Knowledge is good only if it is shared.

Sunday, October 24, 2010

BARAKA

               மிக அற்புதமான ஒரு ஆவணப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. ஆனந்த விகடனில் குறிப்பிடப்பட்டிருந்த இந்த திரைப்படத்தை யூடியூபில் பார்த்தபோது ஓர் இனம் புரியா உற்சாகம் ஏற்பட்டது. படத்தில் வசனம் கிடையாது. படம் நெடுகிலும் நிழலைப்போல் தொடரும் இசை உங்களின் மனதை வருடிக்கொண்டேயிருக்கும்.மனித வாழ்வின் சுவடுகள் இத்திரைப்படமெங்கும் காணக்கிடைக்கின்றன.ஒன்றோடொன்று தொடர்பில்லாத காட்சிகளை இசை ஒருங்கிணைக்கிறது. இனி படத்திலிருந்து...
திபெத்தின் பனிமூடிய இமயமலை அழகாய் காட்சிதருகிறது நம்முன்னால்..ஜப்பானில் குதூகல குளியல் போடும் குரங்கு ஏதோ தியானித்திலிருப்பது போல் இருக்கிறது.


காத்மண்டுவின் காலை இளவெயிலின் ரம்யத்தில் பிரார்த்தனைகாட்சிகளோடு ஆரம்பிக்கிறது இப்படம்.... கூடவே இசையும் நம் மனதினுள் ஒட்டிவிடுகிறது.. மிகச்சிறந்த கேமிரா கோணங்களில் வசனமே இல்லாமல் வசீகரம் செய்கிறது ஒவ்வொரு காட்சியும்.
கொழுந்துவிட்டு எரியும் விளக்குகளின் தீபத்தின் முன் சலனமே இல்லாமல் கையில் மாலையின் மணிகளை உருட்டிக்கொண்டிருக்கிறார் பெளத்த பிக்கு ஒருவர்.
அடுத்த காட்சியில் அலையடிக்கும் கடல் ஆக்ரோசமாய் பாறையை தாக்க்கி அதன் குகைபோன்ற  இடுக்ககின் வழியே நுரைத்து வருகிறது.
இப்படத்தின் ட்ரையிலர் .

புத்தனின் சாந்தமான முகத்தை பார்த்துகொண்டே ஓர் கூட்டம் பிரார்த்தனை செய்கிறது. இது ஓர் நிகழ்த்தல் கலையை ஒத்து இருக்கிறது(பாலி- இந்தோனேஷியா). சில விநோதமான சத்தங்களுடன் பரிபாஷையைப்போல் இரு குழுக்காளாக அமர்ந்து ஓர் ஒழுங்காய் இப்பிரார்த்தனை நடைபெறுகிறது. இந்த இடத்தில் பின்னணி இசை மிகவும் கவனம்பெறுகிறது.


பிரார்த்தனை முடிவடைந்தது ஓர் அதிர்வுடன் எரிமலை தெரிகிறது திரையில்...எரிமலைக்காட்சியின் ஓர் பகுதியைபார்ப்பதற்கு நவீன ஓவியம் போல் இருக்கிறது. எரிமலை கக்கிய புகைகள் கடலின் அலைகலைப்போல் வழிந்து அலைந்து திரிகிறது. மிக அற்புதமான நிலப்பரப்பின் பகல் மற்றும் இரவு தோற்றங்கள்..காற்றால் சிதைக்கப்பட்டபாறை பொன்னிற  ஒளியுடன்  யாருமற்ற பெருவெளியில்  மெளனத்தின் சாட்சியாய் நிற்கிறது.(Arches National park Utah. USA).
Galapagos Islands, Ecuador -ல் ஓணானைப்போன்ற விலங்குகள் வால்கள் பின்னிப்பிணைய அலையடிக்கும் கடலை அமைதியாய் பார்த்தபடியிருக்கின்றன.
மாபொரும் யானை படுத்திருப்பதைப்போன்ற அமைப்புடன் (Ayers Rock,Ulura national Park, Australia) சூரியனின் ஒளிக்கரங்களால் பொன்னிறமாகிறது.அதன் முதுகில் நீளவாக்கில் கோடுகள் காற்றினால் ஏற்பட்டிருக்கும் என எண்ணும்போதே kakadu national park,Australia வின் குகை ஓவியங்கள் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன.Al Aukre,kayapo village ,Brazil  பழங்குடியின மக்களின் முக ஒப்பனை மற்றும் நிர்வாண சிறுவர் சிறுமியர் வண்ண வண்ண நூல்களை கொத்தாக கழுத்தினில் அணிந்துகொண்டு கேமிராவை பார்த்தபடி நிற்கின்றனார். வீட்டின் முற்றத்தில் முதியவர் குழு ஒன்று கைவினைபொருட்களை தயாரிக்கிறது.பாரம்பரிய உடை மற்றும் ஆபரணங்களுடன் அவர்களது நடனம் குறைந்த கேமிரா வேகத்தில் காண்பிக்கப்படுகிறது, பின்னணி இசையும் கூடவே நடனமாடுகிறது..Kayapo பழங்குடியின மக்கள் அரைநிர்வாணமாய் வரிசையில் நடந்து செவ்வது ஒழுங்கான அதிர்வுடன் நடக்கும் ராணுவ வீரர்களின் நடையை ஒத்திருக்கிறது.பருத்த முலை அசைந்தபடி ஆடும் அவர்களின் பாரம்பரிய நடனம் இசையை ஒத்திருக்கிறது.
தொடைகளை தட்டிய படி ஆடும் இறுதிச்சடங்கு நடனம்(Tiwi tribe, Australia) சொல்லவரும் செய்தி என்னவாக இருக்கும் என யோசிக்க வேண்டியிருக்கிறது.


