Knowledge is good only if it is shared.

Tuesday, January 14, 2014

இந்தியர்களின் கிரிக்கெட் மோகம்.

கிரிக்கெட் ஒரு மதமாகவே இந்தியாவில் பார்க்கப்படுகிறது. இந்தியர்களின் கிரிக்கெட் பற்றிய சில புகைப்படங்கள்.
கர்நாடகத்தின் கோகர்ணா கடற்கரையில். புகைப்பட உதவி: Arifuddin Ahmed

கொல்கத்தாவில் 1992 ல் எடுக்கப்பட்டது. புகைப்பட உதவி: Mudar Patherya
                          இராஜஸ்தான் ஜோத்பூரில். புகைப்பட உதவி: Shashanka Nanda

இந்திய ராணுவ வீரர்கள் லடாக்கில். புகைப்பட உதவி: Umang Shah
                      


 
                                                          Courtesy - Cricinfoஇதுவும் லடாக்கில் எடுத்ததுதான். புகைப்பட உதவி: Ananthasubramanian Narayanan

இராஜஸ்தானின் உதய்ப்பூரில். புகைப்பட உதவி: Sachin Bamare

இது இந்தியாவில் அல்ல, நேபாளத்தில் எடுத்த படம். புகைப்பட உதவி: Sudan Dhakal
   


 
சியாட்டில் நகரில் இந்திய ஐ.டி தொழிலாளர்கள். புகைப்பட உதவி: Kirupakaran Ranganathan

கொல்கத்தாவின் 'ஈடன் கார்டன்' மைதானத்தினருகே. புகைப்பட உதவி: Dipjyoti Banik

ஹைதிராபாத்தில். புகைப்பட உதவி: Srinivasa Prasath மணாலியிலிருந்து லே செல்லும் வழியில் இந்திய ராணுவ வீரர்கள். புகைப்பட உதவி: Krishnakumar Padmanabhan

கொல்கத்தாலில் எடுக்கப்பட்ட புகைப்படம். புகைப்பட உதவி: Naveen Gupta
கேரளத்தின் வயநாட்டில். புகைப்பட உதவி: Swati Kamdar (product manager at ESPNcricinfo)

Friday, January 10, 2014

புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்-2014

உலகம் முழுவதும் பல்வேறு இன மொழி சமய மக்கள் 2014 ஆம் ஆண்டு புத்தாண்டை எவ்வாறு கொண்டாடுனாங்கன்னு பார்க்கலாம். எல்லா மக்களும் இப்படித்தான் கொண்டாடுனாங்கன்னு நெனச்சுக்காதீங்க...புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எடுத்த படங்கள் இவை. புகைப்பட
 உதவி: AP Photo மற்றும் லண்டனிலிருந்து வெளியாகும் டெலிகிராப் பத்திரிகை.

                                 மெர்லின் ''ஒராங்கி'' ஏரியில் புத்தாண்டுக் குளியல்

                                                         

                                                        நியூயார்க்கில்...                                                 லண்டன் மாநகரில்...
                                                     இந்தியாவில்...
                                                  பாக்கிஸ்தானில்...


          

                                                       டென்வரில்...

  

                                                          இலங்கையில்...


  

                                                         சீனாவில்...Tuesday, January 7, 2014

GSLV உருவாக்கம்

ரெம்ப நாளா ஒரு சந்தேகம் ராக்கெட் அனுப்புறோம்னு ரெம்ப அலட்டிகிறாங்களே அது என்ன? பெரிய ராக்கெட் சயின்ஸா என்ன? அதையும் தான் பாத்துருவமே... ஆமா பார்க்கத்தான் போகிறோம். படம் பார்த்து கதை சொல்வோம் 'கான்செப்ட்'தான்.
ராக்கெட் அனுப்புறோம்னு சொல்றது என்னவோ வாஸ்தவம்னாலும் உண்மையிலே அவங்க அனுப்புறது செயற்கைக் கோள். அதை ராக்கெட்டுக்கு உள்ள வச்சு அனுப்புவாங்க. ஏன் அடிக்கடி அனுப்புறாங்க? ஒரு நாடு எத்தனைதான் அனுப்பணும்னு ரெம்ப கேள்வி வரும். ஒண்ணு ஒண்ணா பார்ப்போம்.
ஜிசாட்-14 செயற்கைக் கோள் படம் கீழே இருக்கு அதை முதலில் பாத்துக்கோங்க..

