Knowledge is good only if it is shared.

Sunday, April 14, 2013

HOTEL RWANDA

                 இனக்குழுக்களுக்கிடையேயான மோதலைச் சொல்லும் படம் இது. கண்களில் நீர் வராமல் இப்படத்தைப் பார்ப்பதென்பது  இயலாத ஒன்று. கதைக்களத்தை எளிதாக ஈழப்பின்னணியோடுப் பொருத்திப் பார்க்கலாம் . மனிதர்களை மட்டுமல்ல குழந்தைகளைக் கொன்றழிப்பதன் மூலம் அடுத்த தலைமுறையை இல்லாமலாக்கிவிடலாம் என வெறிகொண்டு அலையும் மனிதர்களின் கீழ்மையை அதன் வலியோடு பேசும் படம்.
                    

 சில சமயம் மேலே உள்ள வீடியோ வேலை செய்யாமல் இருக்கலாம் . இங்கே கிளிக் செய்யவும்.                


                  உண்மைச்சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட படமாதலால் ஒவ்வொரு ஃபிரேமைப் பார்க்கும் போதும் மனம் பதபதைக்கிறது. 1994- ல் ஹூட்டு மற்றும் ட்டூட்ஸி இனக்குழுக்களுக்கிடையேயான உள்நாட்டுக்கலவரத்தை கண்முன் காட்டுகிறது.


      சொகுசு ஹோட்டலின் மேலாளர் பால் ருஸஸ பகீனா- ன் மனிதாபிமானமும் அவரிம் நடவடிக்கைகளுமே படத்தை தொடர்ந்து பார்ப்பதற்காக நம்பிக்கையைத் தருகின்றன. தொடரும் இன அழிப்பில் அமைதியை நிலைநாட்ட வந்த ஐ.நா அதிகாரி சொல்லும் ஓர் வசனம் முக்கியமானது ' we are here as peace keepers , Not as peace makers ' எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.

  ஹோட்டலின் மேனேஜர் பால் ருஸஸ பகீனா - ஆக நடித்திருக்கும்  Don Cheadle -ந் நடிப்பு மிகப் பெரிய பலம். ஒற்றை ஆளாக கொலைவெறிக் கும்பலிடமிருந்து அனைவரையும் காப்பாற்றத் துடிக்கிறார்.இவர் ஹூட்டு இனத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவியோ(Sophie Okonedo )  டூட்ஸி இனத்தைச் சார்ந்தவர். தனது குடும்பத்தைக் காப்பாற்ற பால் ருஸஸ பகீனா இனக்குழுவிற்கு பணமும் ஆல்கஹாலும் லஞ்சமாகத் தருகிறார்.

         அதிக அளவிலான அகதிகள் இவரது ஹோட்டலுக்குள் தஞ்சமடைகின்றனர்.1994 - ல் நடந்த உள்நாட்டு இன அழிப்பில் 10,00,000 மக்கள் கொன்றழிக்கப் பட்டனர். பல்வேறு சிரமங்களுக்கிடையே தனது குடும்பத்தை காப்பாற்றுகிறார் மேனேஜர் பால் ருஸஸ பகீனா .

                சிறந்த இசை சிறந்த ஒளிப்பதிவு என படத்தை ரசிக்க பல காரணங்கள் இருந்தாலும் எதையுமே ரசிக்க முடிவதில்லை. மனிதாபிமானம் தோற்று மனிதனின் வெறியாட்டம் போடுவதை கனத்த மனதுடன்தான் பார்க்க முடிகிறது.எல்லாப் போரிலும் முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகளே. இதிலும் விலக்கல்ல ஆயிரக்கணக்கான குழந்தைகள் அகதிகளாகின்றனர். செஞ்சிலுவைச் சங்கம் , ஐ. நா சபை என எதுவுமே மனிதனின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தமுடியாது என்பதை அறியலாம்.

17.5 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் 34 மில்லியன் டாலர் வருமானத்தைக் கொடுத்தது. 212 நிமிடக்கள் ஓடும் இப்படம் 2004-ல் திரையிடப்பட்டது. உலக சினிமா ரசிகர்களின் பட்டியலில் எப்போதும் இச்சினிமாவிற்கும் ஓர் இடம் உண்டு.
இந்த ஒற்றைப்பாடல் போதும் ஒட்டு மொத்த படத்தின் வலியைச் சொல்ல .இங்கே கேளுங்கள்.

படத்தின் ஒட்டுமொத்த சோகத்தையும் இசையின் வழியாக உணர்த்துகிறது. ஒவ்வொரு இசைத்துணுக்கும் மனிதனின் அவலங்களை ஓலமிட்டுச் சொல்கிறது.


மேலும் ஓர் சவுண்ட் டிராக் இங்கேமனித வாழ்வின் யதார்த்தைப் பேசும் படம் இது. இதைப் போன்ற படங்கள் என்றுமே சாகாவரம் பெற்றவை.மனதில்  தைரியம் இருந்தால் கீழே உள்ள டாக்குமென்ரியையும் பாருங்கள்.
 சில சமயம் மேலே உள்ள வீடியோ வேலை செய்யாமல் இருக்கலாம். இங்கே க்ளிக் செய்யுங்கள்.
No comments:

திரிபுவாதம்

     முதலில்  விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் " தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...