Falamingoes lake magadi,Kenya -ல் ஆயிரக்கணக்கான பறைவைகள் வெண்சிறகுடன் திரை முழுவதும் பறக்கின்றன.Iguazu falls,Argentina நயகராவை நினைவுறுத்திகொண்டே கீழே விழுகிறது...மாபெரும் இரைச்சலுடன் அதன் நீர் பொங்கிவழிந்துகொண்டேயிருக்கிறது.
Lake natron ,Tansania-வில் நீர் அமைதியாய் மேகத்தை பிரதிபலித்தபடி கிடக்கிறது.
kenya Serengeti-ல் வல்லூறு ஒன்று மரத்தின் பட்டுப்போன கிளையில் அமர்ந்துகொண்டிருக்கிறது. தூரத்தில் இருவர் மங்கலாய் வண்ண போர்வை அணிந்து நடந்து செல்கிண்றனர்.Thompson gazelles,Masaai mara,Kenya  -வில் மான் கூட்டம் ஒன்று எதையோ வெறித்தபடி பார்த்துக்கொண்டிருக்கிறது.ஒரே ஒருமானுக்கு மட்டும் வளைவுடன் கூடிய அழகான கொம்புகள்.பிரேஸிலின் மழைகாடுகளில் ஓர் இலையின் வழியே கறுத்த எறும்புகள் வேகவேகமாய் நகர்கின்றன. நிசப்தமான கட்டில் ரம்பத்தின் ஒலி கேட்கிறது. ஆம் பெருத்த சப்தத்துடன் சிறு மரங்களின் கிளைகளை முறித்துக்கொண்டு வெட்டப்பட்பட்ட மரம் தரையில் சாய்கிறது.

