Knowledge is good only if it is shared.

Sunday, August 8, 2010

கடவுள் எனும் மாயை!

       கோவிலினுள்ளே சென்று சாமியை கும்பிட்டுவிட்டு வெளியே அக்கிரமம்(போட்டி,பொறாமை,காமம,திருட்டு,ஏமாற்றல்) செய்யும் மானிடபிறவிகளுக்கான கட்டுரைதான் இது.
                           முதலில் கடவுளுக்கும் நமக்குமான உறவு எவ்வாறு ஏற்பட்டது? நாமாக தேடி கடவுளை புரிந்து கொண்டோமா அல்லது அடுத்தவர் சொன்னதை அவ்வாறே ஏற்றுக்கொண்டோமா? இன்னும் தெளிவாக பார்ப்போம். ஒரு மனிதன் எப்போது கடவுள் எனும் சொல்லை கேட்கத்தொடங்குகிறான்?அவனது குழந்தைப்பருவத்தில் அவனது பெற்றோர் மூலமாகவும் உறவினர்கள் மூலமாகவும் அச்சொல்லை கேட்கிறான்.

                     ஒரு குழந்தையை 20 வயதுவரை எந்த ஒரு மதத்தின் கருத்துக்களையோ அல்லது கடவுளையோ அறிமுகப்படுத்தாமல் இருந்தால் உலகில் மதங்களே இல்லாமல் ஆகிவிடும்.குழந்தைகள் நம்மைச்சார்ந்து இருக்கிறார்கள் அதனால் அவர்களின் உடல் ரீதியான மற்றும் மனரீதியான இயலாமையை பயன் படுத்தி நம்முடைய கருத்துக்களை அவர்களின் மேல் திணிக்கிறோம.நமக்கும் இப்படித்தான் திணிக்கப்பட்டது எனவே அது சரியாகவே இருக்கும் என்ற எண்ணத்தில் செய்கிறோம்.கேள்வி கேட்டாலும் சரியான பதில் இல்லை.மனதில் ஏகப்பட்ட குப்பைகளை (கோபம், பொறாமை, சுயநலம்) சுமந்துகொண்டு கடவுளின் முன் மன்றாடுகிறோம்.வியப்பாக இல்லை.அதுமட்டுமல்ல கேள்வியே கேட்காமல் அதைச்செய்யுமாறு பணிக்கப்படுகிறோம்.
                                 கடவுள் என்பதை நாம் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அவர் தான் நம்மையும் இந்த உலகத்தையும் காக்கிறார் எனவும்.நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி அவர் எனவுமே போதிக்கப்படுகின்றன. கடவுளின் இருத்தலைப்பற்றிய கேள்வியை யாரும் கேட்பதும் இல்லை.
               புத்தராகட்டும்,கிருஷ்ணனாகட்டும்,மகாவீரராகட்டும்,நபிகளாகட்டும் அவர்களை கடவுளாகவே நாம் பார்க்கிறோம.அவர்களும் நம்மைப்போல சாதாரண மனிதர்கள்தான் என்ற உண்மையை அறியாமலிருக்கிறோம்.கடவுள் என்பது ஒரு வித சக்தியோ அல்லது நம்மையெல்லாம் ஆட்டிப்படைக்கிற சக்தியோ அல்ல.அது ஒரு தன்மை. அழகு என்பது எப்படி ஒரு தன்மையோ அதே போலத்தான். மணம் என்பதுவும் ஒரு தன்மை அதைப்போலத்தான்.அவர்கள் சொன்னதுவும் அதைத்தான். அனால் நம்முடைய மனது கஷ்ட்டப்பட்டு யோசிக்காமல்(பிற மதங்களையும் அதன் கோட்பாடுகளையும் அறியவே நம்முடைய மனம் விரும்புவதில்லை அல்லது நாம் முயற்சி செய்வதில்லை) அதை நடைமுறைப்படுத்தாமல் அவர்களையே வணங்குகிறோம்.அதாவது நீங்கள் சொன்னதின் படி நடக்கமாட்டேன். ஆனால் அதற்குப்பதில் உங்களை வணங்குகிறேன் எனக்கு நீங்கள் சொன்னபடி வளமான வாழ்வைக்கொடுங்கள்।இது எவ்வளவு அபத்தமாக இருக்கிறது। ஏனெனில் அவர்கள் சொன்னதை கடைபிப்பது மிகவும் கடினம்.பிரார்த்தனை மிகமிக எளிது.கடவுள்தன்மையை புரிந்து அதன் படி வாழ அவர்கள் சொன்ன விசயத்தை கிரகிக்காமல். சொன்னவர்களை வணங்கிய, வணங்க கடாயப்படுத்துகிறவர்களாக அல்லது இறை தூதரென நம்ம தயாராக இருக்கிறோம்.
அதாவது ஒரு விசயத்தைப்பற்றி நமக்கே தெளிவான புரிதல் இல்லாத நிலையிலும் அதை அடுத்த தலைமுறையினரின் மேல் வலிந்து திணிக்கிறோம்।விடை தெரியாத நிகழ்வுகளிலிருந்துதான் கடவுளைப்பற்றிய என்ன்ணம் தோன்றியிருக்கக்கூடும். மழையையும் ,காற்றையும் வருண பகவானாகவும்,வாயு பகவானாகவும் உருவாக்கம் செய்ததிலிருந்து இந்த ஆட்டு மந்தைத்தனம் தோன்றியது.அது இன்றுவரை மனிதனை முட்டாளாகவே வைத்திருக்கிறது.இப்போது பூமாதேவிக்கும் நிலநடுக்கத்திற்கும் முடிச்சுபோட தோன்றவில்லை.ஏனெனில் நிலநடுக்கத்திற்கான காரணம் தெரிந்து விட்டது.
                     நம்பிக்கையின் அடிப்படையில்தான் கடவுளை வணங்குகிறோம் என ஒரு கூட்டம் ஆர்பரிக்கிறத.அதாவது அவர்களுக்கே கடவுளைப் பற்றி சரியாக தெரியாது என்பதுதான் அதன் பொருள்.உண்மையை தெரிந்து கொள்ளவும் முயற்சிசெய்வதில்லை. யோசிக்கவே சோம்பல் படும் மனது.ஒருநாளாவது கடவுள் எப்படி தோன்றியிருக்கக்கூடும் என யோசிப்பதில்லை.கடவுளின் இருத்தலை கேள்விக்குட்படுத்தியதில்லை.இதுவரை நாம் புரிந்து கொண்ட கடவுளை இல்லையென உணரும்போது அந்த நிலை ஒருவித வெறுமையைப்போல நமக்கு தோன்றும். ஆனாலும் உண்மை அதுதானே.உடல் என்பது நிர்வாண உடலை மட்டும்தான் குறிக்கிறது உடையையும் சேர்த்து அல்ல.அதைப்போல கடவுள் என்பது இல்லையெனவும் கடவுள்தன்மைதான் உண்மையெனவும் தெரிந்து அதை ஏற்க பழகுவோம்.

3 comments:

nsk said...

Good thoght! Sinthikka vendia vishayam.
-NSK

Fepslin said...

Good Tought, But My policy IS " BE GOOD DO GOOD"

Anonymous said...

great article ......cocktail of osho ,j.k and jaggi vasudev.im tamilkumar working in singapore,my no 98297404.

திரிபுவாதம்

     முதலில்  விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் " தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...