Knowledge is good only if it is shared.

Sunday, August 8, 2010

கடவுள் எனும் மாயை!

       கோவிலினுள்ளே சென்று சாமியை கும்பிட்டுவிட்டு வெளியே அக்கிரமம்(போட்டி,பொறாமை,காமம,திருட்டு,ஏமாற்றல்) செய்யும் மானிடபிறவிகளுக்கான கட்டுரைதான் இது.
                           முதலில் கடவுளுக்கும் நமக்குமான உறவு எவ்வாறு ஏற்பட்டது? நாமாக தேடி கடவுளை புரிந்து கொண்டோமா அல்லது அடுத்தவர் சொன்னதை அவ்வாறே ஏற்றுக்கொண்டோமா? இன்னும் தெளிவாக பார்ப்போம். ஒரு மனிதன் எப்போது கடவுள் எனும் சொல்லை கேட்கத்தொடங்குகிறான்?அவனது குழந்தைப்பருவத்தில் அவனது பெற்றோர் மூலமாகவும் உறவினர்கள் மூலமாகவும் அச்சொல்லை கேட்கிறான்.

                     ஒரு குழந்தையை 20 வயதுவரை எந்த ஒரு மதத்தின் கருத்துக்களையோ அல்லது கடவுளையோ அறிமுகப்படுத்தாமல் இருந்தால் உலகில் மதங்களே இல்லாமல் ஆகிவிடும்.குழந்தைகள் நம்மைச்சார்ந்து இருக்கிறார்கள் அதனால் அவர்களின் உடல் ரீதியான மற்றும் மனரீதியான இயலாமையை பயன் படுத்தி நம்முடைய கருத்துக்களை அவர்களின் மேல் திணிக்கிறோம.நமக்கும் இப்படித்தான் திணிக்கப்பட்டது எனவே அது சரியாகவே இருக்கும் என்ற எண்ணத்தில் செய்கிறோம்.கேள்வி கேட்டாலும் சரியான பதில் இல்லை.மனதில் ஏகப்பட்ட குப்பைகளை (கோபம், பொறாமை, சுயநலம்) சுமந்துகொண்டு கடவுளின் முன் மன்றாடுகிறோம்.வியப்பாக இல்லை.அதுமட்டுமல்ல கேள்வியே கேட்காமல் அதைச்செய்யுமாறு பணிக்கப்படுகிறோம்.
                                 கடவுள் என்பதை நாம் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அவர் தான் நம்மையும் இந்த உலகத்தையும் காக்கிறார் எனவும்.நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி அவர் எனவுமே போதிக்கப்படுகின்றன. கடவுளின் இருத்தலைப்பற்றிய கேள்வியை யாரும் கேட்பதும் இல்லை.
               புத்தராகட்டும்,கிருஷ்ணனாகட்டும்,மகாவீரராகட்டும்,நபிகளாகட்டும் அவர்களை கடவுளாகவே நாம் பார்க்கிறோம.அவர்களும் நம்மைப்போல சாதாரண மனிதர்கள்தான் என்ற உண்மையை அறியாமலிருக்கிறோம்.கடவுள் என்பது ஒரு வித சக்தியோ அல்லது நம்மையெல்லாம் ஆட்டிப்படைக்கிற சக்தியோ அல்ல.அது ஒரு தன்மை. அழகு என்பது எப்படி ஒரு தன்மையோ அதே போலத்தான். மணம் என்பதுவும் ஒரு தன்மை அதைப்போலத்தான்.அவர்கள் சொன்னதுவும் அதைத்தான். அனால் நம்முடைய மனது கஷ்ட்டப்பட்டு யோசிக்காமல்(பிற மதங்களையும் அதன் கோட்பாடுகளையும் அறியவே நம்முடைய மனம் விரும்புவதில்லை அல்லது நாம் முயற்சி செய்வதில்லை) அதை நடைமுறைப்படுத்தாமல் அவர்களையே வணங்குகிறோம்.அதாவது நீங்கள் சொன்னதின் படி நடக்கமாட்டேன். ஆனால் அதற்குப்பதில் உங்களை வணங்குகிறேன் எனக்கு நீங்கள் சொன்னபடி வளமான வாழ்வைக்கொடுங்கள்।இது எவ்வளவு அபத்தமாக இருக்கிறது। ஏனெனில் அவர்கள் சொன்னதை கடைபிப்பது மிகவும் கடினம்.பிரார்த்தனை மிகமிக எளிது.கடவுள்தன்மையை புரிந்து அதன் படி வாழ அவர்கள் சொன்ன விசயத்தை கிரகிக்காமல். சொன்னவர்களை வணங்கிய, வணங்க கடாயப்படுத்துகிறவர்களாக அல்லது இறை தூதரென நம்ம தயாராக இருக்கிறோம்.
அதாவது ஒரு விசயத்தைப்பற்றி நமக்கே தெளிவான புரிதல் இல்லாத நிலையிலும் அதை அடுத்த தலைமுறையினரின் மேல் வலிந்து திணிக்கிறோம்।விடை தெரியாத நிகழ்வுகளிலிருந்துதான் கடவுளைப்பற்றிய என்ன்ணம் தோன்றியிருக்கக்கூடும். மழையையும் ,காற்றையும் வருண பகவானாகவும்,வாயு பகவானாகவும் உருவாக்கம் செய்ததிலிருந்து இந்த ஆட்டு மந்தைத்தனம் தோன்றியது.அது இன்றுவரை மனிதனை முட்டாளாகவே வைத்திருக்கிறது.இப்போது பூமாதேவிக்கும் நிலநடுக்கத்திற்கும் முடிச்சுபோட தோன்றவில்லை.ஏனெனில் நிலநடுக்கத்திற்கான காரணம் தெரிந்து விட்டது.
                     நம்பிக்கையின் அடிப்படையில்தான் கடவுளை வணங்குகிறோம் என ஒரு கூட்டம் ஆர்பரிக்கிறத.அதாவது அவர்களுக்கே கடவுளைப் பற்றி சரியாக தெரியாது என்பதுதான் அதன் பொருள்.உண்மையை தெரிந்து கொள்ளவும் முயற்சிசெய்வதில்லை. யோசிக்கவே சோம்பல் படும் மனது.ஒருநாளாவது கடவுள் எப்படி தோன்றியிருக்கக்கூடும் என யோசிப்பதில்லை.கடவுளின் இருத்தலை கேள்விக்குட்படுத்தியதில்லை.இதுவரை நாம் புரிந்து கொண்ட கடவுளை இல்லையென உணரும்போது அந்த நிலை ஒருவித வெறுமையைப்போல நமக்கு தோன்றும். ஆனாலும் உண்மை அதுதானே.உடல் என்பது நிர்வாண உடலை மட்டும்தான் குறிக்கிறது உடையையும் சேர்த்து அல்ல.அதைப்போல கடவுள் என்பது இல்லையெனவும் கடவுள்தன்மைதான் உண்மையெனவும் தெரிந்து அதை ஏற்க பழகுவோம்.

