Knowledge is good only if it is shared.

Saturday, September 20, 2008

போலிகள் ஜாக்கிரதை!இந்த கட்டுரையை எப்படி ஆரம்பிப்பது என தெரியவில்லை.எப்படி ஆரம்பித்தாலும் அது சம்பிரதாயமாகவே அமைந்துவிடுகிறது,எனவே நேரடியாகவே விஷயத்திற்கு வந்துவிடுவோம்.
உங்களுக்கு தெரிந்த தற்கால கவிஞர்களின் பெயர்களை ஞாபகப்படுத்திப் பாருங்கள்.நிச்சயமாக பாதிக்கு மேல் திரைப்பட பாடலை எழுதிய பாடலாசிரியனின் பெயராகவே இருக்கும்.ஒருவேளை முழுவதும் (என்ன முழுவதும் ,அதிகபட்சம் 10 பெயர்கள் தெரிந்திருக்கலாம்).திரைப்படபாடலாசிரியனின் பெயராகவே இருக்கும்.உண்மையிலேயே அவனும் கவிஞனும் ஒன்றா?
திரைப்பட பாடலாசிரியன் கவிஞன் என எப்படி பரிணாமம் பெற்றான்?.நம்முடைய அறியாமைதான்.பழைய விசயங்களை வேறுவடிவத்தில் நம்மிடையே அவன் அளிக்கும் விதத்தில் மயங்கி அவனது சொந்த சரக்குதான் என மகிழ்ந்து பட்டங்களையும், பணத்தையும் வாரி வழங்குகிறோம்.
சம்பந்தமே இல்லாத எதுகை மோனைகளை பயன்படுத்தி( ஆங்காங்கே ஒருசில வரிகள் தரமானதாய் இருக்கிறது.) வெட்கம்கெட்டு நானும் கவிஞன் என பல்லிளிக்கிறான்.அவனது ஆதார தகுதி மேலே சொன்னதுடன் முடிவதில்லை,அரசியல் மேடைகளிலே ஆளும் அல்லது ஆளப்போகும் அதிகாரவர்கத்தை மிகையாய் பாராட்டி புகழ்வதும் வரிகளை இரண்டுமுறை கம்பீரகுரலில் ஒப்புவிப்பதும் அதில் அடங்கும்.
இரண்டாயிரம் வருட பழமையான இலக்கிய வளமுடையது நமது மொழி. அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச்செல்லாமல் அறியாமை மக்களை அறியாமையிலேயே உழலச்செய்வதென்பது கொடுமையான விஷயம்.நமது இலக்கியங்களை திணை எனவும் ,அகம் என்றும்,புறம் எனவும் பிரித்த அழகியலான மொழிவளத்தை அற்பத்தனமாய், பணத்திற்காகவும் புகழுக்காகவும் கொள்ளையடித்து "ப்ளாஷ் மழையி"ல் நனைகிறான் கவிஞன் என்கிற திரைப்பட பாடலாசிரியன்.
பழைய இலக்கியங்களை நாம் முழுவதும் அறியாததால் வெகு எளிதாய் ஏமாற்றப்படுகிறோம்.நெடிய வரலாறுடைய நமது மொழியில் சமீப காலங்களில் ஏன் காலத்தை கடந்து நிற்கக்கூடிய படைப்புகள் அதிக அளவு வெளிவரவில்லை?
நாம் இன்னும் ,சினிமாவில் நடிகையின் இடுப்பைச்சுற்றி ஆடும் பாடலை எழுதுபவனை கவிஞன் என அங்கீகரிக்கும் அவல நிலையையிலிருந்து மாறவேண்டும்.சிற்றிதழ்கள் பலவற்றில் உண்மையான கவிஞனை எளிதில் கண்டுணரலாம்.அங்கே அவன் நமக்காக படைத்தளிக்கும் விஷயங்கள் பாசாங்கற்றதாய் இருக்கும்.
ஆனால் தற்போது வரிகளை ஒன்றன் கீழ் ஒன்றாய், வரிக்கு இரண்டு வார்த்தை வீதம் எதுகை ,மோனையோடு எழுதும் உரைநடைகளை அதன் வடிவம் சார்ந்து கவிதையென நம்பிவிடுகிறோம்.
எனவேதான் திரைப்பட பாடலாசிரியன் தைரியமாக நானும் கவிஞன்தான் என நம்முன் கொட்டமடிக்கிறான். எனவே போலிகள் ஜாக்கிரதை!

2 comments:

Sasi said...

புலவனுக்கும் உண்டு வயிறு. அவன் புத்தன் இல்லை. சித்தார்த்தன். அவனுக்கு இரவு நேரங்களில் பெரும்பாலும் காரைக்குடி , தேனீ , விருதுநகர் போன்ற இரண்டாம் கட்ட நகரங்களில் ஜோல்னா பைகளும் உடைசல் உருவங்களும் தாடிகளும் கூட்டும் இலக்கிய கூட்டங்களில் முழங்கி எழுத்து பிழையோடு கூடிய ஒரு படைப்பை வெளியிட்டு அல்லது பெற்றுக்கொண்டு மிச்சர் சுக்குகாப்பியோ அல்லது டாஸ்மார்க் பிராந்தியோ குடித்து விட்டு பேருந்து நிலையத்தில் மூத்திரம் பெய்துவிட்டு பஸ் பிடிக்க ஆர்வமில்லை.

எழுத்து தொடர வாழ்த்துக்கள்oooooo


வே. சசிவரதன்
மஸ்கட்

Nellaiappan said...

பாலா!
நிறைய எழுதுங்கள்.
என் வாழ்த்துக்கள்.
-nellaiappan.

திரிபுவாதம்

     முதலில்  விகடனின் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள். கட்டுரையில் " தேர்தலின்போதும் தேர்தலுக்கு முன்னதாகவும் பா.ஜனதாவுக்கு எதி...