Knowledge is good only if it is shared.

Friday, September 10, 2010

Winged Migration

கலக்கலான தொழில்நுட்ப காட்சிகளுடன் படம் எடுப்பது அத்தனை சவாலான விஷயம் இல்லை.ஆனால் ஸ்பெஷல் எபெக்ட் எதுவும் இல்லாமல் நம்கற்பனைக்கும் எட்டாதவாறு மிகச்சிறப்பாக நம்மால் நம்பமுடியாத அளவுக்கு சில நிகழ்வுகளை காட்சிப்படுத்தமுடியுமா?
முடியும்...
இதோ இந்த படத்தொகுப்பைப் பாருங்கள்.

தரையில் அலையும் விலங்கை பின் தொடர இயலும். வானில் பறக்கும் பறவையை ? முடியும் என சாத்தியப்படுத்தியிருக்கிறது இந்த படப்பிடிப்புக குழு.
அலைதலின் மறுவடிவமான பறத்தலின் மகத்துவத்தைப் பேசுகிறது.

பறவைக்கூட்டங்கள் வானில் 'V' வடிவில் பறப்பதைப்பார்த்து வியந்திருக்கிறோம்.
அவை எங்கே இருந்து வருகின்றன? எங்கே செல்கின்றன? எதற்காக இந்த அலைதல்?.
ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு பறக்கும் பறைவைகள் எவ்வாறு வழிதவறாமல் பறக்கின்றன.

பறவையியலாளர்கள் உணவுக்காகவும்,சீதோஷண மாற்றத்திற்காகவும் இடம்பெயர்வதாக சொல்கின்றனர்.

இப்படத்தில் பறவைகள் படம் பிடிக்கப்பட்டிருக்கும் விதத்தைப்பார்க்கும் போது நாமும் அவற்றினூடே பறப்பதைப்போல் ஓர் உணர்வு. பறவையும் கேமிராவும் ஒரே நேர்கோட்டில் பறக்கின்றன. அவைகளும் கேமிராவைப்பார்த்து மிரட்சியையாமல் பறக்கின்றன.
குழந்தைகள் பெரியவர் என அனைத்து தரப்பினரும் பார்க்கவேண்டிய படம்.
காடுகளின் மீது,கடலலின் மீது,பாலைவனத்தில்,நகரங்களினூடே பறக்கும் போது படப்பிடிப்பு குழுவினரும் அவற்றை தொடர்ந்து சென்று படம்பிடித்திருப்பது வியப்பான ஒன்று.
பொதுவாக பறவைகளின் உலகை நாம் புரிந்து கொள்ளவே இல்லை என தோன்றுகிறது.
நாற்பதும்கும் மேற்பட்ட படப்பிடிப்பு குழுவினர் நான்கு வருடங்கள் இப்பறவைகளை படம்பிடித்திருக்கின்றனர்.


 காலை சூரியனின் முன்,அலையடிக்கும் கடலில் தத்தளிக்கும்  கப்பலின் மேல்,உயரமான கட்டிடங்களின் மேல்,அலைகளில் காலை நனைத்தபடி என பறவக்கள் பறந்தபடியே இருக்கின்றன.
அவற்றின் சிறகடிப்பும் , கீச்சுக்குரலும்  பதிவாகியபடியே இருக்கிறது. ஒரு கட்டத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் பறந்து திரைமுழுவது அங்குமிங்கும் பறக்கின்றது.
படத்தின் இசையும் நாம் பறப்பது போன்ற ஓர் உணர்வைதூண்டுகின்றன.
நாமும் பறவையாக மாட்டோமா என்ற எண்ணத்தை தூண்டுகிறது இப்படம்.

பல்வேறு நாடு பல்கலைக்கழகங்கள் இந்த ஆவணப்படத்தி வாங்கி பத்திரப்படுத்தியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் வெளிவந்த மிகச்சிறந்த ஆவணப்படம் என்ற விருதைப்பெற்றிருக்கிறது.
84 நிமிடம் ஓடும் இந்த ஆவணத்தொகுப்பு "யூ டியூபில்" பார்க்கக்கிடைக்கிறது.

எஞ்சினியர்ஸ்.

                      ஒ ரு காலத்தில் கனவுப் படிப்பாக இருந்தது. சீட் கிடைப்பதே பெரும்பாடு. நுழைவுத் தேர்வு எழுதி பன்னிரெண்டாம் வகுப்பின் கட்...