Knowledge is good only if it is shared.

Monday, November 18, 2013

நாங்கள் கண்ட பறவைகள் :)

            மீபத்தில் (சூரசம்ஹாரம் அன்று) இரவு 7:45 மணி வாக்கில் தார்ச்சாலையில் மோட்டார் சைக்கிளில் கடக்கும் போது 15 முதல் 18 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று தன் உடல் லேசாய் மினுங்க ஊர்ந்து சென்றது. 5 நிமிடத்திற்கு ஒரு வாகனம் என செல்லும் சாலை அது. ஆசுவாசமாய் சென்ற அதை நோக்கி ஓர் ஆட்டோ வேகமாக வந்தது. ஆட்டோ ஓட்டுனர் அதைக் கவனிக்கவில்லை என நினைக்கிறேன். சில மாதங்களுக்கு முன்னர் இதே அளவுள்ள மலைப்பாம்பை இதே இடத்தில் இதே நேரத்தில் பார்த்து அதை காணொளியாகவும் பதிவு செய்திருந்தேன். ஒலி எழுப்பி ஆட்டோ ஓட்டுனரை நிறுத்தச் செய்ததும் திரு.தியோடர் பாஸ்கரன் ஞாபகம் வந்தது. அடுத்த நாள் காலை, அவரின் வானில் பறக்கும் புள்ளெலாம், தாமரை பூத்த தடாகம் மற்றும் இன்னும் பிறக்காத தலைமுறைக்காக ஆகிய புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கும் போது ஆர்வத்தினால் எனது 5 வயது மகளும் நானும் மாடியில் அமர்ந்து பறவைகளைப் பார்க்கத் தொடங்கினோம். அவளின் 5 வது பிறந்தநாளுக்கு அடுத்தநாள் எங்கள் ஊர் (தேரூர் அருகேயுள்ள சங்கரன்புதூர்)   வயல் மற்றும் குளக்கரைகளுக்கு அழைத்துச் சென்று கண்ணில் பட்ட பறவைகளை காட்டிக் கொடுத்தேன். அவளின் யோகம் அவளுக்காக சில பெண்மயில் கூட்டங்களும் தனித்த பெனிகன் (கூளைக்கடா) ஒன்றும் கண்ணில் சிக்கியது. வரிசையாய் மின்சாரக் கம்பியில் அமர்ந்திருந்த சிறுகுருவிகளைக்  கண்டு "அப்பா! அசெம்பிளி நடக்கிறது" என்றாள். அக்குருவிகளின் பெயர் தெரியாததால் திரு. தியோடர் பாஸ்கரன் சார் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டு அவை 'தகைவிலான் குருவி' எனத் தெரிந்து கொண்டேன். மீன் கொத்தி, கொக்கு, நாரை, வெக்கப்பட்டு ஓடிய செண்பகம் என சில பறவைகளும் காணக்கிடைத்தன.அவற்றில் 8 பறவைகளை என் கேமிராவிலும் படம்பிடித்தேன். பல பறவைகள் தவறாமல் எங்கள் வீட்டின் மாடியில் இருந்து தினமும் காணக்கிடைக்கும். நாங்கள் கண்ட பறவைகளின் புகைப்படத் தொகுப்பு கீழே...

















No comments:

எஞ்சினியர்ஸ்.

                      ஒ ரு காலத்தில் கனவுப் படிப்பாக இருந்தது. சீட் கிடைப்பதே பெரும்பாடு. நுழைவுத் தேர்வு எழுதி பன்னிரெண்டாம் வகுப்பின் கட்...