Sunday, April 14, 2013

Tsotsi

                

              தவறவிடக்கூடாத மற்றுமொரு நல்ல திரைப்படம். இது ஒரு தென்னாப்பிரிக்கத் திரைப்படம்.ஆந்தோல் ஃபுகார்ட் - னின் Tsotsi என்ற  நாவலைத்தழுவி 2005-ல் ஹேவின் ஹூட் எடுத்த படம் இது.

                                   
 சில சமயம் மேலே உள்ள வீடியோ வேலை செய்யாமல் இருக்கலாம்.இங்கே க்ளிக் செய்யவும்.                         நோயாளியான மரணப்படுக்கையில் இருக்கும் அம்மா பொறுப்பிலாத அப்பா இவர்களிடமிருந்து விலகி சேரிப்பகுதியில் மற்ற குழந்தைகளோடு அனாதையாக வாழ்கிறார் டேவிட். அவனுடைய பெயர் Tsotsi என வைத்துக் கொண்டு பெரிய காங்கிரீட் பைப்புகளின் உள்ளே வீடற்ற குழந்தைகளோடு வசிக்கிறான் டேவிட் என்ற Tsotsi.


நண்பர்களோடு இணைந்து திருடுவதுதான் தொழில். ஒரு குட்டி  ' தாதா 'வைப்போல் ரத்தமும் அடியுமாக வாழ்க்கை கழிகிறது.ஒரு நாள்  ஒரு காரைத் திருடுகிறான். சிறிது தூரம் ஓட்டிச் சென்ற பின்னர் தான் தெரிகிறது ,  காரின் பின் இருக்கையில் கைக்குழந்தை ஒன்றும் இருக்கிறது. அதன் பின்னான அவனது வாழ்க்கை மாற்றமே கதை. தாயின் அன்பிற்காக ஏங்கிய அவன் வாழ்க்கையில் இக்கைக் குழந்தை பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

இதற்கிடையே குழந்தையை இழந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ் இவனைத் தேடி அலைகிறது. பத்திரிகைகளில் இவன் புகைப்படமும் பிரசுரிக்கப்படுகிறது.கணவனை இழந்து கைக்குழந்தையோடு அதே சேரியில் வசிக்கும் மரியம் ( Terry pheto ) இக்குழந்தையையும் பராமரிக்கிறாள். அதற்கு ஈடாக அவன் கொடுக்கும் பணத்தை வாங்க மறுக்கிறாள். மேலும் அவனிடம் இக்குழந்தையை அதனுடைய அம்மாவிடம் ஒப்படக்கச் சொல்கிறாள். அதனால் மனம் மாறி குழந்தையை ஒப்படைக்கச் செல்லும் க்ளைமாக்ஸ் நிமிடங்கள் பரபரப்பானவை. அதற்கு முன் அதே சேரியில் வசிக்கும் ஒரு பெண்மணி போலீஸூக்கு தகவல் சொல்லிவிடுகிறாள். நண்பர்களிடையேயான முட்டல் மோதல் குழந்தையின் மீதான அன்பு மரியத்தின் வார்த்தைகளின் ஈரம். க்ளைமாக்ஸ்-ஸில் தடுமாறும் உடலசைவு என அனைத்திலும் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்  டேவிட்- டாகவும் Tsotsi - யாகவும் நடித்திருக்கும்  Presley Chweneyagae



94 நிமிடங்கள் ஓடும் இப்படத்தின் ஒவ்வொரு ஃபிரேமும் செதுக்கப்பட்டவை. மிகச் சிறந்த ஒளிப்பதிவு. அருமையான , மனதோடு இணையும் இசை.3 மில்லியன் டாலரில் எடுக்கப்பட்ட கிட்டத்தட்ட 10 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டிய படம் இது. 

சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கென  2005-ல் அகெடமி அவார்டைப் பெற்ற படம்.
2006 - ல் கோல்டன் க்ளோப் விருதிற்கு வெளிநாட்டுத் திரைப்படப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் இது.
நடித்த அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 

இந்த சவுண்ட் டிராக்கைக் கேட்டுப் பாருங்கள்... இங்கே..

 

No comments:

எஞ்சினியர்ஸ்.

                      ஒ ரு காலத்தில் கனவுப் படிப்பாக இருந்தது. சீட் கிடைப்பதே பெரும்பாடு. நுழைவுத் தேர்வு எழுதி பன்னிரெண்டாம் வகுப்பின் கட்...