 கோல்ட் கலர்ல இருக்கிறததான் ஜிசாட்-14. வானிலை தகவல் தொடர்புன்னு சில விஷயங்களுக்காக இதை மேலே அனுப்புறாங்க. இதுல எக்ஸ்டண்டட் சி பாண்ட், கேயூ பாண்ட் ட்ரான்ஸ்பாண்டர்கள் இருக்கு. அப்புறம் கேஏ  பாண்ட் ட்ரான்ஸ்பாண்டர் 2 வச்சு அனுப்பிருக்காங்க. எதுக்காகன்னு விலாவாரியா வேணும்னா தனியாக் கேளுங்க சொல்றேன்.
ஆனானப்பட்ட இந்த செயற்கைக்கோளைத்தான் சுமார் 36,000 கிலோமீட்டர் தூரத்துல கொண்டு போய் நிப்பாட்டணும். அதாவது சுத்த விடணும். நேரடியா 36,000 கிலோமீட்டர் தூரத்துல கொண்டு போய் விடுறது கஷ்டம். அதுனால ஒரு 'டகால்டி' வேலை பண்ணுவாங்க. அதை ஆங்கிலத்தில் ''manoeuvres'' னு சொல்வாங்க. நாம ரெம்ப டீப்பா போக வேண்டாம். ஏற்கனவே மேல உள்ள படத்துல சாட்டிலைட் ரெடியா இருக்கு ஸோ...வாங்க அசெம்பிள் பண்ணுவோம்.
மொதல்ல 'கோர்' ஸ்டேஜ் அசெம்பிள் பண்ணலாம். இதுதான் ரெம்ப இனிஸியல் ஸ்டேஜ். நாஸில் இருக்கு பாத்தீங்களா.. பத்திரமா இதை இறக்குங்க..கீழே போட்றாதீங்க..இதை கோர் ஸ்டேஜ்-னு சொல்வாங்க..
இன்னும் கொஞ்ச வேலை இருக்கு. ஃப்ர்ஸ்ட் ஸ்டேஜ் மொத்தம் 5 பார்ட் உண்டு. அதுல மோட்டார் கொஞ்சம் கண்ட்ரோல் ஐட்டம் எல்லாம் இருக்கும்.  மொத்தம் 20.1 மீட்டர்.  மொத்த உயரத்துல 40% இந்த ஃபர்ஸ்ட் ஸ்டேஜ்தான். இதோட விட்டம் பாத்தீங்கன்னா 2.8 மீட்டர்கள். வாங்க சீக்கிரம் அஸெம்பிள் பண்ணுவோம்.

 
யேய்..மெதுவா எறக்குப்பா....

தம்பி..இன்ஸூரன்ஸ் இருக்குதான்..அதுக்காக கைய உள்ள வச்சிறாத..ஐஞ்சு செக்மெண்டும் வச்சாச்சாப்பா... நாலு strap-on கொண்டு வந்து சைடுல மாட்டுங்க..


 மெதுவா மாட்டுங்க.. 
இந்த strap-on உள்ள  UH25 மற்றும் நைட் ரஜன் ஆக்ஸைடு எரிபொருள் இருக்கிறது.

 


இதோட உயரம் பாத்தீங்கன்னா 19.7 மீட்டர்கள். ஃபர்ஸ்ட் ஸ்டேஜ் முடிஞ்சுது.
மேலே போகும் போது மெயின் strap-on & கோர் ஸ்டேஸ் ரெண்டும் சேர்ந்து 248 வினாடிகள் மேலே எடுத்துட்டு போகும். கிட்டத்தட்ட 4 நிமிசம். 72.21 கிலோமீட்டர்கள் மேலே கொண்டு போய் சேத்துடும்.


