Knowledge is good only if it is shared.

Sunday, August 8, 2010

ஜி.நாகராஜன்

"பணமே ஒரு மானங்கெட்ட விஷயந்தானே?.
"எப்பிடி?"
"நான் பள்ளியிலே படிக்கும் போது - ஒரு நா கிரவுண்டிலே விளையாடிட்டுருந்தோம்.ஒரு பணக்கார வீட்டு பையன்- எவன் இந்த மோனேலருந்து அந்த மோனே வரைக்கும் பிறந்தமேனியா ஓடுறானோ அவனுக்கு 10 ரூவா தாரேன்னான்"எல்லோரும் சிரிச்சாங்க.
"ரெண்டு தரம் ஓடினா 20 ரூவா தருவியான்னு கேட்டேன்"-முடியாதூன்னான்.
அப்படியே ஓடிட்டு ,நிறுத்தி நிதானமா வேட்டியையும் சட்டையையும் போட்டுகிட்டு 10 ரூபாயை ஜெயிச்சேன்.
"அப்பதான் எனக்கு ஞானம் ஏற்பட்டது"
"என்ன ஞானம்"
"இந்த பணமே ஒரு மானங்கெட்ட விஷயம்கிற ஞானம்தான்".

-'நாளை மற்றுமொரு நாளே' என்ற கதையிலிருந்து...



மேலும் சில வரிகள்..


“சரி உக்காரு, பேசுவோம்” என்றான் கந்தன்.

“ஏம் மச்சான், இப்படிக் கால் நடுங்குது ?” என்று கேட்டுக் கொண்டே அவள் உட்கார்ந்தாள்.

“அது அப்படித்தான் செல சமயம். மூக்கன் என்ன சவாரிக்குப் போயிருக்கா ?”

“ஆமாம், பொழுது சாஞ்சுதான் வரும்.”

“இல்லே, ஒன்னு தோணிச்சு. நேத்து ஒரு கிராக்கி, கொஞ்சம் வயசு கூடவானாலும் பரவாயில்லே, உம்னு இல்லாம சிரிச்சுப் பிடிச்சி விளையாடற பிள்ளையா இருந்தா வேணூம்னான். எனக்கு ஒன் நெனைப்புத்தான் வந்திச்சு.”

“போங்க மச்சான், என்னமோ காரியமா பேசுறீங்க, எனக்குத் தெரியாதா ?” என்று கூறிவிட்டு, பிறகு ஏதோ நினைவுக்கு வந்துவிட்டது போல் சிரிக்கத் தொடங்கினாள்.
“மச்சானோடே எப்பவும் ஒரே கூத்துத்தான்” என்பதையும் சேர்த்துக்கொண்டு, சிரித்தவண்ணமே, ஒரு கையால் தலைப்பூவைச் சரி செய்துகொள்ளப் பார்த்தாள். அவள் சிரித்த சிரிப்பில் பூவும் கலைந்து அவளது காதின் பின்னே ஏதோ வால் மாதிரி தொங்கிக்கொண்டிருந்தது.

“நீயும் அளகாத்தான் இருக்கே. இல்லாட்டி மூக்கன் கட்டியிருப்பானா ?” என்றான் கந்தன்.

“அதான் அண்ணைக்கு, நீ கொரங்கு மாதிரிஇருக்கே, ஒங்கிட்ட எவன் வருவான்னு சொன்னேயாக்கும் ?”

“வெறிச்சிலே சொல்லியிருப்பேன்.”



ஜி.நாகராஜனின் கதை இது. விளிம்புநிலை மனிதர்கள் என நாம் நினைப்பவர்கள்களின்  அன்றாட வாழ்வை எந்தவித பாசாங்கும் இல்லாமல் சொல்லியிருக்கிறார்.கதையின் முடிவில் நாம் எதிர்பார்க்கிற சுபம் என்கிற சாக்லேட் முடிவுகளையெல்லம் இவரது கதைகளில் எதிர்பார்க்க முடியாது.
காலச்சுவடு பதிப்பாக வெளிவந்துள்ள 'ஜி.நாகராஜன் ஆக்கங்கள்' (தொகுப்பு: ராஜமார்த்தாண்டன்) என்ற நூலில் முதல் கதைதான் இது.
புத்தகத்தின் விலை - 450 ரூபாய்.

No comments:

எஞ்சினியர்ஸ்.

                      ஒ ரு காலத்தில் கனவுப் படிப்பாக இருந்தது. சீட் கிடைப்பதே பெரும்பாடு. நுழைவுத் தேர்வு எழுதி பன்னிரெண்டாம் வகுப்பின் கட்...