Knowledge is good only if it is shared.

Friday, February 20, 2009

நான் செஞ்சது தப்பா பாஸ்?


          நம்ம முன்னால இருக்கிற சாய்ஸ்ன்னு பாத்தீங்கன்னா கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, ராமதாஸ், திருமா, விஜயகாந்த், சரத்குமார், பி.ஜே.பி, ரெண்டு கம்யூனிஸ்ட் அவ்வளவுதான் அப்புறம் ஒரு சர்க்கஸ் குரூப் அதாங்க காங்கிரஸ்.
             எனக்கு திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதி ஒரு 10 வருஷத்துக்கு முன்னால பிரச்சாரத்துக்காக (அதிமுக) ஒரு நடிகர் நம்ம ஊருக்கு வாராங்கன்னு சொன்னாங்க அதுல கொடுமை என்னன்ன அவருதான் வேட்பாளராம். சரி இருக்கட்டும்னு நினைச்சேன் அப்புறம்தான் தெரிஞ்சுது வரப்போவது நம்ம மாட்டுக்காரவேலன்னு (அதாங்க ராமராஜன்) நல்லவேளை அந்த பதட்டத்துலையும் நான் நிதானம் இழக்காம யோசிச்சேன். எப்படி இவருட்ட இருந்து தப்பிக்கிறதுன்னு. ஒருவழியா அவரு வருகிறநாள்மட்டும் கருங்கல்லில் இருக்கிற நண்பர் வீட்டுக்கு போனேனோ அதனால் தப்பிச்சேன். அப்புறம் யோசிச்சேன் ராமராஜனுக்கும் அதிமுகக்கும் என்ன உறவு? அத கூட விட்டுரலாம் நம்ம ஏரியாக்கும் அவருக்கும் தொடர்பே இல்லையே.
அதனால அதிமுகக்கு ஓட்டு போடவது வேஸ்டுன்னு முடிவெடுத்தேன். நான் செஞ்சது தப்பா பாஸ்?
    அப்புறம் அடுத்த எலக்சன் எங்களோட வேட்பாளர் ராதிகாசெல்வி. இது யாருப்பா புதுசா இருக்குன்னு நினைச்சபோதுதான் பேப்பர்ல படிச்சேன். அவரு கணவர் வெங்கடேச பண்ணையாராம். அட இவரு பேரு எங்கேயோ கேள்விபட்ட மாதிர்ி இருக்குன்னு நினைச்சு பிரண்டுட்ட கேட்டேன். ஒருவேளை காந்திகூட உப்பு காய்ச்சியவரா இருக்கும் இல்லைன்னா ஏதாவது மொழிப்போர் தியாகியாக இருக்கும்னு நினைச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது என்கவுண்டர்ல போட்டு தள்ளுன ரவுடியாம் அவரு. ஆஹா இது கதைக்கு உதவாதுன்னு திமுகாவையும் விட்டு தள்ளுனேன். நான் செஞ்சது தப்பா பாஸ்?
     அப்புறம் எங்க தொகுதியில காங்கிரஸ் (எந்த குரூப்னு சொல்ல மாட்டேன்) வேட்பாளர் ஒருமுறை நின்னார். அட இவங்களதான் காந்தி சுதந்திரம் கிடைச்ச உடனே துண்ட உதறி தோள்ள போட்டுட்டு வீட்டுக்கு போக சொன்னாரே. இவங்க ஏன் இன்னும் பீரங்கி வாங்கி ஊழல் பண்ணவா இல்லைனா கேணத்தனமான வெளியுறவு கொள்கையை பாலோ பண்ணவான்னு யோசிச்சுட்டு இருக்காங்களேன்னு யோசிச்சேன். காந்தியே சொல்லிட்டார் அப்புறம் இவங்களுக்கு என்ன வேலைன்னு தேசபிதா வார்த்தையை தட்டாம இவங்களையும் கைவிட்டுட்டேன். நான் செஞ்சது தப்பா பாஸ்?
         பிரண்டுட்ட இதைப்பற்றி சொன்னபோது அவன் "நீ ஏன் வேட்பாளரை பார்க்கிற தலைவரைப் பாருன்னு சொன்னான்".
சரிதான்னு பார்த்தேன்.
