Knowledge is good only if it is shared.

Sunday, September 28, 2008

நாயகர்கள்...


1.1 பில்லியன் பிரஜைகளின் வாழ்வின் போக்கை திர்மானிக்க தேசத்தின் தலைநகர கூடாரத்தில் 543 நாயகர்கள் தம் படைபரிவாரங்களுடன் வலம்வருகின்றனர்.அவர்களுக்குள் சித்தாந்த,கொள்கை,கூட்டணி சார்ந்து வேறுபாடுகளிருக்கலாம்,ஆனால் மக்கள் சேவையே பிராதனமென மார்தட்டிக்கொண்டு கடும் போட்டியினூடே அரங்கத்தில் வீற்றிருக்கும் அவர்களுள் சிலருக்கு துறை சார்ந்த அதிகார வட்டங்களும் தேச கட்டுமானத்திற்கு உதவுகின்றன.
60 ஆண்டுகளாக ஓயாமல் பேசி பெரும் தொகையை மக்களுக்காக ஒதுக்கீடுசெய்ய அவர்கள் காட்டும் முனைப்பு நம்மை வியப்பில் ஆழ்த்தும். நமக்காக அவர்கள் படும் துயரம் அவர்களை கதாநாயகர்களாக உயர்த்தும்.ஆனால் அதன் பின்னணியில் உள்ள சுயநலம் அடுத்த தேர்தலில் வாக்குகளை கவர இரவு பத்துமணிவரை குரல்கொடுக்க உதவும்.தங்கள் பாதுகாப்பிற்கனெ கணக்கிலடங்கா வீரர்களுடன் வலம் வருபவர்கள் ஊர் கோடியில் வாழும் குடிமகன் அவன் வாழ்விடத்தில் பாதுகாப்பின்றி போராடுவதை அறிந்தும் ஏதும் செய்யாமலிருப்பார்.ஜாதி,மத வேறுபாடுகளை பயன்படுத்தி,பிரித்தாளும் சூழ்ச்சியோடு வீர வசனங்களில் வாக்குகளை கவர்ந்து அடுத்த சில ஆண்டுகளுக்கு தனது பதவியை உறுதி செய்து வருமானத்தை பெருக்க ஆரம்பிக்கிறான்.
பன்னாட்டு நிறுவனமாகிக்கொண்டிருக்கும் ரோம் மற்றும் மெக்காவை தலைமையகமாகக்கொண்டவை தமது கொள்கையை பரப்பும் நோக்கத்தில் பிற நாடுகளில் தமது கிளைகளின் மூலம் மக்களை மதம்மாற்ற பெரும் பணத்தை பிற்போக்கு பழமைவாதிகளுக்கு அனுப்புகின்றனர்.அவ்வாறு பெறப்படும் பணம் கலவரத்தை உண்டுபண்ணுகிறது.அரபிக்கடலோர வர்த்தக நகர தாக்குதல் தொடங்கி அகமதாபாத் வரை அதன் கொடிய கரங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.அதன் குருதிப்பசி அடங்கிய பாடில்லை.உலகை ஒரே கொள்கையின் கீழ் (கடவுளின்)கொண்டுவருவார்களோ அல்லது ஒட்டுமொத்தமாக அனைவரையும் துடைத்தொழிப்பார்களோ தெரியவில்லை.அதன் எதிரொலியாக குஜராத்தில் ரத்தத்தின் மீதேறிநின்று கொக்கரிக்கிறார் கரசேவையாளர்.தன்னை பிற்கால பிரதமராக
பிரகடனப்படுத்திக்கொண்டவரும் அவருடன் இணைந்துகொள்கிறார்.செஞ்சட்டையாளரும் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மேற்குலகுடனான நமது தொடர்பை விமர்சிக்க காத்திருக்கிறார்.நமது தேச தலைநகர கொலுமண்டபத்தில் மேற்கூறியவர்களை அமரவைததின் பலனை நன்றாக அனுபவிக்கிறோம்.தீவிரவாதத்தை ஒடுக்க துப்பில்லாமல் சுயநலமாய் வீண்வார்த்தைகளில் வம்பளக்கும் அரசியலாளனை என்ன செய்யலாம்?

No comments:

திரிபுவாதம்

     முதலில்  விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் " தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...