Sunday, January 11, 2009

புத்தகங்கள் மற்றும் நான்...





னக்கு பிடித்த புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்கள். எல்லோரையும் போல காமிக்ஸ் படிப்பதில் தொடங்கியது தான் எனது வாசிப்பு அனுபவம். பின்னர் பரந்து விரிந்து கையில் கிடைப்பதையெல்லாம் வாசிக்கும் மனோபாவம் வந்து விட்டது. சுஜாதா முதற்கொண்டு சுந்தராமசாமி வரை எனது வாசிப்பு உலகம் பரந்துபட்டது என நான் நினைத்து பெருமிதமடைந்த காலத்தில்தான் ஜே.ஜே சில குறிப்புகள் படிக்க ஆரம்பித்தேன். தூங்காத இரவுகளில் (பெரும்பாலும் அப்படித்தான்)ஜே.ஜே -வை பகுதியாகவோ அல்லது முழுவதுமாகவோ எத்தனையோ முறை படித்து வியந்திருக்கிறேன்.சில நிமிட பயணத்தில் சுந்தரராமசாமியை பார்த்து விடலாம் . அனால் அதற்கான தைரியம் இல்லை. சிறு வயதிலிருந்தே பயந்து வாழ்ந்திருக்கிறேன். இருட்டை கண்டு பயப்பட ஆரம்பித்தவன் தாத்தாவின் அதட்டலுக்கும் அடிக்கும் பயந்திருக்கிறேன்.யாருடனும் சேரவோ விளையாடவோ போனால் அடிதான். எனவே தனிமை எனக்கு மிகவும் பழகிவிட்டது. புத்தகங்களே துணை எனக்கு. அந்த பழக்கம் இன்றும் தொடர்கிறது. சுந்தரராமசாமியின் மறைவுக்குப்பின் தான் அவரது வீட்டிற்கு செல்ல துணிவு வந்தது. நான் எதுவெல்லாம் சிறந்த புத்தகமென நினைத்து படித்தேனோ அவையெல்லாம் குப்பைகள் என உணர ஆரம்பித்த போது எனக்காக எழுத சுந்தரராமசாமி இல்லை.அவரது ஒவ்வொரு வாக்கியங்களும் மிக அழகாக எடிட் செய்யப்பட்டிருக்கும் விதம் என்னை கவர்ந்தது.பின்னர் ஜெயமோகனின் எழுத்துலகம் என்னை வசீகரிக்கத்தொடங்கியது.அது போலவே எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்து நடையும் என்னை பாதித்தது. மெளனி, அசோகமித்திரன், விமலாதித்த மாமல்லன், வண்ணநிலவன், ஆ.மாதவன், யுவன் சந்திரசேகர் என நீண்ட வரிசை ....

No comments:

எஞ்சினியர்ஸ்.

                      ஒ ரு காலத்தில் கனவுப் படிப்பாக இருந்தது. சீட் கிடைப்பதே பெரும்பாடு. நுழைவுத் தேர்வு எழுதி பன்னிரெண்டாம் வகுப்பின் கட்...