கருணாநிதி- ஐயோ பாவம் அழகிரி, ஸ்டாலின், முத்து, கனிமொழி இவங்களே வேலையில்லாம கஷ்டப்படுறாங்க இவரு எங்க நம்மள பார்க்கப்போறாரு. அப்புறம் இவரு நடிகர் நடிகைகள் கூத்தடிப்பதை பார்ப்பதற்கே நேரம் போதாது அவரு சரிப்பட்டு வராது.
அம்மா ஜெயலலிதா- பாவம் நம்பர் ரெண்டு. இவருக்கும் சசிகலாவுக்கும் உள்ள பிரச்சனைல நாட்டை யாரு பார்க்கிறது. அப்புறம் துக்ளக் ஆட்சி மாதிரி என்னன்னவோ செஞ்சாங்க. கடவுளே இவங்க அப்பாயின்ட் மெண்டுக்காக காத்திருப்பதாக கேள்வி.
ராமதாஸ்- இவரு என் கட்சிக்கு குடும்பத்திலிருந்து யாராவது வந்தால் நடுத்தெருவில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்னு சொன்னாரு. சவுக்கு கிடைச்சா சொல்லுங்க பாஸ்.
விஜயகாந்த்- இரும்பு அடிக்கிற இடத்தில் 'ஈ'க்கு என்ன வேலைன்னு கேட்டா. இவரு நான் அயன் பாக்ஸ் வாங்கி கொடுத்தேன் சுண்டல்காரனுக்கு பிச்சை போட்டேன் அதனால நான் அரசியலுக்கு குடும்பத்தோட வாரேன்னாரு.அடங் கொய்யாலா சொந்த கல்யாண மண்டபத்தையே காப்பாத்த முடியல இவரு எங்க நாட்டை காப்பாத்த!விடு எஸ்கேப்...!
திருமா- ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை.இவரும் நல்லா ஊஞ்சல் ஆடுவாரு அம்மாவா, ஐயாவான்னு.
பி.ஜெ.பி- திடீர்னு எங்க ஊருக்கு செங்கல் வருதுன்னு ஒருத்தர் சென்னார். வீடு கட்ட போறிங்களான்னு கேட்டேன். இல்ல ராமர் கோயில் கட்ட நம்ம ஊருக்கு செங்கல் வருதுன்னாரு. இவங்க அரசியல் இன்னும் புரியல அதனால நல்லா புரிஞ்ச பிறகு ஓட்டு போடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
கம்யூனிஸ்ட்- இவங்க கொள்கையே புரியலை.கரும்பு கொள்முதல் விலையை அதிகரிக்கணும்னு கரும்பு விவசாயிகளிடம் பேசுவாங்க. அப்புறம் அரசிடம் சீனி விலையை குறைக்க சொல்வாங்க.இவங்க பேச்சை கேட்டா அரசு கள்ளநோட்டுதான் அடிக்கணும்.
சரத்குமார்- எனக்கு கொஞ்சம் நாட்டுப்பற்று அதிகம்.அதனால பாகிஸ்தானிடமிருந்து நாட்டை காக்க நம்மிடம் இருந்த மூன்று பேரில்(விஜயகாந்த்,அர்ஜூன்,சரத்)விஜயகாந்த
் அரசியலுக்கு வந்துட்டார். இப்ப சரத்தும் வந்துட்டா அப்புறம் அர்ஜூன் பாடு திண்டாட்டமாகி விடும். அதனால சித்தப்பாவையும்(லொள்ளு)விட்டுட்டேன்.
இப்ப சொல்லுங்க பாஸ்! யாருக்கு ஓட்டு போடலாம்.

2 comments:

Rex Harrison J said...

ஓட்டே போடாதீங்கப்பா , ஆனா பூத்துக்கு போய் உங்க விருப்பத்த பதிவு பண்ணுங்க
(49 o)
இங்க பாருங்க

http://besileya.blogspot.com/

பாலா.R said...

அட நீ வேற அங்க இருக்கிற தேர்தல் அதிகாரிகளுக்கே 49 o- னா என்னான்னு தெரியாது. யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லைன்னு வாக்கு பதிவு எந்திரத்தில் ஒரு பொத்தானை வச்சாங்கன்னா மக்களுக்கு 49 o பற்றி கொஞ்சம் விழிப்புணர்வு வரும்.

திரிபுவாதம்

     முதலில்  விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் " தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...