Knowledge is good only if it is shared.

Sunday, August 8, 2010

சுடலை மாடன்

று வழக்கம்போல் நுரைத்தபடி ஓடிக்கொண்டிருந்தது. கரையோரத்தில் இருந்த சுடலை மாடனுக்கு கொஞ்சம் குளிர். இருந்த ஒரே நேரியல் துண்டையும் நேற்று இரவு வேலப்பன் உருவி தோளில் போட்டுக்கொண்டு போய்விட்டான்.
பயலுகளுக்கு சேட்டை கூடி விட்டது.மாடன் மனதுக்குள் கருவிக்கொண்டது.அழகனாபுரம் கல்லுப்பாலத்தில் சாராயம் குடிச்சுட்டு போகும் போது வேலப்பனுக்கு இதே வேலையாய் போய்விட்டது. வழக்கமா போதை தெளிந்ததும் அலறிஅடித்துக்கொண்டு துண்டை கட்டிவிட்டு நாலு தோப்புக்கரணமும் போட்டுவிட்டு போவான். பயலை இன்னும் காணலை.
அவன் அப்பன் செஞ்ச புண்ணியம் பய இன்னும் உயிரோடு இருக்கான். அப்பவே கட்டைல போக வேண்டிய ஆளு.பாவி மட்ட.


  யலுக்கு பொறந்த உடனே ஏதோ சீக்கு.அப்பன் தங்கம்பெருமாள் ஏதோ மலையாள மந்திரவாதிய போய் கேட்ருக்கான். அவனும் 11 ரூபா தட்சனை வாங்கிட்டு,"பொணம் எரிஞ்ச சுடுகாட்டுக் குழியில ஒடுக்கத்தி வெள்ளி கெழம பச்சிலை பறிச்சுட்டு வந்து பயலுக்கு அரைச்சு கொடுத்தா எல்லம் சரியாபோவும்.  அம்மணமா ராத்திரி 12 மணிக்கு போகணும்.கையில விளக்கு எடுத்துகிட்டு போக கூடாது"
தங்கம் பெருமாள் சும்மா சொல்லக்கூடாது பய நல்ல வடிவான பயதான். அவனுக்கு நேரம் சரியில்ல.வேற என்ன சொல்ல.


னமெல்லம் ஆத்துக்கு குளிக்க வந்தாச்சு. நமக்கு அம்மணமா நிக்க நாணமா இருக்கு. சாமின்னலும் ஒருமாதிரிதான் இருக்கு.
பயல இன்னும் காணோம் .காலங்காத்தாலே நாகர்கோவிலுக்கு பஸ் ஏறி போய்டானோ.
இது என்ன எழவு அம்மணம்ம நிக்கிற நம்மள கும்பிட எவனோ டிம்போவ நிறுத்துதான்.
சரிதான் போ! வேலப்பனா இது. கையில என்ன எழவோ வச்சுருக்கான். புது நேரியலா. பய நேத்து உருவிட்டு போனத எங்கியோ தொலச்சு போட்டான் போல.
சரி நமக்கு நல்ல கோளுதான்.
ராத்தி அடிச்ச போத இன்னும் தீரல பயலுக்கு.
புது நேரியல் மணம் நல்லதான் இருக்கு.
என்னான்னே தெரியல இந்த பய நம்மள என்னசெஞ்சாலும் நமக்கு கோவம் வர மட்டகு.
அப்பனுக்கு செய்சத நினச்சு பயலுக்க மேல கொஞ்சம் அனுதாபம் அவ்ளோதான்.
சரி நடந்தது நடந்து போட்டு .ஆனாலும் அந்த நாள் இன்னும் ஞாபகம் இருக்கு.
குத்திருட்டு.பாழாப்பொன ஆந்த நான் பீடத்து விட்டு எறங்கினதும். அலறி கத்திகிட்டு பறந்தாச்சு.
இப்பொம் எனக்கு ஒரு யோசனை. பசி வயத்த கிள்ளுது. சரியான இரை மாட்டி கொஞ்ச நாள் ஆச்சு.
வேறவழி இல்ல. குழிய தோண்டிற வேண்டியதான். பழைய எலும்பு வல்லதும் மாட்டும். ஆலஞ்சருகு நெரிபடும் சத்தம் கேக்குது. இங்கே நமக்கே ஒரு எலும்புத்துண்டுக்கு வளியில்ல. இதுல போட்டிக்கு ஆளு வேறையா.யாருன்னு பாத்த அம்மணம்ம ஒருத்தன். நெத்தில பெரிய பட்டை. சரிதான் பய இருட்டுல வழிதவறி வந்துட்டான் போல. என்ன இது பய சரியா குழிய நோக்கி வாரான். ஓஹோ! அப்பிடியா சங்கதி. இங்க நானே வெப்புராளத்துல இருக்கேன்.இதுல நீ வே போட்டிக்கு குழில கைய விடுறியா.வந்த கோவத்துல போட்டேன்.. ஒரு போடு. அவ்ளவுதான்! அடுத்த 8 ம்நாள் வெள்ளிக்கிழம பய அவுட்.
கோவத்துல நடந்து போச்சு. பசி மயக்கம்.அதனாலதான் அவன் மகன இன்னும் கண்ணுக்குள்ள வச்சு பாத்துகிடுதேன். எத்தனை ராத்திரி இவன் தண்ணிய போட்டுகிட்டு ரோட்டுல வரும் போது துணைக்கு பின்னாடியே வரவேண்டி இருக்கு.
ஆனா வந்த பய நம்மள மதிக்கம என்னைக்குமே போனதுஇல்ல.
நேரா நம்ம பீடத்துல எனக்கு நேர சம்மணம் போட்டு உக்கருவான்.  
"என் அப்பன நீதான கொன்ன? ஏன் கொன்ன?
உன்னை சங்காரம் பண்ணிப்போடுவேன் பாருன்னு"
  என்னென்னவோ பேசிகிட்டுருப்பான். நமக்கும் பொழுது போகணுமே. எவ்ளோ நேரந்தான் எதுத்தாப்ல உள்ள ஆலமரத்தையும் ஆத்தையும் பாத்துகிட்டு இருக்கது. போகும் போது பய நேரியல உருவிகிட்டு போய்டுவான்.அதுதான் கொறச்சல்.


( நன்பர்களே பின்னூட்டத்தில் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி)

2 comments:

archu said...

it ts very entertainmentable story thank u bala.

பாலா.R said...

Thanks a lot archu.

எஞ்சினியர்ஸ்.

                      ஒ ரு காலத்தில் கனவுப் படிப்பாக இருந்தது. சீட் கிடைப்பதே பெரும்பாடு. நுழைவுத் தேர்வு எழுதி பன்னிரெண்டாம் வகுப்பின் கட்...