அடுத்த காட்சியில்  பிரேசிலின் Kayapo தலைவர்  கேமிராவை பார்த்தபடி அசையாமல் இருக்கிறார். அவரது தலைக்கு பின்னால் ஒளி வட்டத்தைப்போல பறவையின் சிறகு. முகத்தில் செம்மை வண்னப்பூச்சு. பெருத்த சப்தத்துடன் பாறை தகர்க்கப்படுகிறது.ரியோ டி ஜெனிரியோவினல் மாடியிலிருந்து தன் முன் பரந்து கிடக்கும் நகரத்தின் நெருக்கடியை ஆசுவாசமாய் சிலர் பார்த்தபடி இருக்கின்றனர் .பின்னணில் உள்ள பெரிய மலை இவர்களை அமைதியாய் பார்த்தபடி இருக்கிறது.சிறுவர் கூட்டமொன்று உற்சாகமாய் பேசியபடி தெருவில் செல்கின்றனர்.ஹாங்காங்,Equator,Indonesia ,japan போன்ற நகரங்களின் நெருக்கடியான வாழ்க்கை நிலை காண்பிக்கப்படுகிறது. ஓர் புத்த பிக்கு கையில் மணியுடன் ஓசை எழுப்பிக்கொண்டிருக்கிறார்.நியூயார்க் , சௌதி அரேபியா மற்றும் டோக்கியோவின் காட்சிகள் விந்தையாய் உள்ளது ஜன சமுத்திரம் விரைவுவாழ்க்கையில் படும் நிகழ்வுகளே அவை.அதிலும் பண்ணைகளில் உள்ள கோழிகளையும் மனிதர்களையும் மாற்றி மாற்றி காட்டியிருப்பது ஆழ்ந்த சிந்தனைக்குரியது.
ஏமனில் கஷ்ட்டப்பட்டு பாரமிழுக்கிறது கழுதை..கொல்கத்தாவின் சேரியில் குப்பையை கிளரிக்கொண்டிருக்கிறது மனித கூட்டம் ஒன்று.பன்றிகளும் மாடுகளும் அர்களினூடே அலைந்து திருகின்றன.தெருவோர குழாயில் எண்ணை தேய்த்து குளிக்கிந்றனர் சிலர்..சிலர்  தெருவோர டீகடைகளில்..
பிரேஸில் குழந்தைகள் டம்ளரில் தண்ணீர் நிரப்பி விளையாடுகின்றனர். பரபரப்பான நகரின் மேம்பாலத்தின் கீழ் துணையோடு உறங்கும் மனிதர்.. என தெருவோர மனிதர்களின் சில நிகழ்வுகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.
கம்போடியாவில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் குடும்பம் மற்றும் ரிக்ஷாவில் பயணிக்க்கும் குழந்தைகள் கூட்டம் என மனவாழ்வின் சஞ்சாரங்கள் காட்டப்படுகின்றன.
பிரேஸில் மற்றும் தாய்லாந்து விபச்சார அழகிகளும் சில வினாடிகள் திரையில் வந்து போகின்றனர்.டோக்கியோவின் பூடோ நடனம் மெதுவான அசைவுகளுடன் ஏதே சோக செய்தியை சொல்வது போல் அமைகிறது. நடன மணிகள் மூவரும் மேடையிலிருந்து மறைந்தவுடன் அணிவகுத்து நிற்கும் அமெரிக்க போர் விமானங்கள் தோன்றுகிறது திரையில்.ஜெருசலேமின் Wailing wall -ல் ஓர் மாது பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார் அருகே உறுத்தலாய் துப்பாக்கியுடன் ஓர் வீரன். குவைத்தில் தீப்பிடித்து எரியும் எண்ணை வானளாவிய புகையை கக்குகிறது...
போலந்தின் பவுண்ரி தொழிற்சாலை ஊழியர்கள் தீயின் வெப்பத்தில் மினுங்குகின்றனர்.
நாஜி சித்திரவதை முகாம்களில் உள்ள எலும்புகுவியல்கள் சோக கீதத்தை உண்டாக்குகின்றன நம்முள்ளே.

கம்போடியாவில் ஆயுதங்களுடன் காவலர் வெறித்தபடி கேமிராவை நோக்குகின்றனர்.கம்போடியாவின் அங்கோர்வாட் கோவில் இந்தோனேசியாவின் ஜாவில் உள்ள கோவில்களில் இந்து மதத்தின் எச்சங்களை காணலாம்.
பின்னர் பல்வேறு நாடுகளின் வழிபாட்டு ஸ்தலங்கள் காட்டப்படுகின்றன. கங்கையில் எரியும் பிணங்கள் ,கங்கையை வழிபடும் மக்கள் என மனித வாழ்வின் நிகழ்வுகளை கலைநயத்தோடு படம்பிடித்துள்ளனர். திரைப்படத்தில் இந்த கங்கை சார்ந்த  பகுதிக்குதான் எல். சுப்ரமணியம் இசை அமைத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.  உலகை முழுவதும் சுற்றிப்பார்க்காமல் மக்களின் பழக்க வழக்கங்களை மிகக்கொஞ்சமாக தெரிந்து கொள்ள இந்த திரைப்படம் உதவும்.மேலும் உலகை வலம் வரவேண்டும் என்ற எண்ணமும் உருவாகும்.
இத்திரைப்படத்தை யூடியூபில் காண இங்கே சொடுக்குங்கள்.

No comments:

திரிபுவாதம்

     முதலில்  விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் " தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...