Sunday, October 13, 2013

தண்ணீர்...

 கொஞ்ச நாளாகவே ( ஆமாங்க ரெண்டு வருடமாக) காலின் குதிக்காலில் வலி. நடக்கும் ''விர்..விர்..'' எனத் தறிக்கும். கொஞ்ச நேரம் அசையாமல் இருந்து அப்புறம் நடக்க ஆரம்பித்தால் முதல் இரண்டு நிமிடம் வலி உயிரை எடுத்துவிடும். என்ன தான் பிரச்சனை என டாக்டரிடம் காட்டினேன். முழு ஜாதகத்தையும் கேட்டுவிட்டு அடி நாதத்தைப் பிடித்தார்.
"கடைசியாக எப்போது புது ஷூ மாத்துனீங்க?"
"ரெண்டு வாரம் இருக்கும் டாக்டர்"
"வலி எவ்வளவு நாளாக இருக்கிறது?"
"ஒரு பத்து நாளா"
"சரி, எக்ஸ்ரே எடுத்திடலாம்"
பல வித போஸ்களில் 12 எக்ஸ் ரே எடுத்துவிட்டு " Plantar fasciitis" ஆக இருக்கலாம் என்றார். என்ன எளவோ! வலி உயிர் போகிறது. சில உடற்பயிற்சிகள் செய்யச் சொன்னார். குறிப்பாக நடப்பதைக் குறைக்கச் சொன்னார். அதுதான் சிக்கலே..நடப்பது என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி. அதுக்கு வந்த சோதனையா என மாற்று வழியை யோசித்தேன். சரி அதற்குப் பதில் நீச்சல் அடிக்கலாம் . உடலுக்கும் பயிற்சி மாதிரி ஆச்சு . கால் பாதமும் வலிக்காது என நினைத்தேன். அங்கே தான் சிக்கலே...
நீச்சல் அடிக்க எங்க ஊரில் தண்ணீர் இல்லை. தண்ணீர் இல்லை எனச் சொல்லமுடியாது. வழக்கம் போல ஆறு குளங்களில் தண்ணீர் இருக்கிறது. ஆனால் நீச்சல் தான் அடிக்க முடியாது. பொதுவாக ஆற்றில் நீச்சல் அடிக்கும் அளவிற்கு வசதியிருக்காது. குளம் தான் சரியான சாய்ஸ்.எங்கள் ஊர் குளங்களுக்கு பொதுவாக ஒரு குணம் உண்டும். குளம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், படித்துறைப் பக்கத்தில் வெறும் படுக்கையறை சைஸுக்கு மட்டுமே குளிக்க முடியும். மீதிக் குளம் முழுவதும் தோவாளை மலர்ச் சந்தைக்கு செல்லும் செந்தாமரை மலர்கள் நிரவியிருக்கும். அவரவர்க்கு அவரவர் பிழைப்பு. எவள் தாலியறுத்தால் எவளுக்கென்ன?. அதில் லெட்சுமியோ அல்லது சரஸ்வதியோ வாசமும் செய்யக் கூடும். ஆனால் மனுசனான நமக்கு குளிக்க வெள்ளம் இல்லாமல் போய்விட்டதே. 1990 க்கு முன் குளங்களிலுள்ள நீரெல்லாம் பளிங்கைப் போல் கால்களில் மணல்விரவக் குளித்த காலம். மூங்கிக் குளிக்கும் போது தெரிந்த பளீர் மஞ்சள் கொலுக்கால்கள் என எதுஎதுவோ நியாகம் வருகிறது. ஆனால் இப்போது எந்தக் குளத்தைப் பார்த்தாலும் தாமரை மலர்ச் செடிகள். இந்தத் தாமரை மலரின் இலைகள் அழுகி துர்நார்றம் வீசுகிறது. கொஞ்ச நேரம் தண்ணியில் கிடந்தாலே கடிக்க ஆரம்பித்துவிடுகிறது. இந்த அளவுக்கு தண்ணியை மாசு படுத்த முடியாது. ஆங்காங்கே டாஸ்மாக் பாட்டில் உடைந்து தண்ணீருக்குள் கிடக்கிறது. அனைவருக்கும் இந்தத் தண்ணீரைவிட டாஸ்மாக் தண்ணீர்தான் முக்கியமாகத் தெரிகிறது. தண்ணி இல்லாம நல்லா மாட்டப் போகுது அடுத்த தலைமுறை.
நான் நீச்சலுக்குப் பதில் சைக்கிள் ஓட்டலாம்னு பாக்கிறேன். உங்க ஊருல நீச்சலடிக்கிற மாதிரி குளம் இருந்தாச் சொல்லுங்க.

No comments:

எஞ்சினியர்ஸ்.

                      ஒ ரு காலத்தில் கனவுப் படிப்பாக இருந்தது. சீட் கிடைப்பதே பெரும்பாடு. நுழைவுத் தேர்வு எழுதி பன்னிரெண்டாம் வகுப்பின் கட்...