அடுத்த ஸ்டேஜை இதுக்கு மேல இன்ஸ்டால் பண்ணுவோம்.மொத்தம் 11.6 மீட்டர் உயரம். strap-on ல இருக்கிற அதே எரிபொருள்தான் இதுக்கும். இதோட விட்டமும் கோரோட விட்டமும் சமம்.


 
இந்த இரண்டாவது ஸ்டேஸ் 150 வினாடிகள் எரிஞ்சு 132.80 கிலோமீட்டர்கள் உயரம் வரை கொண்டு போகும்.

ஓகே..அடுத்தது முக்கியமான ஸ்டேஜ். 'க்ரையோஜெனிக்' ஸ்டேஜ் அதை மாட்டீருவோம். போய் பத்திரமா எடுத்துட்டு வாங்கப்பா..


கொண்டு வந்தாச்சா.. சரி மெதுவா தூக்கி மேல மாட்டுங்க பாக்கலாம்.இது 8.7 மீட்டர் உயரம். விட்டம் அதே பழைய அளவுதான். இதுல எரிபொருள் ஆக்ஜிஜன் மற்றும் ஹைட்ரஜன். திரவ நிலையில் இருக்கும்.  அவ்வளவுதான் சேப்டர் க்ளோஸ். க்ரையோஜெனிக் இஞ்சின் இதுக்கு உள்ளே தான் இருக்கு. 
இது 213.51 கிலோ மீட்டர் உயரம் வரை எடுத்துட்டுப் போகும்.
இஞ்சினை கண்ணுலே காட்டலேங்கிறாங்களா..? கடைசியா பாக்கலாம் அதை.

சரி அடுத்த வேலைய ஆரம்பிப்போம். அடுத்து...


இன்னாது 'டீ' ப்ரேக் வேணுமா? சரி சரி சீக்கிரம் போய்டு வாருங்கள்..

அவங்க வற்றதுக்கு முன்னால ஜிசாட் கண்டிசனைப் பாத்திரலாம்.இதுக்கு கொஞ்சம் டெஸ்டிங் பாக்கி இருக்கு.இது 'எலெக்ரோ மேக்னட்டிக் டெஸ்ட்' அப்புறம் கீழே..
 வைப்ரேஷன் டெஸ்ட்.

இனிமேல் இந்த சேட்டிலைட்டை மூடணும்.


ஓகே ..'டீ' சாப்பிட போனவங்க வந்தாச்சா.. இதை எடுத்துட்டுப் போய் அந்த 'க்ரையோஜெனிக்' ஸ்டேஸுக்கு மேல மாட்டுங்கப்பா..ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பபப....ஒரு வழியா அசெம்பிளி லைன் முடிஞ்சுது.
வாங்க..புல் 'ஸைசு'ல எப்பிடி இருக்குன்னு பாக்கலாம்.


வாவ்.. அட அதுக்குள்ளால கேட் திறந்துட்டீங்களா..சரி அப்பிடியே தள்ளிட்டுப் போய் இரண்டாவது 
ஏவுதளதுல கொண்டு போய் நிப்பாட்டிருங்க.

முதல் ஏவுதளத்துல PSLV வேலை நடந்துக்கிட்டு இருக்கு.


ஆமா ஒரே குகைல இரண்டு சிங்கங்கள்.. ஜாப் எத்திக்ஸ்..

முக்கியமான விஷயம் இன்ரடியூஸ் பண்ண மறந்துட்டேன். அசெம்பிளி 'ப்ளாட்பார்ம்' தான் அது. கீழே இருக்கு பாத்துக்கோங்க..வாருங்கள்,  ஏவு தளத்திற்கு கொண்டு போகலாம்.அடப்பாவிகளா எப்போ கிளம்புவேன்னு காத்திருந்து 'டக்'னு கதவைச் சாத்திட்டீங்களே! போகலாம் ரைட்.அவ்வளவு தான். எப்படி ஏவுனாங்கன்னு அடுத்த பதிவில் பாக்கலாம்.
நன்றி: புகைப்பட உதவி ஐ.எஸ்.ஆர்.ஓ  

திரிபுவாதம்

     முதலில்  விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் " தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...