 5 சாயங்காலம் 4:18 க்கும் மூர்த்த நேரம் ரெடி பண்ணி வெற்றிகரமா அனுப்பியாச்சு. ஜிஎஸ்எல்வியோட மூக்குல ஜிசாட் 14 செயற்கைக் கோளை வைத்து குறிப்பிட்ட இலக்கில் கொண்டு போய்த் தள்ளியாச்சு. இனிமேல் கொஞ்சம் டைரக்ஷன் அட்ஜஸ்மண்ட் மட்டும் பாகி இருக்கு. அதுல பெரிய சிக்கல் எதுவும் இல்லை.  மங்கள்யானுக்கு அப்புறம் இதுவும் ஐஎஸ்ஆஓ-வுக்கு பெரிய சாதனைதான். கண்ணா இன்னொரு லட்டு திங்க ஆசையான்னு தாராளமாய்க் கேட்கலாம். இன்னும் அதிக தகவல்கள் வேணும்னா என்னோட விக்கிப்பீடியா கட்டுரைகளை இங்கேயும் அப்புறம் இங்கேயும் பாருங்க. அப்பிடியே இந்தக் கட்டுரையில் உள்ள அனைத்துப் புகைப்படங்களும் ஐஎஸ்ஆர்ஓ வின் பேஸ்புக் பக்கத்திலிருந்து எடுத்ததுனால அவங்களுக்கு ஒரு நன்றியும் சொல்லிடலாம்.
டெயில் பீஸ்: எங்கூருகிட்ட இருக்கிற மகேந்திரகிரி-யில் தான் 'க்ரையோஜினிக்' இஞ்சின் டெஸ்ட் பண்ணுனாங்க. 


2 comments:

Anonymous said...

Nice article Bala...Great !!!

பாலா.R ( BALA.R ) said...

நன்றி.

திரிபுவாதம்

     முதலில்  விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் " தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...