ஜி.நாகராஜன்

"பணமே ஒரு மானங்கெட்ட விஷயந்தானே?.
"எப்பிடி?"
"நான் பள்ளியிலே படிக்கும் போது - ஒரு நா கிரவுண்டிலே விளையாடிட்டுருந்தோம்.ஒரு பணக்கார வீட்டு பையன்- எவன் இந்த மோனேலருந்து அந்த மோனே வரைக்கும் பிறந்தமேனியா ஓடுறானோ அவனுக்கு 10 ரூவா தாரேன்னான்"எல்லோரும் சிரிச்சாங்க.
"ரெண்டு தரம் ஓடினா 20 ரூவா தருவியான்னு கேட்டேன்"-முடியாதூன்னான்.
அப்படியே ஓடிட்டு ,நிறுத்தி நிதானமா வேட்டியையும் சட்டையையும் போட்டுகிட்டு 10 ரூபாயை ஜெயிச்சேன்.
"அப்பதான் எனக்கு ஞானம் ஏற்பட்டது"
"என்ன ஞானம்"
"இந்த பணமே ஒரு மானங்கெட்ட விஷயம்கிற ஞானம்தான்".

-'நாளை மற்றுமொரு நாளே' என்ற கதையிலிருந்து...மேலும் சில வரிகள்..


“சரி உக்காரு, பேசுவோம்” என்றான் கந்தன்.

“ஏம் மச்சான், இப்படிக் கால் நடுங்குது ?” என்று கேட்டுக் கொண்டே அவள் உட்கார்ந்தாள்.

“அது அப்படித்தான் செல சமயம். மூக்கன் என்ன சவாரிக்குப் போயிருக்கா ?”

“ஆமாம், பொழுது சாஞ்சுதான் வரும்.”

“இல்லே, ஒன்னு தோணிச்சு. நேத்து ஒரு கிராக்கி, கொஞ்சம் வயசு கூடவானாலும் பரவாயில்லே, உம்னு இல்லாம சிரிச்சுப் பிடிச்சி விளையாடற பிள்ளையா இருந்தா வேணூம்னான். எனக்கு ஒன் நெனைப்புத்தான் வந்திச்சு.”

“போங்க மச்சான், என்னமோ காரியமா பேசுறீங்க, எனக்குத் தெரியாதா ?” என்று கூறிவிட்டு, பிறகு ஏதோ நினைவுக்கு வந்துவிட்டது போல் சிரிக்கத் தொடங்கினாள்.
“மச்சானோடே எப்பவும் ஒரே கூத்துத்தான்” என்பதையும் சேர்த்துக்கொண்டு, சிரித்தவண்ணமே, ஒரு கையால் தலைப்பூவைச் சரி செய்துகொள்ளப் பார்த்தாள். அவள் சிரித்த சிரிப்பில் பூவும் கலைந்து அவளது காதின் பின்னே ஏதோ வால் மாதிரி தொங்கிக்கொண்டிருந்தது.

“நீயும் அளகாத்தான் இருக்கே. இல்லாட்டி மூக்கன் கட்டியிருப்பானா ?” என்றான் கந்தன்.

“அதான் அண்ணைக்கு, நீ கொரங்கு மாதிரிஇருக்கே, ஒங்கிட்ட எவன் வருவான்னு சொன்னேயாக்கும் ?”

“வெறிச்சிலே சொல்லியிருப்பேன்.”ஜி.நாகராஜனின் கதை இது. விளிம்புநிலை மனிதர்கள் என நாம் நினைப்பவர்கள்களின்  அன்றாட வாழ்வை எந்தவித பாசாங்கும் இல்லாமல் சொல்லியிருக்கிறார்.கதையின் முடிவில் நாம் எதிர்பார்க்கிற சுபம் என்கிற சாக்லேட் முடிவுகளையெல்லம் இவரது கதைகளில் எதிர்பார்க்க முடியாது.
காலச்சுவடு பதிப்பாக வெளிவந்துள்ள 'ஜி.நாகராஜன் ஆக்கங்கள்' (தொகுப்பு: ராஜமார்த்தாண்டன்) என்ற நூலில் முதல் கதைதான் இது.
புத்தகத்தின் விலை - 450 ரூபாய்.

Saturday, August 7, 2010

Painted Manhole Covers.

சமீபத்தில் பூன் லே பேரூந்து நிலையத்திலிருந்து அருகிலுள்ள நூலகத்திற்கு சென்ற போது நான் பார்த்து ரசித்த காட்சி. நல்ல ரசனை உணர்வு...

அ.முத்துலிங்கம்

சிலருடைய சொந்த அனுபவங்களை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமானவை. அந்த சிலர் பிரபலமானவராக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்,சுவாரஸ்யம் இன்னும் கூடிவிடும். சுஜாதா அவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்கள் மற்றும் அவரைப்பற்றிய விஷயங்களை  அவரது கற்றதும் பெற்றதும் கட்டுரைகளிலிருந்து வாசித்து மட்டும் அனுமானித்துக்கொண்டவர்கள் பலர். சில அனுமானங்கள் மட்டுமே உண்மையாக இருக்கலாம்.
உலகின் பல்வேறு நாடுகளில் பணிபுரிந்த அனுபவங்களில் சிலவற்றை "உண்மை கலந்த நாட்குறிப்புகள்" என்ற புத்தகமாக அ. முத்துலிங்கம் அவர்கள் எழுதியுள்ளார்கள். அருமையான எழுத்து நடை . விவரணைகள், நாமும் மெளனமாக அவருடன் பயணித்தைப்போன்ற ஓர் உணர்வு....
சிறுகதைகளாக அவர் எழுதியுள்ளார். சில சம்பவங்கள் அவர் பிறந்த இலங்கையிலும் சில சம்பவங்கள் அவர் பணிபுரிந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க  நாடுகளிலும் நடந்தவை. படிக்கப்படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. "ஜூரோங் ஈஸ்ட்" நூலகத்தில் இப்புத்தகத்தை பரிந்துரைத்த நண்பர் சேகரின் பரிந்துரைகள் எப்போதுமே சோடை போவதில்லை.


உலகத்து கவலைகளையெல்லம் ஆண் சுமக்கிறான்.
ஆணை, பெண் சுமக்கிறாள்.
-ஆப்பிரிக்க முது மொழி


என்ற பதத்தோடு ஆரம்பிக்கும் புத்தகத்தில் மொத்தம் 46 சிறுகதைகள் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்கதாக "ஆப்பிரிக்க பஞ்சாயத்து" , " கைக்கிளை" ,  "பக்கத்து வீட்டுக் கிணறு" , மற்றும் "சுவருடன் பேசும் மனிதன் " என்னும் கதைகளைச் சொல்லலாம்.
உயிர்மை பதிப்பகமாக வெளிவந்துள்ள இப்புத்தகம் ரூபாய் 170 விலையில் கிடைக்கிறது.

திரிபுவாதம்

     முதலில்  விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் " தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...